Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பணத்தை ரெடி பண்ண போராடும் மீனா, முத்து கேட்ட உதவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Episode Update 10-03-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வீட்டிலிருந்து வெளியே போகும் முன் நம்ம மேல அன்பா இருக்கிறவங்கள எதிரில் வர சொல்லிட்டு போனா நல்லது நடக்கும் என்று சொல்ல அதற்கு முத்து எனக்கு என்னமோ அப்படி தோணுலப்பா என்று சொல்லிவிட்டு வீட்டில் பொண்டாட்டிய பாத்துட்டு போனா அதைவிட பிரச்சனை பெருசா வெளியே வந்துற போகுது அப்படின்னு தான் தோணுது என்று சொல்லிக் கொண்டிருக்க முத்துவின் பின்னால் அண்ணாமலை கண்ணை காட்டுகிறார். முத்து திரும்பி பார்க்க மீனா முறைத்துக் கொண்டிருக்க அண்ணாமலை இதுக்கு மேல நான் இங்கே இருக்க மாட்டேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார் உடனே மீனா கோபப்பட்டு முத்துவின் கையில் பேகை கொடுத்துவிட்டு கிச்சனுக்கு சென்று விடுகிறார்.

உடனே முத்து மீனாவை சமாதானப்படுத்த முத்தம் கொடுக்க மீனாவும் சமாதானமாகி முத்துவை வழியனுப்பி வைக்கிறார். மறுபக்கம் விஜயா மனோஜ் மற்றும் ரோகிணி இருவரையும் அங்க பிரதேஷ்னம் செய்ய சொல்ல மனோஜ் செஞ்சே ஆகணுமா என்று கேட்கிறார். ஆமாம் என்று சொல்ல இருவரும் செய்ய தொடங்குகின்றனர். முத்து அதே கோவிலில் வெளியே காரை நிறுத்திவிட்டு கஷ்டமருக்கு போன் போட்டு பேச அவர்கள் அரைமணி நேரத்தில் வருவதாக சொல்ல காத்திருக்கிறார். கொஞ்ச நேரத்தில் பார்வதி வர முத்துவை பார்த்து மனோஜை ட்ராப் பண்ண வந்தியா முத்து என்று கேட்க மனோஜ் இல்லையே என்று சொல்ல உள்ளதா வேண்டுதல் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று சொன்னவுடன் எனக்கு கொஞ்ச நேரம் ஆகும் சரி வாங்க டைம் பாஸ் ஆகும் உள்ள போகலாம் என்று அவரும் வருகிறார்.

விஜயா முத்துவை பார்த்து நீ எதுக்குடா இங்க வந்த என்று கோபப்பட பார்வதி நான் தான் கூட்டிட்டு வந்தேன் என்று சொல்லுகிறார். உடனே அங்க பிரதேஷ்னம் செய்ய தொடங்க முடித்துவிட்டு சாமி கும்பிடுகின்றனர். அங்கு இருக்கும் ஐயர் வேண்டுதல் பண்ணிட்டீங்களா இதுக்கு மேல எந்த பிரச்சனையும் இருக்காது சக்தி வாய்ந்த அம்மன் என்று சொல்ல, முத்து அப்படியா என்று கேட்டுவிட்டு நம்ம நினைக்கிறது நடக்கும் என சொல்லுகிறார் உடனே மீனாவிற்காக முத்து வேண்டிக்கொள்கிறார். மீனா நல்லபடியா அந்த ஆர்டரை செய்து முடித்தால் ஒரு பர்சன்ட் காசு உனக்கு கொடுக்கிறேன் என வேண்டிக் கொண்டு விட்டு சென்று விடுகிறார். மனோஜ் இது மாதிரி கூட வேண்டும் வாங்க என்று சொல்ல ஐயர் அதே மாதிரி சொல்ல அப்போ நம்மளும் ரெண்டு பர்சன்டேஜ் போடுவோம் என்று வேண்டிக்கொள்ளலாமா ரோகினி என்று கேட்க இல்ல 10% போடுவோம் என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் பேரில் அர்ச்சனை செய்து சாமி கும்பிடுகின்றனர்.

