siragadikka asai serial episode update 17-03-25
மனோஜ் சொன்ன வார்த்தையால் முத்து கொடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வம் முத்துவின் வீட்டிற்கு வருகிறார். உடனே முத்து அவரை வரவேற்று நானே செட்டுக்கு வரலாம்னு இருந்தேன். நீயே வந்துட்ட என்னடா விஷயம் என்று கேட்க அம்மா அப்பா காசிக்கு போனதாகவும் அதற்காக பிரசாதம் எடுத்துக் கொண்டு வந்திருப்பதாகவும் சொல்லுகிறார் அம்மாவும் அப்பாவும் இல்லையா என்று கேட்க அவங்க பரசு மாமா பொண்ணு கல்யாணத்துக்கு புடவை எடுத்துட்டு அப்படியே காஞ்சிபுரத்தில் இருக்கிற கோயிலை பார்த்துட்டு வர போயிருக்காங்க ரெண்டு நாள் ஆகும் என்று சொல்லுகிறார்.
அவர்கள் பிரசாதம் கொடுத்து விட்டு கிளம்பப் போக மீனாவும் முத்துவும் அவர்களை சாப்பிட சொல்லுகின்றனர். அவர்கள் இருவரும் முதலில் சாப்பிட மறுக்க மீனா வலுக்கட்டாயமாக சாப்பாடு போடுகிறார் கொஞ்ச நேரத்தில் ரோகினி வந்து மனோஜ்க்கு டைம் ஆகுது மீட்டிங் போகணும் டிபன் ரெடியா என்று கேட்க ஒரு பத்து நிமிஷம் இருங்க திடீர்னு வந்துட்டாங்க அவங்க சாப்பிட்ட உடனே சாப்பிட்டுக்கிட்டோம் என்று சொல்ல அதற்கு ரோகினி ரூமுக்கு சென்று இரு ஏற்கனவே சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க அவங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் நீ சாப்பிட்டு போ என்று சொல்ல என்ன ஹோட்டல்ல இருக்குற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். பிறகு செல்வம் மற்றும் அவரது மனைவி சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து கண்ட கண்டவங்களுக்கு எல்லாம் நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கணுமா எனக்கு மீட்டிங் டைம் ஆகுது என்று ஓவராக சத்தம் போட முத்து அவரை ரூமில் போய் சமாதானம் செய்ய பார்க்கிறார்.
ஆனால் மனோஜ் செல்வம் மற்றும் அவரது மனைவியை அசிங்கப்படுத்தி பேச அவர்கள் இருவரும் சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகின்றனர் மீனா மற்றும் ரவி இருவரும் சாப்பிட்டு போக சொல்ல அவர்கள் வேண்டாம் என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகின்றனர். முத்து மனோஜிடம் எதுவா இருந்தாலும் அவங்க போனதுக்கப்புறம் பேசிக்கலாம் என்று பொறுமையாக பேசிக் கொண்டிருக்க ஆனால் மனோஜ் பொறுமையை இழந்து கத்திக் கொண்டே இருக்கிறார். உடனே முத்து வெளியே வந்து செல்வம் எனப் பேச அவர் இல்லாததால் எங்கே என்று கேட்கிறார் அவங்க அப்பவே போயிட்டாங்க என்று சொல்ல மனோஜ் அப்போ நான் போய் சாப்பிடுறேன்னு வருகிறார். உனக்கென்ன இப்ப சாப்பிடணும் அவ்வளவு தானே என்று டைனிங் டேபிளில் மனோஜ் உட்கார வைத்து தோசை எடுத்து வாயில் அப்பிவிட ரோகினி எதுக்கு இப்படி பண்றீங்க முத்து என்று கேட்கிறார். உடனே ஸ்ருதி உங்க ஹஸ்பண்ட் பேசுனது மட்டும் தப்பு இல்லையா அவரால் தான் பிரச்சனை ஸ்டார்ட் ஆச்சு என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் உனக்கு என்னடா இப்போ என்ன கொல்லனுமா ஏற்கனவே நீ ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன் தானே என்று சொல்ல உடனே கோபப்பட்ட முத்து அலமாரியில் இருந்து கத்தியை எடுத்து மனோஜை குத்த ஓடுகிறார் அந்த நேரம் பார்த்து ஸ்ருதி அம்மா வந்து விடுகிறார்
