விஜயா முத்துக்கு ஃபோன் போட்டதால் சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து விஜயா பேசியதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க மீனா நம்ம கஷ்டப்பட்டு உழைச்சு தான் சம்பாதிக்கிறோம் நீங்க வருத்தப்படாதீங்க நம்ம பிசினஸ் டெவலப் பண்ணலாம் எனக்கு அந்த 250 வீட்டுக்கு பூ கொடுக்கற ஆர்டர் கிடைச்சா நம்ம பிசினஸ் இன்னும் டெவலப் பண்ணலாம் என்று சொல்லி முடிவெடுக்கின்றனர். மறுபக்கம் ஸ்ருதி ரூமில் கோபமாக இருக்க ரவி வந்தவுடன் போனை எடுத்துக்காட்டுகிறார் எவ்வளவு கமெண்ட்ஸ் போட்டு இருக்காங்க என்னன்னு போட்டு இருக்காங்க பாரு என்று சொல்ல அதில் ரவி மற்றும் நீத்துவை சேர்த்து வைத்து பேசி இருப்பதால் நான்தான் ஏற்கனவே போஸ்ட் போட்டுட்டேனே என்று சொல்ல நீ மட்டும் போஸ்ட் போட்டா போதாது அவளும் போடணும் என்று சொல்லுகிறார் நீ அந்த ஹோட்டலில் இருந்து வேலையை ரிசைன் பண்ணு என்று சொல்ல அப்படி எல்லாம் பண்ண முடியாது ஸ்ருதி அந்த ஹோட்டலுடன் நானும் ஒரு பார்ட்னர் என்று சொல்ல நான் வேணும்னா அவங்களையும் போஸ்ட் போட சொல்றேன் என போன் பண்ணி நீத்து போஸ்ட் போட சொல்லி ஃபோனை வைக்கிறார். மறுபக்கம் சிந்தாமணியும் மீனாவும் அந்த ஆர்டருக்காக வந்து மேனேஜரை சந்தித்து பேசுகின்றனர். உடனே அவர் ரெண்டு பேரும் வெள்ளிக்கிழமை பூவ கட்டி எடுத்துட்டு வாங்க நான் அங்க இருக்கிற கஸ்டமர் கிட்ட யாரோட பூ நல்லா இருக்குன்னு கேட்டு சொல்றேன் அவங்களை டிசைட் பண்ணட்டும் என சொல்லி அனுப்பி விடுகிறார்.
வெளியில் வந்த சிந்தாமணி மீனாவிடம் உங்க கிட்ட எல்லாம் எனக்கு போட்டியா என்று சொல்ல என்னைக்கு உனக்கு எதிரா இருக்குறவங்களுக்கு தாழ்த்தி பேசுறீங்களா அன்னைக்கே நீ தோத்துப் போயிட்ட கண்டிப்பா இந்த பூ ஆர்டர் எனக்கு தான் கிடைக்கும் என சொல்லிவிட்டு மீனா சென்று விடுகிறார் விஜயா வக்கீலை வந்து சந்தித்து பேசுகிறார். எதுக்காக வர சொல்லி இருந்தீங்க என்று விஜயா கேட்க கேஸ் கோர்ட்டுக்கு வரப்போகுது இதுக்கு மேல நீங்க ரொம்ப கரெக்டா பேசணும் நடந்த விஷயத்தை அங்க அப்படியே சொல்லுங்க உங்க பையன் தடுமாறக்கூடாது. இந்த விஷயத்தை முதல்ல தெரிஞ்சு உங்க கிட்ட சொன்னது யார் என்று கேட்க என் பையனோட தம்பி தான் என்று சொல்லுகிறார் உங்க பையனா கசின் பையனா என்று கேட்க என்னோட இரண்டாவது பையன்தான் என்று முத்து பெயர் சொல்லுகிறார்.
