ரோகினியை வித்யா காப்பாற்ற, முத்துவிற்கு சந்தேகம் வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி பத்திரிக்கையை கொடுக்க பங்க்ஷன் குறித்து அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர் ஸ்ருதி எனக்கு இந்த ஐடியா கொடுத்தது மீனாதான் என்று சொல்ல அண்ணாமலை பாராட்டுகிறார். அந்த நேரம் பார்த்து முத்துவிற்கு ஃபோன் வர அவர் கொஞ்சம் தள்ளி நின்று பேசுகிறார்.
அப்போது தாத்தாவின் உறவினர் தாத்தாவிடம் போட்டோவை காட்டியதாகவும் அதில் பூ போட்ட சுடிதார் போட்ட பொண்ணுதான் என்று கன்பார்ம் சொல்லியதாக போனை வைக்கிறார். உடனே வித்யா தான் என்பதை உறுதி செய்த முத்து மீனாவை கூப்பிட்டு தனியாக சொல்கிறார். உடனே மீனா இப்பவும் என்னால இதை நம்பவே முடியல இவங்கள இப்படி பண்ணி இருப்பாங்களான்னு தோண மாட்டேங்குது என்று பேசிக் கொண்டிருக்க இருவரும் வித்யாவின் வீட்டிற்கு போக முடிவெடுக்கின்றனர்.
வித்யாவின் வீட்டிற்குப் போக மீனா நான் போகிறேன் என்று சொல்ல நீ வேணா நீ பாவப்பட்டு விட்டு வந்துருவேன் நான் போய் கேட்கிறேன் கேட்கிற விதத்தில் கேட்டா தான் பதில் வரும் என்று சொல்லுகிறார். பிறகு முத்து வித்யாவின் வீட்டில் கதவைத் தட்ட முருகன் வந்திருப்பதாக வித்யா நினைத்து போனில் அழகா இருக்குமா என்று பார்த்துவிட்டு வெட்கத்துடன் கதவை திறக்க முத்துவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உள்ளே வந்த முத்து போனை காட்டி இந்த போன் ஞாபகம் இருக்கா என்று கேட்க என்ன கேக்குறீங்க எனக்கு ஒண்ணுமே புரியல என்று எதுவும் தெரியாதது போல் பேசுகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் நீ தான் செருப்பு தைக்கற இடத்தில விட்டுட்டு போனதால விசாரிச்சு எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கேன் என்று சொல்ல உடனே வித்தியா ஆதாரத்தோடு வந்திருக்கும் போது ஏதாவது சொல்லி தப்பிக்கணும் என்று மனசில் யோசித்து விட்டு உடனே நான் இந்த போன ரிச்சி சீட் ல ஒரு பிளாட்பார்ம் கடையில தான் வாங்கினேன் என்னோட போன் ரிப்பேர் ஆயிடுச்சு அதுக்காக 2000 கொடுத்து இந்த போன் வாங்கினேன் என்று சொல்லுகிறார்.
உடனே முத்து சரியா போன வாங்கினா உள்ள ஓபன் பண்ணி பார்த்திருந்தா இது என்னோட போனு தெரிஞ்சிருக்குமே என்று கேட்க உடனே அதற்கும் வித்யா போன ஒரு நாள் ஃபுல்லா சார்ஜர் போட சொன்னாங்க அதனால போட்டுட்டு மறுநாள் எடுத்துட்டு போகும்போது தொலைந்து விட்டது என்று சொல்லி நாடகமாடி சமாளித்து விடுகிறார். உடனே முத்து நீ அந்த பார்லர் அம்மாவை விட மோசம் தப்பு செய்றவங்கள விட தப்பு செய்றவங்களுக்கு கூட இருக்கிறவங்களுக்கு தான் தண்டனை அதிகம் எல்லாம் ஒரு நாள் தெரிஞ்சது நான் அப்புறம் இருக்கு என்று சென்று விடுகிறார்.
வீட்டுக்கு வந்து முத்து மீனாவை கூப்பிட ரோகினி கதவில் மறைந்து கேட்கிறார். என்னங்க வித்யா என்ன சொன்னாங்க என்று கேட்க அது பிளாட்பார்ம்ல வாங்கினேன்னு சொல்லி சமாளிக்குது என்று சொல்லுகிறார். ஆனா இதுல ஏதோ ஒரு சந்தேகம் இருக்கு எல்லாத்துக்கும் காரணம் பார்லர் அம்மா தானே தோணுது கிட்ட வந்துட்டு ஆனா தப்புச்சுட்டாங்க ஆனா இத நான் இப்படியே விடமாட்டேன் என்று சொல்லுகிறார்.
உடனே ரூமில் ரோகினி நல்லவேளை நம்மள வித்தியா காப்பாத்திட்டா என்று சொல்லி நினைத்து விட்டு வித்யாவை பார்க்க வீட்டிற்கு வருகிறார். ரோகிணி என்ன சொல்லுகிறார்?அதற்கு வித்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.