மனோஜ் செய்த விஷயத்தை சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார் ரோகினி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் வருகிறார். நீ ஒரு விஷயம் கவனிச்சியா மனோஜ் மீனா தப்பு பண்ணி இருக்காங்க ஆனா ஆன்ட்டி அவங்கள வேலைக்காரின்னு சொன்ன உடனே முத்துக்கு எவ்வளவு கோபம் வந்துச்சு பாத்தியா எந்த இடத்துலயாவது அவரை விட்டுக் கொடுத்தாரா என்று கேட்கிறார். அதனாலதான் மீனா ஆன்ட்டி எவ்வளவு திட்டினாலும் இந்த வீட்டில் சந்தோஷமா இருக்காங்க அதுக்கு ஒரு தைரியம் வேணும் என்று சொல்ல மனோஜ் எழுந்து சென்று விடுகிறார்.
உடனே ரோகினி வந்து உன்ன கஷ்டப்படுத்தணும்னு சொல்லலை மனோஜ் எந்த விதத்துல மீனாவை விட குறைந்து போயிட்டேன் ஆனா உங்க அம்மா என்ன திட்டும்போது நீ ஒரு வார்த்தை கூட எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுறது கிடையாது என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் இனிமே நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன் ரோகினி என்று சொல்லிவிட்டு ரோகிணியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க சத்தம் கேட்டு விஜயா கதவை தட்டுகிறார் உடனே ரோகிணி கதவு பின்னால் ஒளிந்து கொள்ள மனோஜ் கதவை திறக்கிறார். என்ன சத்தம் அவ எங்க என்று கேட்க மனோஜ் பாத்ரூம்ல குளிக்கிறா என்று பொய் சொல்லுகிறார் இல்லை எனக்கு சத்தம் வேற மாதிரி கேட்டது என்று சொல்ல இல்லம்மா குளிச்சிட்டு தான் இருக்கா என்று சொல்ல சரி நீ ஷோரூம் கிளம்பு சென்று சொல்லிவிட்டு சென்றுவிட சந்தோஷத்தின் ரோகினி மனோஜ் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார் எனக்கு இது மாதிரி ஒரு மனோஜ் தான் வேண்டும் இது பழைய மனோஜ் இருந்தா என்ன ஆகும் இங்க தான் இருக்கான்னு சொல்லி இருப்பா என்று சொல்லி சந்தோஷப்பட்டு எனக்கு இது போதும் மனோஜ் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் சீதா மாமியார் வீட்டுக்கு கிளம்ப வீட்டு ஹவுஸ் ஓனர் மற்றும் சிலர் வந்து பார்க்கின்றனர் அவர்கள் முத்துவைப் பற்றி பெருமையாக பேச அருணின் முகம் மாறுகிறது. நீ முத்துவை போல் நடந்துகொள் நீ முத்துக்கு கிட்ட கேட்டு எதுவா இருந்தாலும் முடிவெடு என்று எல்லாம் பேச உடனே யாரும் அம்மா வெயிட் பண்ணுவார்கள் கிளம்பலாமா சீதா என்று சொன்ன அவர்கள் கிளம்பி விடுகின்றனர். உடனே சந்திராவும் சீதாவிற்கு அட்வைஸ் சொல்ல மீனாவிடம் மாமா வரமாட்டாராக என்று கேட்க அவருக்கு வேலை இருக்க சீதா நீ கெளம்பு என்று சொல்ல, ரூமுக்கு சென்று முத்துவுக்கு போன் பண்ணி அருண் வீட்டிற்கு போக போக விஷயத்தை சொல்ல சந்தோஷமா போயிட்டு வா என்று சொல்லி அவரும் அட்வைஸ் பண்ணுகிறார். உடனே கொஞ்ச நேரத்தில் சீதாவும் கிளம்பி விட, முத்து வீட்டுக்கு வரும்போது மீனா இல்லாததை பார்த்து வருத்தப்படுகிறார்.
கார் செட்டுக்கு வந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க அவர்கள் ஏன் சோகமாக இருக்க என்று கேட்கின்றனர். அதற்கு முத்துவின் பதில் என்ன? அதற்கு அவர்கள் என்ன கேட்கின்றனர்? என்பதை இன்றைய எபிசோட் பார்க்க வேண்டும்.


