க்ரிஷ் பாட்டி சொன்ன வார்த்தை, கோபப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் பாட்டி ரோகினியை உங்க அப்பாவோட தேவசத்துக்கு நீ தீபாவளிக்கு ஊருக்கு வந்ததாகவும் என்று சொல்லிருச்சும் கட்டாயப்படுத்தி கூப்பிடுகிறார் பிறகு ரோகிணி வேறு வழியில்லாமல் நாங்களும் ஊருக்கு தான் வரோம் சரி நான் வரேன் என்று சொல்லுகிறார் பிறகு மகேஸ்வரியையும் நீயும் கூடவா என்று சொல்ல நானே சொல்லலாம் இருந்தேன் அவர் மீட்டிங்கு வெளியே போறாரு நான் மட்டும் தனியா தான் இருப்பேன் அதனால நானும் வரேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் முத்து கார் செட்டில் பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து முருகன் வருகிறார் பிறகு அவரிடம் பேசிவிட்டு நலம் விசாரித்த பிறகு முருகன் எங்களுக்கு தெரிஞ்ச சொந்தக்காரங்க ஒருத்தவங்க வந்திருக்காங்க அவங்களுக்கு 45 வயசாகுது ஆனா இன்னும் குழந்தை பிறக்கல அதுக்காக ட்ரீட்மெண்ட் எடுக்கறதுக்கு வந்து இருக்காங்க அவங்கள நீங்க எங்க கூட்டிட்டு போனோமோ பத்திரமா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரணும் நீ உங்ககிட்ட சொன்னா கரெக்டா இருக்கும் நீங்க கரெக்டா பாத்துப்பீங்க அதனால தான் உங்க கிட்ட சொன்னேன் என்று சொல்ல அதுக்கு என்னடா இருக்கு பாத்துக்கிட்டா போது என்று முத்து சொல்லுகிறார்.

உடனே முருகன் கிளம்பியவுடன் செல்வத்திடம் எப்படியும் ரெண்டு மூணு நாளைக்கு இந்த சவாரி இருக்கும் ஊருக்கு போறதுக்கு பிரச்சனை இருக்காது என்று பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து முத்துவுக்கு செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியின் உறவினர் போன் போட்டு பார்ட்டிக்கு உடம்புக்கு முடியல அவங்க படுத்த படுக்கையா இருக்காங்க மீனா பேரு சொல்லிக்கிட்டே இருக்காங்க நீங்க வந்து போறீங்களா என்று கேட்க எனக்கு இப்பதான் சவாரி வந்து இருக்கு மீனா அனுப்புறேன் நானும் கண்டிப்பா வந்து பார்க்கிறேன் என சொல்லி போனை வைக்கிறார் உடனே மீனாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி நீ போய் பாரு மீனா நான் சவாரி முடிச்சுட்டு வரேன் என்று சொல்லி போனை வைக்கிறார். பிறகு ரோகினியை மகேஸ்வரி வீட்டுக்கு க்ரிஷ் பாட்டிவர சொல்ல என்ன விஷயம் என்று கேட்கிறார் சொல்றேன்னு கோவப்படாத கிரிஷ் ஓட அப்பாவோட அண்ணனும் அவங்க பொண்டாட்டியும் பேசினாங்க என்று சொல்ல உடனே ரோகிணி கோபப்படுகிறார்.

