தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் அஜய் அப்பாவிடம் பேச வர அவர் உங்ககிட்ட பேச விருப்பம் இல்லை என கதவை சாத்தி விட முத்து மீனாவிடம் நாம் வேறு வழியில்லாமல் அவரை மனசு மாற வரைக்கும் இங்க இருந்து போகக்கூடாது என முடிவு எடுத்துவிட்டு வீட்டு வாசல் முன்னால் நிற்கின்றனர். கொஞ்ச நேரத்தில் அவர் காரில் இருந்து வேலைக்கு கிளம்ப நீங்க எதுக்கு இங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கின்றனர் முத்து அவரிடம் கெஞ்ச போக என்னால முடியாது என சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பிறகு இருவரும் ஒரு நாள் முழுக்க அங்கேயே காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மதியம் ஆகியும் யாரும் வராததால் அங்கேயே சாப்பாடு வாங்கி சாப்பிட்டு விட்டு உட்கார்ந்து கொண்டிருக்க அவரது மனைவி மேலே இருந்து பார்க்கிறார் பிறகு முத்து முத்து சவாரியும், மீனாவுக்கு பூ கொடுக்கும் வேலையும் இருக்க மாத்தி மாத்தி போன் வருகிறது ஆனால் அவர்கள் மற்றவர்களிடம் வேலையை சொல்லிவிட்டு இந்த வீட்டு முன்னே நிற்கின்றனர். பிறகு சாயங்காலமும் ஆக அங்கே ஒரு டீக்காரர் வர அவரிடம் டீ வாங்கி இருவரும் குடிக்கின்றனர். கொஞ்ச நேரத்தில் வேலையை முடித்துவிட்டு அஜய் அப்பா வீட்டுக்கு வருகிறார். நீங்க போகாம இங்கேதான் இருக்கீங்களா உங்கள தான் வீட்டுக்கு போக சொன்னேன் இல்ல என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் சென்று விடுகிறார்.
இருந்தாலும் முத்துவும் மீனும் அங்கே இருக்க பிறகு மாடிக்கு சென்று பார்க்கிறார். உடனே அவரது மனைவி உங்க ரெண்டு பேரும் காலையிலிருந்து இங்கே தான் இருக்காங்க என்று சொல்ல அவர் முத்து மீனாவை உள்ளே கூப்பிடுகிறார் பிறகு உட்கார வைத்து உங்களுக்கு என்ன பிரச்சனை போராட்டம் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா என்று கேட்க அப்படி எல்லாம் இல்ல சார் சின்ன பையனோட வாழ்க்கை சீர்திருத்த பள்ளிக்கு போடக்கூடாதுன்னு தான் நாங்க பேசிக்கிட்டு இருக்கோம் அவ லைஃபை கெட்டுப் போடும் சார் நாங்க இப்ப கூட ஹாஸ்பிடல்ல கவுன்சிலிங் கூட்டிட்டு போயிட்டு தான் வந்தோம் அவங்க அம்மாவோட பாசம் இல்லாம தான் அவன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கான் என்று கெஞ்சி பேசுகின்றனர்.
அதற்கு அஜயின் அப்பா சரி நான் நாளைக்கு ஸ்கூலுக்கு வர க்ரிஷ்க்கு ஒரு டெஸ்ட் வைக்கிறேன் அந்த டெஸ்ட்ல பாஸ் ஆயிட்டா நான் விட்டுறேன் இல்லனா கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க மாட்டேன் என முடிவு எடுக்கிறார் பெரு முத்துவும் மீனாவும் வேறு வழி இல்லாமல் கிரிஷ் பக்கம் நியாயம் இருக்கு கண்டிப்பா அவளை கடவுள் காப்பாற்றுவார் என்று நினைத்து விட்டு அங்கிருந்து வருகின்றனர். பிறகு ரோகிணி என்ன சொல்லுகிறார்? க்ரிஷ் முடிவு என்ன ?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
