Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அண்ணாமலை சொன்ன வார்த்தை, முத்து சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Episode Update 12-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா மீனாவிடம் மாப்பிள்ளை கோபப்பட்டு அனுப்பிட்டார் நான் வந்து பேசவா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்னால அவரை விட்டு இருக்க முடியாது அவராலையும் என்ன விட்டு இருக்க முடியாது கண்டிப்பா அவரே வந்து என்ன கூட்டிட்டு போவாரு இந்த விஷயம் சீதாவுக்கு தெரிய வேண்டாம் அவ மனசு கஷ்டப்படும் என்று சொல்ல, நாளைக்கு அவளுக்கே தெரியும் போது என்ன சொல்றது என்று சொல்ல அவளை கண்டுபிடிச்சா கண்டுபிடிச்சுகட்டும் என்று சொல்லி விடுகிறார். பிறகு சரி நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன் என்று சொல்லி கீழே போக மொட்டை மாடியில் மீனா யோசித்துக் கொண்டு இருக்கிறார்.

மறுபக்கம் முத்து போதையில் மொட்டை மாடிக்கு வர ரவி மற்றும் மனோஜ் இருவரும் குடித்துக் கொண்டிருக்கின்றனர் இங்க வந்து யாருக்கும் தெரியாமல் இரண்டு பேர் குடிச்சுகிட்டு இருக்கீங்க என்ன பார்த்த குடிகாரன்னு சொல்றாங்க உங்கள சொல்ல மாட்டேங்கிறாங்க என்று சொல்ல இப்ப என்ன அண்ணியை தேடி வந்திருக்கியா என்று கேட்க ஆமா இப்ப துணி காய போட வருவா என்று சொல்ல நீதான் அவங்கள அனுப்பிட்டியே எப்படி வருவாங்க என்று ரவி கேட்க ஆமால்ல என்கிட்ட சொல்லாமையே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வச்சுட்டா என்று சொல்ல மனோஜ் என்னென்ன விஷயத்தில் மறைச்சு இருக்காங்கன்னு தெரியலையே என்று சொல்லுகிறார்.

நீ போன் பண்ணி இன்னும் எத்தனை விஷயம் மறைச்சு இருக்குனு கேளு என்று சொல்ல முத்து மீனாவிற்கு ஃபோன் போட்டு என்கிட்ட இன்னும் என்ன விஷயம் மறைச்சு இருக்க என்று கேட்க அதற்கு மீனா முதலில் எதுவும் பேசாமல் போனை வைக்க முத்து விடாமல் ஃபோன் பண்ணிக் கொண்டே இருக்கிறார் ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு லிஸ்ட்டே இருக்கு இப்ப போதையில் இருக்கீங்க காலைல எழுந்து போன் பண்ணுங்க சொல்றேன் என சொல்லி போனை வைத்துவிட ரவி முத்துவிடமிருந்து போனை வாங்கி சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார். உடனே முத்து மனோஜிடம் நீ பார்லர் அம்மாக்கு போன் பண்ணி என்கிட்ட என்ன உண்மையா மறைச்சிருக்கான்னு கேளு என்று சொல்ல நான் ஏன் கேட்கணும் ரோகினி என்கிட்ட எதையும் மறைக்கவில்லை என்று சொல்ல முத்து சிரிக்கிறார். மீனா என்கிட்ட ஒரு விஷயத்தை தான் மறைச்சா ஆனா பார்லர் அம்மா எவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்து அப்பப்ப பிரச்சனையில் மாட்டி பொய் சொல்லிக்கிட்டு இருக்கு என்று சொல்லுகிறார். மனோஜ் போன் பண்ண சொல்ல மனோஜ் பண்ண முடியாது என சென்று விடுகிறார்.

மறுநாள் காலையில் முத்து எழுந்தவுடன் மீனா என்று கூப்பிட அண்ணாமலை வருகிறார் இப்பதான் உனக்கு தெரிஞ்சி இருக்கா நடந்ததெல்லாம் மறந்துட்டியா என்று கேட்க கொஞ்ச நேரம் யோசித்து விட்டு மீனா இல்லாததை தெரிந்து கொள்கிறார். பிறகு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வந்துவிட விஜயா மீனா காபி எடுத்துட்டு வா எல்லாருக்கும் என்று சொல்லுகிறார் உடனே அருணாச்சலம் உனக்கு என்ன ஆச்சு நீ எல்லாத்தையும் மறந்துட்டியா என்று சொல்ல அவரை விட்டுவிட்டு போயிட்டால்ல என்று விஜயா சொல்லுகிறார் உடனே ரோகினிடம் காபி போட்டு எடுத்துட்டு வா என்று சொல்ல அவர் எடுத்துக் கொண்டு வந்த காபி குடித்து பார்த்து நல்லாவே இல்லை என்பதால் அந்த வேலைக்காரியிடம் காபி போட கத்துக்க மாட்டியா இதெல்லாம் ஒரு காபியா வாயில் வைக்க முடியல என்று சொல்லுகிறார். அதற்கு முத்து என்ன சொல்லுகிறார்? விஜயாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 12-07-25
SiragadikkaAasai Serial Episode Update 12-07-25