தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி கோபமாக சென்று விட முத்துவும் மீனாவும் ரவியிடம் என்ன ஆச்சு என்று கேட்க நீத்து லவ் பண்ணும் விஷயத்தை சொன்னவுடன் மீனா இது கேட்கும் போது எனக்கே கோபம் வருது ஸ்ருதி வராதா நேத்து கிட்ட சொல்லி சுதி கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க என்று சொல்ல அதெல்லாம் அவங்க பண்ண மாட்டாங்க அதுவும் இல்லாம அவங்க ஸ்ருதிய வெறுப்பேத்த சொல்றாங்களா இல்ல நிஜமாவே சொல்றாங்களான்னு எனக்கு தெரியல என்று சொல்ல உடனே முத்துவும் மீனாவும் நீங்க போய் சுருதிய சமாதானப்படுத்துங்க நீத்து ஓட நம்பர் குடுங்க நாங்க அவங்க கிட்ட பேசுறோம் அவங்க வந்து மன்னிப்பு கேப்பாங்க என்று சொல்லி ரவியிடம் இருந்து நம்பரை வாங்கிக் கொண்டு ரவியை அனுப்பி வைக்கின்றனர்.
மறுபக்கம் மனோஜ் ஷோரூமில் உட்கார்ந்து கொண்டிருக்க ஜீவா கணக்கு வழக்குகளை எடுத்துக் கொண்டு வந்து வைக்கிறார். நான் எப்பவும் எந்த கணக்கும் பாக்குற மாதிரி இல்லை என்று சொல்ல உடனே ஜீவா எனக்கு தெரிஞ்ச கசின் சிஸ்டர் ஒருத்தவங்க டைவர்ஸ் ஆகி இருக்காங்க அவ கிட்ட பேசி பார்க்கலாமா என்று கேட்க உடனே மனோஜ் எனக்கு இப்போ எந்த ஐடியாவும் கிடையாது அதே மாதிரி கல்யாணம் பண்ணாலும் நான் டைவர்ஸ் ஆன பொண்ண கல்யாணம் பண்ண மாட்டேன் என்னோட முடிவு எங்க அம்மாவோட முடிவும் இதுதான் என்று சொல்ல உடனே சந்தோஷ் போனில் கேமராவை ஆன் பண்ணி மனோஜ் முன் காட்டுகிறார் அதை முதலில் உனக்கே சொல்லிக்கோ என்று சொல்ல அந்த நேரம் பார்த்து விஜயா சிந்தாமணி வருகின்றனர்.
நீங்க என்னமா இங்கே என்று கேட்க சிந்தாமணி தான் வர சொன்னாங்க என்று சொல்லுகிறார் உடனே மனோஜ் பணம் கொடுக்க வேண்டிய அந்த பைனான்சியரும் வர, மனோஜ் கொடுக்க வேண்டிய பணத்தை பொறுமையாகவே கொடுங்க என்று சொல்லுகிறார் உடனே மனோஜ் விஜயா சந்தோஷப்படுகின்றனர்.
இந்த சமயம் பார்த்து சிந்தாமணி பேங்க்ல இருக்குற லோன் அடைக்கறதுக்கு தான் சார் பணம் கொடுக்கிறேன் என்று சொன்னார் இல்ல ஏன் வேண்டாம்னு சொல்லிட்டீங்க என்று சொல்ல என் புருஷன் தான் வேணான்னு சொல்லிட்டாரு என்று விஜயா சொல்ல உடனே இருவரும் பேசி விஜயா மற்றும் மனோஜை மனம் மாற்றி செக்கை கையில் கொடுக்கின்றனர். உடனே விஜயா இதில் ஒரு சிக்கல் இருக்கு அவர் கையெழுத்து போடாம என்னால பேங்க்ல இருந்து பத்திரத்தை வாங்க முடியாது என்று சொல்ல உடனே மனோஜ் அப்பாவோட கையெழுத்தை நானே போட்டுறேன்னு சொன்ன விஜயா இது ஏமாத்துற மாதிரி இருக்காதா என்று கேட்கலாம் உங்க வீட்டோட பத்திரத்துக்காக தானே போடுறீங்க அதெல்லாம் தப்பில்லை என்று சொல்லி சம்மதிக்க வைத்து விடுகின்றனர்.
கார் ஷெட்டில் முத்துவும் மீனாவும் இருக்க அவரது நண்பர்கள் உங்க வீட்ல இன்னும் என்னென்ன தான் பிரச்சனை நடக்கும்னு தெரியல என்று சொல்லிக் கொண்டிருக்க அதனாலதான் நீத்து வர சொல்லி இருக்கோம் என்று சொல்லுகின்றனர் உடனே நீத்து வந்து இறங்க எதுக்கு கூப்பிட்டிங்க என்று கேட்கிறார். நீ எதுக்கு ரவியை லவ் பண்ணதா சொன்ன என்று கேட்கிறார்.நான் லவ் பண்றதுனால உண்மையா தான் சொன்னேன் என்று சொல்லுகிறார் அவர் ஸ்ருதியை மட்டும் தான் லவ் பண்றான் பண்ணட்டும் நான் அவர ஒன்னும் லவ் பண்ண சொல்லி கட்டாயப்படுத்தல என்ன லவ் பண்ணவும் வேண்டாம் கல்யாணம் பண்ணிக்கோ சொல்லல என்று சொல்ல உன்னால எப்படி இது மாதிரி பேச முடியுது என்று முத்துவும் மீனாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லியும் நீத்து விடாப்பிடியாக என்னால எதுவும் செய்ய முடியாது என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். முத்து இது வேற வழியா தான் டீல் பண்ணனும் என்று யோசித்தால் மறுபக்கம் சுருதி அவர்களது அம்மா வீட்டுக்கு சென்று கதவை தாப்பால் போட்டுக் கொண்டு ரூமில் இருக்கிறார். அப்பா அம்மா இருவரும் கதவை தட்டியும் திறக்காததால் உடனே ஸ்ருதியின் அம்மா அவங்க மாமியார் வீட்டில் தான் ஏதாவது சண்டை போட்டு இருப்பாங்க நான் போய் பேசுறேன்னு சொல்லி வந்து விட மறுபக்கம் ரோகினியின் கணவருடைய அண்ணனும் அவரது மனைவியும் வீட்டுக்கு வருகின்றனர் பிறகு என்ன சொல்லுகிறார்? ரோகிணி அம்மா என்ன பேசுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்

siragadikka asai serial episode update 26-01-26

