Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயா கேட்ட கேள்வி, வக்கீல் கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikka asai serial today episode update 19-03-26

முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் செட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனா பூ கட்டும் பிளாட்டில் இருந்து உதவி செய்வதாக சொன்ன சண்முகமும் அவரது மனைவியும் வருகின்றனர் பின்னாலே ஒரு டூரிஸ்ட் வேன் வந்து நிற்கிறது பிறகு முத்து அவர்களை வரவேற்று நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார் கொஞ்ச நேரத்தில் மீனாவும் வந்து விடுகிறார் என்ன மீனா நீயும் வந்திருக்க என்று கேட்க சாரதா வர சொல்லி இருந்தார் என்று சொல்லுகிறார். உடனே முத்துவிடம் நீங்க போய் அந்த வண்டிய செக் பண்ணி பாருங்க என்று சொல்ல முத்து போய் செக் பண்ணி பார்த்துவிட்டு நல்லா இருக்கு சார் என்று சொல்லுகிறார் ஸ்டார்ட் பண்ணி பாருங்க என்று சொல்ல முத்து ஸ்டார்ட் பண்ணி விட்டு என்ஜின் எல்லாம் நல்லா கண்டிஷனா இருக்கு என்று சொல்லுகிறார் யாருக்காகவும் வாங்கி கொடுக்க போறீங்களா? கண்டிஷன் எல்லாம் நல்லா இருக்கு சார் என்று சொல்ல இது உங்களுக்கு தான் என்று சொல்லுகிறார்.

உடனே முத்து எமோஷனலாகி பேசுகிறார். நாங்க ரொம்ப பெரிய கனவுகளோடு இருந்தோம் ஆனா அந்த கனவுக்கு நீங்க ஒரு மிகப்பெரிய உதவியை பண்ணி இருக்கீங்க என்று சொல்லுகிறார் இந்த வண்டிக்கு நான் லோன் போட்டு வாங்கி கொடுத்துடறேன் நீ லோனை கட்டிக்கிட்டு இதுல வர லாபத்தை எடுத்துக்கோ அதுவும் இல்லாம பிளாட்டில் எல்லாரும் டூருக்கு அதிகமா போவாங்க கோவிலுக்கும் போவாங்க எல்லாத்துக்கும் உன்னோட வேன் புக் பண்ண சொல்லுகிறேன் என்று சொல்ல முத்து இன்னும் சந்தோஷப்படுகிறார். அவருக்கு நன்றி சொல்ல உடனே அன்னைக்கு என் பையன மட்டும் நீங்க காப்பாத்தாம இருந்தீங்கன்னா இன்னைக்கு என் பையன் என்கிட்ட இல்லை என்று சொல்ல சரி விடுங்க அந்த கதையை ஏன் பேசிக்கிட்டு என்று சொல்லுகிறார். உடனே அவர்கள் அங்கிருந்து சென்றுவிட செல்வம் இந்த வேன் யாருக்கு ஓட்ட கொடுக்கப் போற என்று கேட்க அவரது நண்பருக்கு கொடுக்கப் போவதாக சொல்ல செல்வம் நாவேனா இந்த வேன் ஓட்டுகிறேன் கார்த்திக்கு கார் கொடுத்திடலாம் என்று சொல்லுகிறார் நான் நிறைய கடன் வாங்கிட்டேன் இந்த வேலை ஓட்டுன கொஞ்சம் சம்பளம் அதிகமா வரும் நான் அந்த கடன அடைச்சிடுவேன் என்று சொல்ல முத்துவும் சரி என சொல்லுகிறார்.

அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க முத்துவின் இந்த வளர்ச்சிக்கு மீனாதான் காரணம் என சொல்ல இருவரும் சந்தோஷப்படுகின்றன அந்த நேரம் பார்த்து பிஏ வந்து நிற்கிறார் முத்து பிஏவை பார்த்தவுடன் இரண்டு இடத்தில் அடித்த ஞாபகம் வருகிறது நீதானே என்கிட்ட ரெண்டு வாட்டி அடிவாங்கி இருக்கேன் என்று கேட்க மறக்காமல் இருக்கீங்க என்று சொல்லுகிறார் இப்ப நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி தான் பேச வந்தேன் அதுவும் உங்களோட அண்ணி பத்தி தான் சொல்ல வந்தேன் என்று சொல்லுகிறார் பார்லர் அம்மா பத்தி நீ என்ன சொல்ல போற என்று கேட்க ரோகினி பேரு கல்யாணி அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு அவளுக்கு கிறிஸ் என்று ஒரு பையன் இருக்கான் என்று சொல்ல முத்து எதுவும் தெரியாதது போல் ஷாக் ஆகி கேட்கிறார்.

இந்த விஷயம் உனக்கு எப்ப தெரியும் என்று கேட்க எனக்கு ரொம்ப நாள் முன்னாடியே தெரியும் நான் அவளை மிரட்டி பணம் வாங்கிகிட்டு இருந்தேன் என்று சொல்ல ஓ பிளாக் மெயில் பண்ணி நீ தான் பணம் வாங்குனியா என்று கேட்கிறார் அவளால தான் என் வேலை போச்சு அதனாலதான் நான் அப்படி பண்ணேன் என்று நீயே சொல்லுகிறார் இவ்வளவு பெரிய விஷயத்தை பண்ணிருக்கேன் நீ ஏதாவது பார்த்து கொடுத்தா நல்லா இருக்கும் என்று சொல்ல செல்வத்திடம் ரூமுக்கு கூட்டிக்கிட்டு போ நான் வந்து பாத்துக்குறேன் என்று சொல்லி அனுப்பி விடுகிறார் உடனே மீனா முத்துவிடம் கிருஷ அன்னைக்கு கடத்தி வைத்து பணம் கேட்டது இந்த ஆளுதான் என்று சொல்ல அப்போ இன்னைக்கு சரியான சன்மானம் கொடுத்திடலாம் என்று அடி வெளுத்து வாங்கி அனுப்பி விடுகிறார்.

மறுபக்கம் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் வக்கீல் கிருஷ்ணா ராமை சந்தித்து பேசுகின்றனர் எதற்காக எங்களை வர சொல்லிருந்தீங்க என்று கேட்க முத்து மீனாவையும் வரச் சொல்லி இருக்கேன் வெயிட் பண்ணுங்க என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் எப்படி இருக்கீங்க என்று கேட்க விஜயா முகத்தை திருப்பிக் கொள்ள அவங்க பாசமாதான கேக்குறாங்க ஏன் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க என்று வக்கீல் கேட்கிறார். உடனே நல்லா இருக்கேன் என்று சொல்ல இதுக்கு சொல்லாமலே இருக்கலாம் என்று சொல்லிவிடுகிறார். உங்க கேசுக்கு நாளைக்கு கவுன்சிலிங் வருது அப்போ டைவர்ஸ்ல உறுதியா இருக்கிறதையும் அதற்கான காரணத்தையும் தெளிவா சொல்லுங்க என்று சொல்ல விஜயா அதெல்லாம் என் பையன் கரெக்டா சொல்லிடுவான் என்று சொல்லுகிறார். கரெக்டா சொல்லி இருந்தா கோர்ட்ல முடிய வேண்டிய கேஸ் கவுன்சிலிங் வரைக்கும் வருது என்று சொல்ல முத்து மீனா சிரிக்கின்றனர். பிறகு முத்துமினாவிடம் வக்கீல் என சொல்லுகிறார்?விஜயா என்ன கேட்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 19-03-26

siragadikka asai serial today episode update 19-03-26