SiragadikkaAasai Serial Episode Update 12-02-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிற்காக அக்கவுண்ட் ஓபன் பண்ணி கொடுத்து செக் புக் வாங்கி கொடுக்கிறார். அதில் நீ கொடுத்த காசையும் நான் அக்கவுண்ட்ல போட்டுட மீனா என்று சொல்லுகிறார் உடனே முதல் செக் யாருக்கு கொடுக்கப் போற என்று சொல்ல மீனா மாமாவுக்கு தான் என்று சொல்லுகிறார் உடனே அண்ணாமலை எனக்கு எதுக்கு நீங்க நல்லா இருந்தா போதும் என்னோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் என்று சொல்லுகிறார்.
உடனே மீனா ரவியும் சுருதியும் நம்மளுக்கு பணம் கொடுத்தாங்க அவங்களுக்கு திருப்பி கொடுத்துடலாம் என்று சொல்ல முத்துவும் நல்ல ஐடியா என்று சொல்லுகிறார். மீனா செக் எழுத போக மனோஜ் எழுதத் தெரியுமா என்று கேட்க அந்த அளவுக்கு படிச்சிருக்கான்னு சொல்லுங்க என்று மீனா பதிலடி கொடுக்கிறார். பிறகு மனோஜ் ரவியிடம் வட்டி போட்டு வாங்குடா என்று கேட்க ஸ்ருதி நாங்க என்ன பைனான்ஸ் கம்பெனியா நடத்திக்கிட்டு இருக்கோம் என்று கேட்க மனோஜ் பல்பு வாங்குகிறார். உடனே மீனா செக் போட்டுக் கொடுக்க அதனை சுருதியும் ரவியும் வாங்கிக் கொள்கின்றனர் இதனை போட்டோ எடுத்துக் கொண்டு சந்தோஷப்பட விஜயா கடுப்பாகி சென்று விடுகிறார்.
மறுபக்கம் ரோகிணி ஷோரூம் ஃபைல் பார்த்துக் கொண்டிருக்க அதில் லெட்டர் இருப்பதை எடுத்து பார்த்து ஜிஎஸ்டி கட்டாமல் இருப்பதால் மனோஜ் கூப்பிட்டு எதுக்கு இது கட்டாம வச்சிருக்க இதனால இவ்ளோ பெரிய பிரச்சினை வரும் தெரியுமா என்று சொல்ல மனோஜ் தெரியும் மறந்துட்டேன் என அசால்டாக பதில் சொல்லுகிறார். என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஜிஎஸ்டி ஆபீஸிலிருந்து அதிகாரிகள் வருகின்றனர். மக்கள் கிட்ட இருந்து வாங்கின வரிப்பணத்தை இன்னும் எதுக்கு கட்டாம இருக்கீங்க என்று கேட்க மனோஜ் மறந்துட்டோம் என்று சொல்ல நீங்க படித்தவர் தானே இப்படி பதில் சொல்றீங்க என்று சொன்ன உடனே ரோகினி மன்னிச்சிடுங்க சார் நாங்க ஒரு இடத்துல பத்து லட்சம் கொடுத்து ஏமாந்துட்டோம் உன்ன நான் கட்டிட்டு இருக்கோம் என்று சொல்ல அதெல்லாம் எங்களுக்கு தெரியாது நாங்க கடைக்கு சீல் வைக்க போறோம் ஜிஎஸ்டி கட்டிட்டு ஓபன் பண்ணி போங்க என்று சொல்ல ரோகினி அவர்களிடம் கெஞ்சி கேட்க அவர்கள் சரி இப்போதைக்கு நீங்க மூணு லட்சம் கொடுங்க மூணு மணி நேரம் கழிச்சு வந்து வாங்கிக்கிறோம் என்று சொல்லி செல்கின்றனர். ரோகிணி படத்தை எப்படியாவது ரெடி பண்ணனும் என்று மனோஜ் இடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மறுபக்கம் அண்ணாமலையை ஸ்கூலில் விட வந்த முத்து முன்னாடி எல்லாம் புதன்கிழமை மட்டும் போக இப்ப என்னப்பா அடிக்கடி வர சொல்றாங்க என்று கேட்கிறார். ஏதாவது வேலை இருந்தா தான் வர சொல்லுவாங்க நீ உன் வேலைய பாரு என்று அனுப்பி வைக்க, ரோகினியின் அம்மாவும், கிருஷ் இருவரும் ஸ்கூலுக்கு ஆட்டோவில் வந்து இறங்குவதை முத்து பார்த்து விடுகிறார். உடனே கூப்பிட்டு அவர்களுடன் நலம் விசாரிக்க லட்சுமி அதிர்ச்சி அடைகிறார். அந்த நேரம் பார்த்து ரோகினி போன் பண்ண முத்து கிருஷை கடைக்கு கூட்டிட்டு கொண்டு போவதாக சொல்லி செல்கிறார் அப்போது ரோகிணியின் போனை எடுத்த லட்சுமி முத்துவை சந்தித்த விஷயத்தையும் பேசிய விஷயத்தை சொல்ல டென்ஷனாக சரியாக விடு எனக்கு அதைவிட ஒரு பெரிய பிரச்சனை நான் சொல்ற இடத்துக்கு என்னோட நகையை எடுத்துட்டு வா என்று சொல்லி போனை வைக்கிறார். பிறகு முத்து வந்தவுடன் எனக்கு வேலை இருக்கு என்று சொல்லி லட்சுமி சென்று விடுகிறார்.
மறுபக்கம் முருகன் வித்யாவை வந்து சந்திக்க என்ன பேசுகிறார்? வித்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…