ராஜா ராணி இருவரும் விஜயாவின் வீட்டுக்கு வந்துள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் சந்தோஷ் பேச்சை கேட்டுக்கொண்டு ராணியிடமிருந்து உண்மையை வர வைக்க மனோஜ் அவரிடம் தப்பாக நடந்து கொள்வது போல் நடித்து பக்கம் அக்கம் இருப்பவர்களிடம் தொடப்பக்கட்டையால் அடி வாங்கிக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ராணியின் கற்பை கெடுத்து விட்டதாக இருவரும் விஜயாவின் வீட்டில் வந்து நிற்க உடனே முத்து இவன் அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்திருக்கான் அதை ஊரே பார்த்து இருக்கு இதுக்கு ஒரே முடிவு தான் இருக்கு என்று சொல்லுகிறார்.
உடனே விஜயா இவன் உன்னோட கூட பிறந்தவ அவங்க சொல்றத நம்பி நீ இவள சந்தேகப்படுறியா என்று கேட்க எல்லா அம்மாவுக்கும் பெத்த புள்ள மேல தப்பே பண்ணினாலும் ஒத்துக்க மாட்டாங்க என்று சொல்லுகிறார்.
அந்தப் பொண்ணோட கற்பை சூறையாடி இருக்குல்ல அந்த பொண்ணு கழுத்துல நீ தாலி கட்டிடு என்று சொல்ல விஜயா ரோகினி அதிர்ச்சி அடைகின்றனர். உடனே ராணி இடம் என்னை இப்படி பாக்குற இனிமே அவங்கதான் உன்னோட மாமியார் என்று விஜயாவை காட்டுகிறார். மனோஜ் இந்த விஷயத்தில் இருந்து முத்து காப்பாற்ற தான் இப்படி ஒரு திட்டத்தை போடுகிறாரா? என்ன நடக்கப்போகிறது? என்று பரபரப்பான திருப்பங்களுடன் இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial promo update