இப்ப எதுக்கு அவங்க பேசுறாங்க அவங்க சொந்தமே வேணான்னு உதறி தானே வந்துருக்கேன் இப்ப எதுக்கு பின்னாடியே வராங்க என்று டென்ஷன் ஆக பேசுகிறார் அவர்களுக்கு குற்ற உணர்ச்சியா இருக்குடி அவங்களுக்கு இன்னும் குழந்தையே பொறக்கல உனக்கு பண்ணது நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டு பேசுனாங்க உன்னோட நம்பரையும் கேட்டாங்க அதனால இன்று ரோகினி கேட்க நம்பரை கொடுத்துட்டேன் என்று சொல்லுகிறார். நீ எதுக்குமா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க இப்படி தான் என் வாழ்க்கையில தப்பு தப்பா முடிவெடுத்துக்கிட்டு இருக்க என்று கோபப்பட அந்த நேரம் பார்த்து அவர்கள் போன் பண்ணுகின்றனர். அவர்கள் தான் முருகன் சொன்ன சொந்தக்காரர்கள் என தெரிய வருகிறது. போன் போட்டு ரோகினி இடம் வருத்தப்பட்டு அழுது பேசுகின்றனர் நீ மாசமா இருக்கும்போது உங்க வீட்டை விட்டு வெளியே துரத்துனது பாவத்தினால் தான் எங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கல என்று சொல்லிவிட்டு நீ கிருஷ் கூட்டிட்டு வா நான் உங்களுக்கு செய்ய வேண்டிய செய்கிறேன் என்று சொல்ல நீங்க யாரும் எதுவும் செய்ய வேணாம் என் பையன எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும் என்கிட்ட போன் பண்றது முதல்ல விட்டுடுங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார். இன்னும் கல்யாணிக்கு நம்ம மேல இருக்கிற கோபம் போகல எப்படி போகும் நம்ம பண்ண பாவம் அப்படி எல்லாம் ஒரு நாள் சரியாகும் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து காலிங் பெல் சத்தம் கேட்கிறது.

இவர்கள் திறந்து பார்க்க முருகனும் வித்யாவும் வருகின்றனர் முத்துவும் வர முதலில் முருகன் முத்துவை அறிமுகப்படுத்தி இவர்தான் உங்கள கூட்டிட்டு போவாரு என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க சரி நான் உங்களுக்கு போய் டீ காபி போட்டு எடுத்துட்டு வரேன் என்று சொல்லி உள்ளே போக வித்தியாவும் அவருடன் செல்கிறார்.கல்யாணம் ஆயிடுச்சா அம்மா இவ்வளவு நாள் ஆகுது என்று கேட்க ஒரு மாசம் என்று சொல்லுகிறார் உடனே குழந்தை பெற்றுக்கொள்மா என்ன இப்படி சொல்றதுன்னு நினைக்காத எனக்கு 15 வருஷம் ஆகி குழந்தை இல்லாம இருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு என்று சொல்லிவிட்டு அதுவும் இல்லாமல் என் வீட்டுக்காரரோட அண்ணன் வைஃப் கல்யாணி என்ற பொண்ணு பிரக்னண்டா இருக்கும்போது நாங்க வீட்டை விட்டு துரத்திட்டோம் என்று சொல்ல கல்யாணி என்ற பெயரை வித்யா கேட்டவுடன் அவருக்கு சந்தேகம் வருகிறது உடனே போட்டோவை காட்ட ரோகிணி தான் என தெரிய வருகிறது. வெளியில் வந்து முத்து முருகனுக்கு சொந்தக்காரங்க நான் எங்களுக்கும் சொந்தக்காரங்க தான நான் பத்திரமா பாத்துக்கிறேன் என்று சொல்லுகிறார் உடனே மகேஸ்வரி வீட்டுக்கு வந்த வித்யா ரோகினி இடம் என்ன சொல்லுகிறார்? அதற்கு ரோகிணியின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 05-11-25
jothika lakshu

Recent Posts

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட நடிகை ஜோதிகா..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜோதிகா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா.…

2 hours ago

குடும்பத்தினரிடம் உண்மையை சொல்லப்போன மீனா, கண்ணீர் விட்டு கெஞ்சிய ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…

5 hours ago

ரேங்கிங் டாஸ்க்கில் பார்வதி செய்த வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

5 hours ago

Kanaga Lyrical Video

Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…

6 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, மாதவி பேசிய பேச்சு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

8 hours ago

வாட்டர் மெலன் ஸ்டார் சொன்ன வார்த்தை, கானா வினோத் கொடுத்த பதில், வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

8 hours ago