தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா அழுது கொண்டிருக்க,மனோஜ் தான் காரணம் என சொல்லி முத்துவும் ரவியும் மனோஜை கூப்பிடுகின்றனர். உன்னால தான் அம்மா அழுதுகிட்டு இருக்காங்க எதுக்கு அம்மாவை வெளியே போக சொன்ன என்று சொல்ல மனோஜ் நான் கோவமாக சொல்லல அந்த நேரத்துல டென்ஷனா இருந்தது என்று சொல்லுகிறார். ஆனால் விஜயா அப்போதும் மனோஜுடன் பேசாமல் அழுது கொண்டே இருக்க முத்து எத்தனை நாள் என்னை சின்ன வயசுல மாட்டிவிட்டு பனிஷ்மெண்ட் செய்ய வைத்திருப்ப முட்டி போடு என்று சொல்லுகிறார்.
இது என்ன சின்ன புள்ளத்தனமா இருக்கு என்று ஸ்ருதி கேட்க ஆமா சின்ன வயசுல இருந்து யாரு தப்பு பண்ணாலும் அம்மா முட்டி போட வைப்பாங்க நானும் முத்து வந்த அதிகமா போட்டிருக்கும் என்று சொல்லுகிறார் உடனே சொல்லி உடனே முட்டி போட ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இவங்க என்ன இப்படி அழுதுட்டு ட்ராமா பண்றாங்க என்று யோசிக்கிறார். மனோஜிடம் எழுந்திரு மனோஜ் என்று ரோகினி சொல்ல எல்லாம் உன்னால தான் என்று சொல்லி கோபப்படுகிறார் எங்க அம்மா மனசு மாற வரைக்கும் நான் எழுந்திருக்க மாட்டேன் என்று இருக்க உடனே விஜயா மனோஜ் எழுந்திருக்க சொல்லுகிறார். நீங்க சிரிங்கமா அப்பதான் எழுந்திருப்பேன் என்று சொல்ல விஜயாவும் மனம் மாறி விடுகிறார்.
உடனே மனோஜிடம் நீ என் புள்ள எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று சொல்லிவிட்டு தாயத்து வேலை செய்து என்று நினைத்து விட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் உள்ளே சென்றதும் மனோஜ் சின்ன விஷயத்துக்கு ஓவரா டிராமா பண்றாங்க என்று விஜயாவை பற்றி சொல்ல ரோகினி தாயத்து வேலை செய்து என நினைத்துக் கொள்கிறார். சிந்தாமணி பார்வதி வீட்டுக்கு வர, பார்வதியும் விஜயாவும் காபி குடித்துக் கொண்டிருக்க என்ன மாஸ்டர் பசங்க யாரும் வரல போல என்று சொல்லிவிட்டு கேள்விப்பட்டீங்களா உங்க பையன் இன்கம் டேக்ஸ் ஆபிஸர் மாதிரி கெட்டப் போட்டு எங்க வீட்ல இருக்குற பணத்தை எடுத்துட்டு போயிட்டாங்க என்று சொல்லுகிறார்.
உடனே பார்வதி உங்க வீட்டு பணமா என்று கேட்க அந்த பணத்தை தான் என்று சிந்தாமணி சமாளிக்க விஜயா பொண்டாட்டியோட பணத்தை திருடிட்டு போனா புருஷன் கண்டுபிடிக்க தான் செய்வான் என்று முத்து,மீனாவுக்கு ஆதரவாக பேசுகிறார் நீங்க சொன்னதுனால தான் மாஸ்டர் என்று சொல்ல நான் என்ன சொன்னேன் ஆர்டர் கிடைக்காம பார்த்துக்கணும்னு சொன்ன ஆனா அவ கிட்ட இருந்து பணம் திருட சொன்னனா கைய உடைக்க சொன்னனா என்று கேட்க சிந்தாமணி முழித்துக் கொண்டு நீங்கதான ஒரு டெக்கரேஷன் இருக்க கூடாதுன்னு சொன்னீங்க என்று ஆரம்பிக்க உடனே கோபப்பட்ட விஜயா எழுந்திருத்து வந்து அதுக்கு அவள பணத்தை திருடி அவ மேல வண்டியை ஏத்த சொன்னனா நீங்கதான் இதை பண்ணுங்க எங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு அதுவும் என் வீட்டுக்காரர் என்ன ரொம்ப திட்டிட்டாரு இதுக்கு மேல உங்களுக்கு இங்க டான்ஸ் கத்து கொடுக்க முடியாது நீங்க இப்பவே இங்க இருந்து போங்க என்று சொல்லுகிறார் என்ன மாஸ்டர் இப்படி பேசுறீங்க நான் சலங்கை பூஜை பண்ணலாம்னு இருந்தேனே என்று சொல்ல இதுக்குள்ள சலங்கை பூஜையா இப்படி அவசர படங்களுக்கு என்னால சொல்லிக் கொடுக்க முடியாது என்று உறுதியாக சொல்லுகிறார்.
மீனா எனக்கு ஆகாத மருமக தான் ஆனா இனிமே அவ தொழில கெடுக்கிற மாதிரி எதுவும் பண்ணாதீங்க அப்புறம் முத்து உங்களை சும்மா விட மாட்டான் என்று சொல்ல சிந்தாமணி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு யாரு நம்பர்னு தெரியல என்ன இருந்தாலும், அவ உங்க வீட்ல ஒரு ஆளு என்று சொல்லிவிட்டு நான் கிளம்புறேன் என சொல்லு கிளம்புகிறார். பார்வதி விஜயாவை ஆச்சரியமாக பார்க்க மீனாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசுவியா விஜயா என்று கேட்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல என் வீட்டுக்காரர் எதிரி அதிகம் இருந்தால் சீக்கிரமாக முன்னேறி வந்துருவாங்கன்னு அதனாலதான் அவளுக்கு எதிரி இருக்க கூடாதுன்னு நினைச்சேன் ஆனால் தான் இவ்வளவு தொரத்தி விட்டேன் என்று சொல்ல என் புத்தி மாறுமா என்று நினைத்துக் கொண்டு சென்று விடுகிறார் மறுபக்கம் சிட்டி ஜெயிலில் இருந்து வந்துவிட முத்துவை பழிவாங்க வேண்டும் என்று கோபமாக இருக்கிறார்.
பிறகு மீனா சந்திராவின் பூக்கடைக்கு வர அவர்கள் என்ன பேசி கொள்கின்றனர்? மீனாவின் கேள்வி என்ன? சீதா என்ன பதில் சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க தெரிந்து கொள்வோம்.
