சத்யாவை வெளுத்து வாங்கிய விஜயா, அதிர்ச்சியில் மீனா குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று செலவழிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி விஜயாவிடம் வீடியோவை காட்ட விஜயாவிற்கு உண்மைகள் தெரிய வருகிறது. இதனால் உச்சகட்ட கோபத்தில் விஜயா மீனாவின் வீட்டிற்கு ரோகிணியையும் கூட்டி வருகிறார். சத்யா வண்டியில் வந்து கொண்டிருக்க வழிமறித்த சிட்டி உன்ன பத்தின வீடியோ தான் பரவிக்கிட்டு இருக்கு என்று காட்ட இது நீதான் பண்ணி இருப்ப என்று சொல்லுகிறார். அப்படின்னா நான் எப்பயோ பண்ணி இருக்கணும் இது உங்க மாமா தான் பண்ணி இருக்கான் என்று சொல்ல அவர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு அவர் போன் மிஸ் ஆயிடுச்சு அதிலிருந்து யாரோ எடுத்து ஷேர் பண்ணி இருக்காங்க அதை நீ பண்ணி இருப்ப என்று உறுதியாக சொல்ல இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்ல நீ என்கூட வந்து சத்யா என்று சொல்ல இந்த ஒரு வீடியோக்காக எல்லாம் உன்கூட வந்துருவேன்னு நினைக்காத என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

பிறகு போன் வாங்கியதை சீதாவிடம் காண்பித்து குடும்பத்தினர் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். உடனே சத்தியா வீட்டுக்கு வந்து பழைய சிம்ம ப்ளாக் பண்ணிட்டு இந்த சிம்ம வாங்கிட்டு வந்துட்டா அதே நம்பர் என்று சொல்ல உடனே மீனாவின் அம்மா என் புள்ளைக்கு எவ்வளவு அறிவு பத்தியா அவ நல்லபடியா வருவான் என்று சொல்ல சீதா இதெல்லாம் சாதாரண விஷயம் உடனே உன் பிள்ளையை புகழாத என்று சொல்லுகிறார்.

உடனே விஜயா கோபமாக வீட்டுக்குள் வர வந்தவுடன் சத்யாவை இழுத்து பிடித்து செருப்பால் அடிக்கிறார்.இதனை பார்த்து மீனா அதிர்ச்சியாக அவரை தடுத்து நிறுத்த எதுக்கு அடிக்கிறீங்க என்று கேட்க ரோகிணி வீடியோவை அடுத்து மீனாவிடம் காட்ட மீனாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியாகி நிற்கின்றனர் பிறகு மீனாவின் அம்மா மற்றும் மீனா அனைவரும் சத்யாவை அடிக்க சத்யா மீனாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். என்கிட்ட திருடிட்டு அவக்காலில் விழுந்து மன்னிப்பு கேக்குறியா என்று சொல்லுகிறார் விஜயா.

பிறகு மீனாவின் குடும்பத்தை விஜயா அசிங்கப்படுத்தி பேச மீனா அத்தை என்று கத்த இனிமேல் என் அத்தை என்று கூப்பிடக்கூடாது பல்ல ஒடச்சிடுவேன் என்று மிரட்டுகிறார். இனிமே நீ அந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்ல மன்னிச்சிடுங்க என்று மீனாவின் அம்மா மன்னிப்பு கேட்க நீங்க எல்லாம் என்ன மன்னிப்பு கேட்கிறது இவன போலீஸ் ஸ்டேஷன்ல இழுத்துகிட்டு போறேன் என்று சட்டையை பிடித்து வெளியே இழுத்து வருகிறார். மீனா எவ்வளவு தடுத்தும் கேட்காத விஜயா மீனாவை தள்ளிவிட்டு சத்யாவை சட்டையை பிடித்து இழுத்து வருகிறார். மீனாவும் சீதாவும் சத்யாவை இழுத்து பிடிக்க கடைசியில் ஹவுஸ் ஓனர் வந்து உங்க பிரச்சனை எல்லாம் வெளிய வச்சுக்கோங்க என் வீட்டில் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்ல விஜயா கோபப்பட்டு இப்பவே நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன் அவங்க வந்து உன்ன இழுத்துட்டு போவாங்க உன்ன கலித்திங்க வைக்கிறது உறுதி என்று மிரட்டி விட்டு வேகமாக கீழே இறங்குகிறார். உடனே மீனாவின் அம்மா போதுமா உனக்கு என்று எங்கள உயிரோடு இப்படி கொல்றியே என்று சொல்லிவிட்டு அழுது கொண்டு உள்ளே சென்று விடுகிறார்.

இந்த விஷயம் முத்துவிற்கு தெரிய வருமா? மீனாவின் குடும்பத்தினர் என்ன செய்யப் போகிறார்கள்? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Epdisode Update
jothika lakshu

Recent Posts

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் தகவலை கொடுத்த நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…

5 hours ago

ஏகே 54 என்பது தான் இயங்க ரசிகர்களை பயன்படுத்தாத ஒரு பீரங்கி.. பார்த்திபன் பேச்சு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

6 hours ago

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

9 hours ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

10 hours ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

13 hours ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

1 day ago