ரோகினி முடிவு ஒன்று எடுக்க முத்து வீட்டில் உண்மையை சொன்னாரா என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவிற்கு ரோகிணி குறித்த உண்மை தெரிய வந்து விடுகிறது அவர் குடித்துக்கொண்டிருக்க பிறகு வீட்டில் வந்து அனைவரிடமும் முன் உண்மை சொல்வது போலும் அதற்கு ரோகிணி இதுக்கு மேல உண்மையை மறைப்பதில் ஒன்னும் இல்லை அது என்னோட டிவின் சிஸ்டர் எங்க அக்கா பேரு தான் கல்யாணி கிரிஷ் அக்கா பையன் என்று சொல்லுகிறார் உடனே முத்து அதிர்ச்சியாக அப்போதுதான் அது கற்பனை என தெரிய வருகிறது அவ வாயாலே உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து முடிவெடுத்துவிட்டு பாரில் இருந்து கிளம்புகிறார்.
முதலில் மீனாவுக்கு போன் போட்டு முக்கியமான விஷயம் பேசணும் வீட்டுக்கு வா என்று சொல்லுகிறார் என்ன முக்கியமான விஷயம் என்று கேட்க சொன்னாதான் வருவியா வா என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். மறுபக்கம் நீத்து ஹோட்டலில் சரியாக கஸ்டமர் வராமல் இருப்பதால் நீத்து டென்ஷனாக இருக்க ரவியும் வந்து பேசுகிறார் முன்ன மாதிரி யாரும் அதிகமா வர மாட்டேங்கிறாங்க என்று சொல்ல அதற்கு உடனே தெருவுக்கு 10 கடை ஆயிடுச்சு அது இல்லாம எல்லாம் போட்டிக்கு வைக்க ஆரம்பிச்சுட்டாங்க என்று ஸ்ருதியை மறைமுகமாக பேசுவதை ரவி அறிந்து கொள்கிறார் பிறகு கொஞ்ச நேரத்தில் வேலை செய்பவர்கள் இரண்டு பேர் வந்து சம்பளம் ஏத்தி கொடுக்கச் சொல்லி கேட்க எப்படி இருக்கிற சூழ்நிலையில கேட்டா என்ன அர்த்தம் என்று கேட்கிறார் தெரியுது மேடம் அதனாலதான் நாங்க வேலையை விட்டு போகலாம்னு முடிவு பண்ணிட்டோம் எங்களுக்கு தேவையான சம்பளம் கிடைக்கிற ஹோட்டலுக்கு போகிறோம் என்று சொன்னால் சரி நான் உங்க கணக்கு பார்த்துட்டு சம்பளம் கொடுக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
உடனே நீத்தூ ஸ்ருதியோட ரெஸ்டாரன்ட் ஏதாவது பண்ணனும் என முடிவெடுக்கிறார். உடனே முத்து ரவிக்கு போன் போட்டு முக்கியமான விஷயம் பேசணும் பல குரலைக் கூட்டிட்டு வீட்டுக்கு வந்துரு என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என கேட்கும் முத்து சொல்ல மறுக்கிறார் உடனே ரவி ஸ்ருதிக்கு போன் போட்டு முத்து முக்கியமான விஷயம் பேசணும்னு வீட்டுக்கு வர சொல்லி இருக்கானே ரெடி யாரு நான் வந்து உன்னை கூட்டிட்டு போறேன் என்று சொல்ல ஸ்ருதியும் சரி என சொல்லுகிறார்.
பிறகு மீனா வீட்டுக்கு வர அண்ணாமலை முத்து முக்கியமான விஷயம் சொல்ல சொன்னதா சொன்னதாக சொல்ல ஆமாம்மா என்கிட்டயும் சொன்னாரு என்று சொல்லுகிறார். உடனே ஒவ்வொருவராக வீட்டுக்கு வருகின்றனர் உடனே மனோஜ் வந்து நா முத்து கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று சொல்லுகிறார் உடனே விஜயா எல்லாருமே முக்கியமான விஷயம் தான் பேசணுமா என்று சொல்லுகிறார். அதன் பிறகு ரோகிணி மனோஜிடம் நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று சொல்ல மனோஜ் நா முத்துக்கு கிட்ட தான் முதல்ல பேசணும் என்று சொல்லுகிறார் பிறகு கிருஷ் தத்து கொடுக்கப் போகும் விஷயத்தையும் அதனால் 25 லட்சம் கிடைக்கும் என்பதையும் சொல்ல அண்ணாமலையும் மீனா மறுக்கின்றனர்.
கொஞ்ச நேரத்தில் முத்து வீட்டுக்கு வர பிறகு குடும்பத்தினர் என்ன கேட்கின்றனர்? முத்து உண்மையை சொன்னாரா? இல்லையா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 07-01-26

