siragadikkaaasai serial episode update 05-01-26
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து எனக்கு கிரிஷ் மேல சந்தேகமாக இருக்கு ஒரு அம்மா இறந்த கவலை கூட அவனுக்கு இல்லை அவன் என்னமோ அம்மா கூட இருக்கிற மாதிரியே இருக்கா அதுவும் இல்லாம மனோஜ் அப்பான்னு கூப்பிடறான் என்று சொல்ல மீனா அவரும் அமைதியா தான இருக்கார் என்று சொல்ல எனக்கு சந்தேகமே அதில்தான் அவன் அந்த மாதிரி ஏத்துக்கிற ஆள் கிடையாது நீ அப்பா சொன்ன மாதிரி க்ரிஷ் பாட்டிக்கு போன் பண்ணி கேளு அவங்க கிட்ட கேட்டா எல்லாம் உண்மையும் தெரியும் என்று சொல்ல மீனா போன் பேச சொல்கிறார்.
பிறகு மொட்டை மாடியில் மீனா இருக்க ரோகினி வந்து எதுக்கு மீனா போன் பண்ணி மேல கூப்பிட்டீங்க என்று கேட்க நீதான் அமைதியா இருக்க என்னால அப்படி இருக்க முடியல கிரிஷ் மேல எல்லாருக்கும் சந்தேகம் வந்துடுச்சு மாமாவுக்கும் சோகமாவே இல்லன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாரு அவங்க பாட்டிய வர வச்சு பேசணும்னு சொல்லி இருக்காங்க என்று சொல்ல உடனே கிரிஷ் இருக்கிறது கஷ்டமா இருந்தா சொல்லுங்க மீனா நான் அம்மா வர வச்சு அனுப்பி விடுறேன் என்று சொல்ல அப்போ கூட நீ உண்மைய சொல்றதா இல்ல இல்ல என்று சொல்லி கோபப்படுகிறார்.
இந்த குடும்பத்துகிட்ட இருந்து நான் உண்மையை மறைத்து குற்ற உணர்ச்சில தவிச்சுக்கிட்டு இருக்கேன் இதுவே கடைசி உனக்கு ஏழு நாள் தான் டைம் அதுக்குள்ள நீ உண்மைய சொல்லலைன்னா நான் எல்லாம் உண்மையும் சொல்லிடுவேன் என்று வார்னிங் கொடுத்துவிட்டு சென்று விடுகிறார். கீழே வந்த மீனா அண்ணாமலை மற்றும் முத்துவிடம் க்ரிஷ் பாட்டிக்கு இன்னும் கொஞ்சம் வேலை தான் இருக்கா இன்னும் ஏழு நாள்ல வந்துருவேன் என்று சொல்லி இருக்காங்க என்று சொல்ல ரோகினி அதிர்ச்சி அடைகிறார் உடனே ரூமுக்குள் சென்றவுடன் மனோஜ் இன்னும் ஏழு நாள் தான் இருக்கு என்று சொன்னவுடன் ரோகிணி என்ன ஏழு நாள் என்ன ஆச்சு என்ன என்று பதற்றத்துடன் கேட்க நம்ம ரெஸ்டாரன்ட் தொடர்ந்து ஒரு வருஷம் ஆகுறதுக்கு இன்னும் ஏழு நாள் தான் இருக்கு என்று சொல்லுகிறார் உடனே ரவி மற்றும் சுருதி இருவரும் ரூமுக்குள்ள இருந்து வெளியில் வந்து அவர்களும் இன்னும் ஏழு நாள் தான் இருக்கு என்று சொல்ல மனோஜ் சத்தம் கேட்டு வந்து உங்களுக்கு என்ன ஏழு நாள் இருக்கு பர்த்டே என்று கேட்க இல்லை என்னோட ஹோட்டல் திறந்து நூறு நாள் வரதுக்கு என்ன ஏழு நாள் தான் இருக்கு என்று சொல்லுகிறார் உடனே ரோகினி இன்னைக்குன்னு பார்த்து 7 7 ஏழாயிரம் தடவை சொல்றாங்க என்று மனதில் நினைக்கிறார்.
உடனே முத்து மீனா வந்து நாளைக்கு ஏழாம் தேதி அம்மாவோட பிறந்தநாள் என்று சொல்ல நம்ம நாளைக்கு போய் விஷ் பண்ணிட்டு வந்துருவோம் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர். மறுநாள் காலையில் சத்யா வீட்டில் பலூன்களை ஒட்டிக்கொண்டு இருக்கிறார். கொஞ்ச நேரத்தில் முத்துவும் மீனாவும் வர அவர்கள் சந்திராவுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு புடவையும் காசும் கொடுக்கின்றனர் எதுக்கு இதெல்லாம் எனக்கு பிறந்தநாள் என்று கேட்க நீங்கள் எவ்ளோ சாதிச்சு இருக்கீங்க என்று முத்து பெருமையாக பேச சந்திரா கண்கலங்குகிறார்.
உடனே அருண் சீதாவும் வர அவர்களும் புடவையும் கம்மலும் வாங்கி கொடுக்க சந்திரா சந்தோஷப்படுகிறார். கொஞ்ச நேரத்தில் ரோகினி மகேஸ்வரி வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல மகேஸ்வரி மீனாவுக்கு போன் போட அவர் என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI
Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…
Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…