என்னாச்சு ஸ்ருதி என்று கேட்க நீ எதுக்குமா இப்ப இங்க வந்த என்று கேட்கிறார். கையில கத்தியெல்லாம் வச்சிருக்கான் என்று சொல்ல உடனே ரோகினி ஆமாண்டி நீங்க வரல என்றால் இந்நேரத்துக்கு மனோஜ் குத்திருப்பாரு என்று சொல்ல என்ன நடக்குது உன்னை இங்க விட்டுப் போகவே பயமா இருக்கு என்று சொல்ல சுருதி சமாதானப்படுத்தி அவரை அனுப்பி வைக்கிறார் உடனே இவர்களிடம் அந்த ஸ்ருதி இரண்டு பேரும் மேலயும் தப்பு இருக்கு ரெண்டு பேரும் மன்னிப்பு கேளுங்க என்று சொல்லுகிறார். ரோகினி தனியாக அழைத்து சென்று மாமா முத்துக்கு தான் சப்போர்ட் பண்ணுவாரு தேவையில்லாம பிரச்சனை வேண்டாம் நீ சாரி கேளு என்று சொல்ல மீனா மாமாக்கு தெரிஞ்சா மனசு கஷ்டப்படும் இந்த பிரச்சனையை உங்களோட முடிச்சுக்கோங்க மாமாவிற்கு எடுத்துட்டு போக வேணாம் என்று சொல்லி இருவரும் சாரி கேட்டுவிட்டு கிளம்புகின்றனர் முத்து கோபமாக உட்கார மீனா அவர் எதுக்கு நீங்க ஜெயிலுக்கு போனவர் என்று சொல்கிறார்கள் என்று சொல்ல உடனே ஏதாச்சும் சின்ன சின்ன கேசுக்கு போறேன் இல்ல என்று சொல்லி சமாளித்துவிட்டு மீனாவிடம் டீ கேட்கிறார்.
மறுபக்கம் கிச்சனில் மீனா வேலை பார்த்துக் கொண்டிருக்க ஸ்ருதி போன் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிற ரோகிணி வருகிறார். என்னாச்சு ஸ்ருதி எதுக்கு சிரிக்கிறீங்க என்று கேட்க இது ஒரு ஃபன் ஆன கேம் என்று சொல்ல உடனே ரோகினி இங்க பல பேருக்கு ஃபன் பண்ணிக்கிட்டு தான் இருக்காங்க என்று சொல்லுகிறார் உடனே மீனா கோபப்பட்டு பல பேர் என்றால் இங்கே 100 பேரா இருக்காங்க என்று சொல்ல நான் பொதுவா தான் வாக்குவாதம் வர ஸ்ருதி இருவரையும் சமாதானப்படுத்துகிறார் பிறகு இந்த கேம் நம்ம வீட்ல இருக்கிறவங்க கூட விளையாடலாம் என்று சொல்லி அவர்களையும் சம்மதிக்க வைக்கிறார் பிறகு நான் ரவி கிட்ட பேசுறேன் நீங்க ரெண்டு பேரும் உங்க வீட்ல பேசி கூட்டிட்டு வாங்க என்று சொல்லுகிறார்.
பிறகு ஒரு வழியாக அனைவரும் கேம் விளையாட சம்மதிக்க, ஒருவர் பின் ஒருவர் திரும்பி நின்று ஒருத்தர் செய்யும் ஆக்க்ஷனை மற்றொருவர் செய்து காட்ட வேண்டும் இறுதிவரை கடைசியாக யார் கரெக்டாக செய்கிறார்கள் என்பதுதான் கேம் என்று சொல்ல முதலில் ரவி ஆரம்பிக்க மனோஜ் தப்பாக செய்கிறார் பிறகு ஒருவர் மாறி ஒருவர் முத்து செய்து முடிக்க ஃபைனலாக ரவி அதே ஸ்டெப் ஆட அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது உடனே அனைவரும் சந்தோஷமாக சிரித்து பேசி கொள்கின்றனர். உடனே மீனா ஸ்ருதிக்கு தேங்க்ஸ் சொல்லுகிறார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு ஆள் வந்து வீட்ல யாரும் இல்லையா என்று கேட்க என்ன விஷயம் என்று கேட்கிறார் இந்த டிரைவிங் ஸ்கூல் கற்றுக் கொடுக்கிறார்கள் யார் என்று கேட்க என்னோட அண்ணன் தான் என்று சொல்லி முத்துவை கூப்பிட்டு விஷயத்தை சொல்லுகிறார் யாருக்கு வாங்க கத்துக்கலாம் என்று சொல்ல எனக்கு இல்ல எங்க அக்காவுக்கு கத்துக்கணும் என்று சொல்லி காரில் இருப்பதாக சொல்லுகிறார். முத்து வெளியில் சென்று பார்க்க காரில் சிந்தாமணி இருக்க மீனாவிற்கு ஃபோன் போட்டு கீழே வர சொல்லுகிறார். மீனா விடம் என்ன பேசுகிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? சிந்தாமணி என்ன சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…