Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்து போட்ட பிளான், மனோஜ் சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikkaaasai serial episode update 06-10-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மகேஸ்வரியின் கணவருடன் சேர்ந்து இன்னொரு ஷோரூம் ஆரம்பிக்கப் போவதாகவும், ஷோரூம் எல்லாம் அவர்தான் வாங்க போறாரு நான் வெறும் டீலருக்காக சப்போர்ட் பண்ண போறேன் என்றும் சொல்லுகிறார் இவர்கள் இந்த விஷயம் பற்றி பேசிக்கொண்டு இருக்க ரோகிணி நான் தான் இதை எல்லாத்தையும் பிளான் பண்ணி பேசி இருக்கேன் என்று சொல்ல நீ ஒன்னும் இல்லாம தானே வந்த இதெல்லாம் பண்ண வேண்டியது தான் என்று சொல்ல அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார் ஒருத்தர் நல்ல விஷயம் சொல்லும்போது அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி தான் பேசுவியா என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனா வருகிறார் அண்ணாமலை என்ன ஆச்சும்மா எல்லாம் ஓகேவா என்று கேட்க கடையை வெளியே எடுக்கறதுக்கான எல்லாம் முயற்சியும் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம் மாமா சீக்கிரமா வெளிய எடுத்து விடலாம் என சொல்லுகிறார் பிறகு முத்து மீனாவின் முகத்தைப் பார்த்து என்ன ஆச்சு என்ன பிரச்சனை வேற ஏதாவது ப்ராப்ளமா என்று கேட்க ஆமாங்க என்னோட வண்டியை காணோம் என சொல்லுகிறார்.

எங்க விட்ட என்று கேட்க கோவில் வாசலில் தான் விட்டேன் ஆனால் காணும் என சொல்லுகிறார் உடனே விஜயா இவளுக்கு எப்ப பாத்தாலும் எதையாவது ஒன்னு தொலைக்கறது தான் வேலை முதலில் பணத்தை தொலைச்சிட்டு வந்து நின்னா இப்போ வண்டியை தொலைச்சிட்டு வந்து நிக்கிறா என்று சொல்லுகிறார். உடனே ராசி இல்லாதவன் என்று மீனாவை சொல்ல உடனே முத்து தேவ இல்லாம அவங்கள பேச வேணாலும் சொல்லுப்பா என்று சொல்லுகிறார் உடனே அண்ணாமலை உனக்கு எந்த நேரத்துல எது பேசினாலும் தெரியாத விஷயம் என்று கேட்கிறார். உடனே கொஞ்ச நேரத்தில் ரவியும் ஸ்ருதியும் வர மீனாவிடம் நீங்க ஆள் இல்லாத நினைச்சா மீனா உங்க வண்டி கீழே இல்லை என்று கேட்க ரோகினி அவங்க வண்டி தொலைஞ்சிடுச்சு என்று சொல்லுகிறார் உடனே மீனாவுக்கு ஆறுதல் சொல்ல ரவி எப்படிடா தொலைஞ்சது என்று கேட்டுவிட்டு தொழில் எதிரி யாராவது ஏதாவது பண்ணி இருப்பாங்க என்று சொல்ல உடனே மனோஜ் இவங்க செய்யறதுக்கு பேரு தொழிலை எதிரி இதற்கு எதிரி வேறயா யாராவது திருட்டு பசங்க தான் எடுத்துட்டு போயிருப்பாங்க என்று சொல்ல முத்து நீ கரெக்டா தாண்டா சொல்லுவ ஏன்னா நீயே காசு திருடிட்டு போனவன் தானே அமைதியாக இருந்துவிடு என்று சொல்ல ரோகிணி எதுக்காக சேர்த்து தரையில் சென்று அழைத்துச் செல்கிறார்.

உடனே சுருதி கவலைப்படாதீங்க மீனா வண்டி கெடச்சிடும் அப்படி இல்லன்னா புது வண்டி கூட வாங்கிக்கலாம் என்று ஆறுதல் சொல்லுகிறார் பிறகு கிச்சனுக்கு வந்த மீனா வருத்தப்பட்டு கொண்டு இருக்க கவலப்படாத மீனா வண்டி தானே கண்டுபிடிச்சிடலாம் என்று ஆறுதல் சொல்லுகிறார் மறுநாள் காலையில் கார்ப்பரேஷன் ஆபீஸரை முத்து அழைத்து வந்து வழக்கம் போல் அந்த டீக்கடையில் செல்வத்திடம் பேச வைத்து பணத்தை கொடுக்க அந்த நேரம் பார்த்து கார்ப்பரேஷன் ஆபீஸர் எல்லாத்தையும் கவனித்து விடுகிறார்.

உடனே அவரிடம் வந்து எதுக்காக இப்போ அவர்கிட்ட இருந்து ஒரு கவர் வாங்கினீங்க என்று கேட்க டாக்குமெண்ட் பேப்பர் என்று சொல்லின் நாடகம் போடுகிறார் உடனே எடுங்க என்று சொல்ல மீதி உண்மை எல்லாம் தெரிய வருகிறது பிறவி இதற்கெல்லாம் காரணம் சிந்தாமணி தான் என்று உண்மையை அந்த கோவில் மேனேஜர் சொல்லிவிடுகிறார் இது மாதிரி யார் காசு கொடுத்து பண்ணாலும் பண்ண சொல்லிடுவீங்களா அப்புறம் எப்படி மக்களுக்கு நம்ம மேல ஒரு நம்பிக்கை வரும் என்று திட்டி விட்டு உங்க மேல விசாரணை கமிஷன் கொடுக்கப் போறேன். நீங்க அங்க வந்து பதில் சொல்லிக்கோங்க என்று சொல்லிவிட்டு அனுப்பி விடுகிறார். பிறகு முத்துவிடம் நீ ரொம்ப நல்ல வேலை பண்ணியிருக்கப்பா நீ வீட்டுக்கு வந்து இவர் மேல ஒரு கம்ப்ளைன்ட் கடையை திருப்பி கொடுக்கணும் என்ற மாதிரி ஒரு ரெப்ரிஸ் லெட்டர் எழுதி கொடு நான் உங்க கடையை திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சொல்ல முத்துவும் செல்வமும் சந்தோஷப்படுகின்றனர்.

பிறகு முத்து கார்ப்ரேஷன் ஆபீஸ் வீட்டுக்கு வர அவரது மனைவி உட்கார வைக்கிறார் என்று சொன்னதெல்லாம் கரெக்ட்டு தான் இவங்க மேல எந்த தப்பும் இல்ல உட்காருப்பா என்று சொல்லிவிட்டு அந்த லெட்டரை கொடுத்து கையெழுத்து போட சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து அருண் வர வெளியில் இருந்த ஆஃபீஸரிடம் என்ன பேசுகிறார்? அதற்கு அவரின் பதில் என்ன? முத்து என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 06-10-25