குடும்பத்தினர் அனைவரையும் முத்து பயத்தில் நடுங்க வைத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் வீட்டில் பேய் இருக்கா என்பதை செக் பண்ண ஒரு கோஸ்ட் ஹண்டர் வர சொல்லுகிறார். அவர் வந்து இறங்கியவுடன் விஜயா அவரை வரவேற்க வந்து பார்த்து அவரின் கெட்டபில் அதிர்ச்சி அடைகிறார்.
அனைவரும் ஒன்று கூட இவங்க தான் பேய் ஓட்டுகிறார்கள் என்று முத்து கேட்க இவர் பேய் ஓட்டுபவர் அல்ல பேய் கண்டுபிடிப்பவர் என்று சொல்லுகின்றார் மனோஜ். பேய் ஓட்டும் அந்தப் பெண் வந்ததுல இருந்து வீட்டில் இருக்கும் அனைவரும் பயந்துபடியே இருக்கின்றன. கையில் ஒரு விளக்குடன் வீடு முழுக்க சுத்தி வந்துவிட்டு வீட்டில் இருக்கும் லைட்டுகளை போட சொல்லுகிறார்.
எல்லா லைட்டும் அணைஞ்சு என் கையில வச்சிருந்த விளக்கு மட்டும் தெரிஞ்சா இந்த வீட்ல பேய் இருக்கு என்று அர்த்தம் என்று சொல்லிவிட்டு அனைவரையும் சுத்தி நிக்க சொல்லுகிறார். வீட்டில் இருக்கும் அனைவரும் பயத்தில் சுற்றி நின்று கொண்டிருக்க, முத்து அங்கிருந்து நழுவி வந்துவிடுகிறார்.
அந்த பெண்மணி சொன்னது போல் லைட் அனைத்தும் ஆஃப் ஆகி அவர் எடுத்து கொண்டு வந்த விளக்கு மட்டும் எரிகிறது இதனால் வீட்டில் பேய் இருப்பதாக நினைத்து அனைவரும் பயத்தில் நடுங்குகின்றன.
மனோஜ் அவர்களிடம் சென்று நீங்க சொன்ன மாதிரி லைட்டெல்லாம் ஆஃப் ஆயிடுச்சு அப்போ இந்த பேய் இருக்கிறதா தெரிஞ்சிடுச்சு நீங்கதான் ஏதாவது பண்ணனும் என்று சொல்லி கேட்க முத்து ஜன்னலில் இருந்து நான் தான் அப்பவே சொன்னேன்ல உங்ககிட்ட தள்ளிட்டு அவன் கார்ல எஸ்கேப் ஆயிட்டான் என்று சொல்லி இன்னும் பயமுறுத்துகிறார். இதற்கு என்ன பண்ணனும் என்று மனோஜ் கேட்டுக் கொண்டிருக்க அதுக்கு முதல்ல மெயின் ஆப் பண்ணாம பாத்துக்கணும் என்று சொல்லுகிறார். அப்போதுதான் முத்துதான் மெயினை ஆஃப் பண்ணி இருக்கிறார் என்பதை தெரிய வருகிறது. எதுக்குடா இப்போ விளையாடிகிட்டு இருக்க என்று மனோஜ் முத்துவைத் திட்டுகிறார்.
உடனே அந்த கோஸ்ட் ஹண்டர் கண்ணைத் திறந்த இங்கு எந்த பேயும் இல்லை தாராளமாக இந்த வீட்டை வாங்கலாம் என்று சொல்லுகிறார். அப்போதுதான் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பிறகு என்ன நடக்கிறது?மனோஜ் சொன்னது என்ன?முத்துவின் பதில் என்ன?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த ‘சிக்கந்தர்’ மற்றும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராசி’ உள்ளிட்ட பெரிய படங்களைத் தொடர்ந்து, இயக்குநர்…
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது 4-வது திருமண நாளை குடும்பத்துடன் சிறப்பாக…
‘குட் நைட்’, ‘லவ்வர்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் மணிகண்டன், தனது அடுத்த…
தமிழ் முஸ்லிம் சமூக மக்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறவுகள், காதல் மற்றும் சமூக கட்டுப்பாடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள…
மர்மம், குற்ற விசாரணை, பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆட்டி’. மலைப்பகுதியை…
Oh Sukumari Teaser (Tamil) | Thiruveer | Aishwarya Rajesh | Bharath Dharshan | Bharath Manchiraju