நான் அவர்கிட்ட கொஞ்சம் பேசணும் போன் பண்ணி குடுங்க என்று சொல்ல விஜயா பிறகு வேறு வழி இல்லாமல் முதுவுக்கு போன் போட முத்து வீட்டில் இருக்கும்போது போன் வந்ததால் போனில் வந்த பேரை பார்த்து சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். எனக்கு யார் போன் பண்ணி இருக்காங்க தெரியுமா என்று அனைவரிடமும் எமோஷனலாக கேட்டு பேச அண்ணாமலை யார் என்று கேட்கிறார். பிறகு போன் கட் ஆகிவிட எனக்கு அம்மா போன் பண்ணி இருந்தாங்கப்பா இதுவரைக்கும் நான் போன் வாங்கி எனக்கு அம்மா போன் பண்ணதே கிடையாது இதுதான் முதல் தடவை என்று சொன்ன விஜயா மீண்டும் போன் பண்ண உடன் முத்து எடுத்து பேசுகிறார் அம்மா என்று சொன்னவுடன் நான் வக்கீல் பார்க்க வந்திருக்கேன் என சொல்ல உங்களை வந்து கூட்டிட்டு வரணுமாமா என்று கேட்க அதெல்லாம் வேண்டாம் அவங்க எதுவும் கிட்ட பேசணும்னு சொன்னாங்க பேசு என்று சொல்லி கொடுக்க வக்கீல் முத்துவிடம் உங்களுக்கு விஷயம் எப்படி தெரிந்தது என்று கேட்டுவிட்டு நீங்களும் உங்க வைஃப் கோர்ட்டுக்கு வர மாதிரி இருக்கும் என சொல்ல நாங்க எங்க வேணாலும் வந்து உண்மையை சொல்லுவோம் என்று சொல்ல வக்கீல் விஜயாவிடம் போனை கொடுத்து விடுகிறார். பிறகு விஜயா போனை வைக்கிறேன் என வைத்து விட முத்து சந்தோஷப்படுகிறார். மறுபக்கம் மீனா அவரது அம்மா வீட்டில் பூக்களை வந்து கொட்டி கட்டிக்கொண்டு இருக்கிறார். இந்தப் பூவெல்லாம் கட்டி எடுத்துட்டு போய் காட்டினாதான் யாருக்கு ஆர்டர் கொடுப்பாங்கன்னு தெரியும் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து சீதா வந்து நானும் பூ கட்டி ஹெல்ப் பண்றேன்னு சொல்லி கொடுக்கிறார் உடனே சீதா அவர்களது ஆஸ்பிட்டலில் ஒரு பெண் இருப்பதாகவும் சத்யாவிற்கு அந்த பெண்ணை பார்க்கலாமா என்று கேட்கிறார்.
அவன் தான் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றான்ல பார்க்கலாம் அவனுக்கு மனசுக்கு புடிச்ச மாதிரி பொண்ணு கிடைக்கட்டும் என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சிந்தாமணி மகள் ரேகா வருகிறார். என்ன விஷயம் ரேகா சர்ப்ரைஸா வந்திருக்கீங்க என்று கேட்க பேங்குக்கு போய் மேனேஜர் பார்க்கணுமா அதுக்காக தான் என்று சொல்ல முதலில் சத்யா கிளம்பி வர அந்த சட்டை நல்லா இல்லை என்று சொல்லி ரேகா சட்டையை மாற்றிக் கொண்டு வரச் சொல்லி அழைத்துச் செல்கிறார். மறுபக்கம் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் கோர்ட்டுக்கு வர இது மாதிரி ஒரு நிலைமை வரும்னு நினைச்சு கூட பாக்கல என்று சொல்ல கொஞ்ச நேரத்தில் ரோகினி வருகிறார். மனோஜிடம் வந்து பேச வர விஜயா தடுத்து திட்டுகிறார். அந்த நேரம் பார்த்து முத்து மீனா வர நீங்க என்ன நினைச்சாலும் நான் மனோஜ் கொடுத்த வாழ்வேன் இதை யாராலும் தடுக்க முடியாது என்று சொல்ல முத்து,மீனா ரோகினியை போக சொல்லுகின்றனர். கோர்ட்டில் ஜட்ஜ் என்ன கேட்கிறார்?முத்து,மீனா என்ன சொல்லுகின்றனர்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