மறுபக்கம் மீனா பூ டெக்கரேஷன் செய்ய பணத்துக்காக பேங்கில் லோன் கேட்கிறார் ஆனால் மீனாவுக்கு எலிஜிபில் இல்லை என மறுத்து விடுகின்றனர் மீனா எவ்வளவு கெஞ்சி கேட்டோம் அவர்கள் ரூல்ஸ் சொல்ல மீனா வேறு வழியில்லாமல் வெளியில் வந்து விடுகிறார். உடனே அங்கு இருக்கும் நபர் வெளியில் வந்து மீனாவை கூப்பிட்டு உன்ன பாத்தா நேர்மையான பொண்ணு மாதிரி தெரியுது இதுல ஒரு பைனான்சியர் நம்பர் இருக்கு என்று ஒரு லிஸ்டிங் கார்டு கொடுத்து அங்கே போய் பார்க்க சொல்லுகிறார் மீனாவும் வட்டி அதிகமாக இருக்காதா என்று கேட்க பேங்க்ல என்ன வாட்டியோ அதே தான் கொடுப்பார் அவரும் நல்லவர் தான் நல்லவர்களுக்கு ஹெல்ப் பண்ண தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்காரு என்று சொல்ல மீனா கிளம்ப போக அந்த நேரம் பார்த்து சத்யா வருகிறார். நீ எங்கடா இங்க என்று கேட்க பேங்க்ல வேலை செய்றவங்களுக்கு புட் ஆர்டர் பண்ணி இருக்காங்க என்று சொல்லிவிட்டு வந்த விஷயத்தை சொல்ல சரி நான் இந்த ஃபுட் கொடுத்துட்டு வந்துடறேன் நானும் வரேன்னு சொல்லுகிறார் நீ உன் வேலையை பாரு சத்யா என்று சொல்ல இதோட அவ்வளவுதான் நான் கொடுத்துட்டு வரேன் என்று உள்ளே போகிறார்.

ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் ரெஸ்டாரண்டில் இருக்க முத்து போன் போட்டு மீனா லோனுக்காக அலைஞ்சுகிட்டு இருக்கா அவ வாயை திறந்து ஹெல்ப் கேக்க மாட்டார் அப்படி ஏதாவது லோன் கிடைக்கலைன்னா கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க என்று சொல்ல அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம் நீ பத்திரமா போயிட்டு வா என்று சொல்லி போனை வைக்கின்றனர். உடனே ரவி மீனாவிற்கு ஃபோன் போட்டு பணம் கிடைத்ததா என்று விசாரிக்க பேங்கில் வரி கட்டணும்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல நீங்க அதெல்லாம் யோசிக்காதீங்க என்று சுருதி சொல்லுகிறார் உங்களுக்கு எப்ப வேணுமோ வந்து வாங்கிக்கோங்க என்று சொல்ல நான் இப்போ ஒரு பைனான்ஸ் தான் பார்க்க வந்தேன் அவர்கிட்ட பணம் கிடைச்சுரும்னு நம்பிக்கை இருக்கு நான் பேசிட்டு போன் பண்றேன்னு என போனை வைக்க ரவி ஸ்ருதிக்கு நன்றி சொல்லுகிறார்.நீ மீனா அண்ணிய கூட பொறந்த சிஸ்டர்ரா தான் பாக்குறேன் ஆனா இந்த காலத்தில கூட பிறந்த சிஸ்டருக்கே உதவ மறுக்கிறாங்க ஆனா நீ ஹெல்ப் பண்றது எனக்கு இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சு கொடுத்து வச்சிருக்கணும் என்று கொஞ்சுகிறார்.

மறுபக்கம் மீனா பைனான்ஸ்காரை பார்க்க வர என்ன நடக்கிறது?அவருக்கு பணம் கிடைக்கிறதா? இல்லையா? மீனா என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 10-03-25