முத்து மீது பழி விழ, உச்சகட்ட கோபத்தில் ரவி இருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் தற்போது நீத்து ரவியை லவ் பண்ணதாக சொல்ல ஸ்ருதி கோபத்தில் அவரது அம்மா வீட்டுக்கு சென்று இருக்கிறார் முத்து இவர்களை சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார்.
தற்போது வெளியான ப்ரோமோவில் நீத்து உடன் ரெஸ்டாரண்டுக்கு சென்று ஒழுங்கா ரவிய லவ் பண்ண மாட்டேன்னு அவன் பொண்டாட்டி கிட்ட சொல்லிட்டு விலகிடு என்று சொல்ல அப்படி சொல்லலனா என்ன பண்ணுவ என்று கேட்க இந்த ரெஸ்டாரன்ட் இருக்காது நீயும் இருக்க மாட்ட என்று சொல்லி மிரட்டி விட்டு வருகிறார்.
மறுபக்கம் ரவி வீட்டிற்கு கோபமாக வந்து முத்துவின் சட்டையை பிடித்து எதுக்காக டா இப்படி பண்ண என்று கேட்க அண்ணாமலை என்ன நடந்தது என்று சொல்ல இவர் நீத்தோட ரெஸ்டாரன்ட் எரிச்சிருக்கா அதுவும் இல்லாம ஆள கூட்டிட்டு போய் நீத்து கால உடைத்து இருக்கான் என்று சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.

