Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கிரிஷ்க்கு தெரிந்த உண்மை, பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை ப்ரோமோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. விறுவிறுப்பான கதைக்களத்துடன் நம்பர் ஒன் சீரியலாக விளங்கி வரும் இந்த சீரியலில் ரோகினி குறித்த உண்மை எப்போது உடையும் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கிரிஷ்க்கு ரோகிணி தான் அம்மா என்ற உண்மை தெரிய வந்துள்ளது. கண்ணில் அடிபட்டு ஹாஸ்பிடல் அனுமதிக்கப்பட்ட கிரிஷை மீனாவும் முத்துவும் வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் ரோகினி கிரிஸ் ஏத்த என்கிட்ட பேசவே இல்ல என்று கேட்பது போல கனவு கண்டு அலண்டு எழுகிறார்.

அதன் பிறகு ரோகிணியும் அவரது அம்மாவும் பேசிக்கொண்டிருக்கும் போது ரோகிணி கிரிஷ் நான் பெத்த பையன் என்று சொல்வதை கிரிஷ் கேட்டு விட நீ தான் என்னுடைய அம்மாவை அத்தை என்று கேட்க ரோகினியும் ஆமா நான் தான் உன்னுடைய அம்மா என்று உண்மையை ஒப்புக்கொள்கிறார்.

இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது.

Siragadikka asai serial Promo update
Siragadikka asai serial Promo update