கிருஷ் ஸ்கூலில் முத்துவும் அண்ணாமலையும் இருக்கின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஏற்கனவே மீனாவிற்கு உதவியதாக பார்வதியிடம் சொல்லி பணத்தை ரோகினி கொடுத்ததால் முத்துவிற்கு சந்தேகம் வருகிறது.
முத்து ரோகினியின் உண்மை முகத்தை எப்படி கண்டுபிடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அண்ணாமலை கிரிஷ் படிக்கப் போகும் ஸ்கூலில் வேலைக்கு கேட்டிருந்த நிலையில் தற்போது அவர் அங்கு வேலைக்கு வருகிறார் அவருடன் முத்து பேசிக்கொண்டிருக்க ரோகிணி க்ரிஷ் உடன் உள்ளே வருகிறார்.
உடனே கிருஷ் முத்துவை பார்த்தவுடன் கூப்பிடப்போக ரோகினி அவரை வாயை அடைத்து ஒரு ஆட்டோவில் மறைந்து கொள்கிறார். அவர்கள் சென்றவுடன் வாட்ச்மேன் இடம் அவர் யாரென்று கேட்க இங்கு புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிறார் என்று சொல்ல நான் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
அண்ணாமலை இடம் ரோகினி சிக்குவாரா? முத்து உண்மையை எப்படி கண்டுபிடிக்க போகிறார்? என்பதை பார்க்கலாம்.

siragadikka asai serial upcoming episode