னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி பார்வதி வீட்டுக்கு வந்து பார்வதியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு விஜயா பண்ணும் கொடுமைகளை பற்றி சொல்லுகிறார். மனோஜ் என்கிட்ட பேச விட மாட்டாங்க ஷோரூம் போக விடமாட்டேங்குறாங்க நீங்க தான் பேசணும் என்று சொல்ல விஜயாவோட கோபத்துக்கு யார் பேசினாலும் சமாதானமாக மாட்டா அவளுக்கு ரொம்ப புடிச்சா தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார் இல்லன்னா தரையில போட்டு மிதிச்சுடுவா என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிற அந்த நேரம் பார்த்து காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு பார்வதி பதறிப்போய் விஜயா தான் வந்திருப்பா என்று சொல்லி நீ ரூம்ல போய் மறஞ்சுக்க என்று சொல்லுகிறார்.
பார்வதி கதவை திறந்து விட விஜயா நின்று கொண்டிருக்க, ஹாலில் கூப்பிட்டு உட்கார வைக்க வைக்கிறார். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசறதுக்கு தான் வந்தேன் பார்வதி நீ ஒரு சாமியார் பத்தி சொன்னேன்ல வசியம் வைக்குறவர் அவர பாக்கணும் என்று சொல்ல யாருக்காக என்று பார்வதி கேட்டவுடன் மனோஜ் ரோகினிய பிரிக்க தான் என்று சொல்ல ரூமிலிருந்து ரோகினி இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அந்தப் பார்லர் காரிய வீட்டை விட்டு துரத்திட்டு என் பையனுக்கு பணக்கார பொண்ணா கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொல்லுகிறார். உடனே விஜயா உள்ள போய் பேசலாம் என்று ரூமுக்கு போக ஏசி ஓடல ஃபேன் ப்ராப்ளம் ஆயிடுச்சு ஷாக் அடிக்குது என்றெல்லாம் சமாளிச்சு விஜயாவை அனுப்பி வைத்து விடுகிறார் உடனே ரோகினி இடம் வந்த பார்வதி என்ன ஆண்டி உங்கள் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்க என்று கேட்கிறார்.
நானும் அந்த வசியம் வைக்குறவரை பாக்கணும் என்று சொல்ல எதுக்குமா என்று கேட்கிறார் ஏன்னா அவங்க வைக்கிற வசியம் பலிக்காம போகணும் இல்ல அதனாலதான் என்று சொல்ல சரி நான் ரெண்டு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு போன் பண்றேன்னு சொல்லுகிறார். மறுபக்கம் முருகன் வித்யாவை வந்து சந்தித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வாங்கிக் கொண்டு வந்திருப்பதாக சொல்லி கொடுக்க வித்யாவும் சாப்பிடுகிறார். இதுக்கு தான் வந்தீங்களா என்று சொல்ல இல்லங்க முக்கியமான விஷயம் என சொல்லி வீடு ஒன்று உங்களுக்காக சொந்தமாக வாங்குவதற்கு பார்த்து இருக்கேன் நாளைக்கு நீங்க வந்து ஓகே சொன்னாதான் நான் வாங்குவேன் நீங்க வந்து நேரில் பாக்கணும் என்று சொல்ல எதுக்குங்க இப்பவே வீடெல்லாம் கேட்க நான் நிறைய வெளியில தங்கிட்ட ஆனா உங்களை சொந்த வீட்டுல வச்சு பாக்கணும்னு ஆசைப்படறேன் என சொல்லுகிறார்.
உடனே வித்தியாவும் சரி என சொல்ல அந்த வீட்டுக்கு நான் உங்க பேர தான் வைக்க போறேன் என்று சொல்லுகிறார். நாளைக்கு காலைல 10 மணிக்கு ரெடியா இருங்க நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் என்று சொல்ல இல்லைங்க பரவால்ல இருக்கட்டும் நான் எனக்கு லவ்வுக்கு ஹெல்ப் பண்ணவங்களையோ கூட்டிட்டு வர என்று சொல்ல முருகனும் எனக்கும் ஒருத்தர் ஹெல்ப் பண்ணி இருக்காரு நானும் அவரை கூட்டிட்டு வரேன் என்று சொல்லி கிளம்புகிறார்.
மறுபக்கம் ஒரு கடையில் மனோஜ் ஏமாற்றிய நபர் அட்ரஸ் விசாரித்துக் கொண்டிருக்க கரெக்டாக சென்றவுடன் மீனா அந்த கடைக்கு வந்து பூ கொடுக்கிறார் உடனே கொஞ்ச தூரத்தில் இவரைப் பார்த்தால் ரோகினி கிட்ட பணத்தை ஏமாத்துன ஒரு மாதிரி இருக்காரே என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே கடைக்காரர் டெக்கரேஷன் ஆர்டர் வேணும் என்று பேசிக் கொண்டிருக்க மீனாவால் கவனிக்க முடியாமல் போய்விடுகிறது. அந்த புரோக்கர் நேராக முருகனிடம் சென்று பேசுகிறார் இதனால் முருகன் இவரிடம் தான் வீடு வாங்க இருப்பது தெரிய வருகிறது.
தேடிப் பார்த்தும் அந்த ஆள் கண்ணில் சிக்காததால் மீனா நின்று கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து வித்யா போன் போடுகிறார் எங்க இருக்கீங்க மீனா என்று கேட்க உங்க வீட்டு பக்கத்துல தான் இருக்கேன் என்று சொல்லுகிறார் அப்போ வாங்க உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று கூப்பிடுகிறார். மீனா வித்யா வீட்டிற்கு போக வித்யா என்ன சொல்லுகிறார்?அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்க்க தெரிந்து கொள்வோம்.