மனோஜ்க்கு ஆறுதல் சொன்ன விஜயா,ஸ்ருதி அம்மா கேட்ட கேள்வி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பார்வதி வீட்டுக்கு சென்று விஜயா சண்டை போட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சாப்பிடாமல் இருக்க முத்து தட்டில் சாப்பாடு போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். அப்பொழுதும் மீனா சாப்பிட மறுக்க உடனே முத்து நானும் ரெண்டு நாளா சாப்பிடல ஆனா என் உடம்பு தாங்கும் உன் உடம்பு தாங்காது சாப்பிடு என்று சொல்ல,நீங்க ஏன் சாப்பிடல முதல நீங்க சாப்பிடுங்க என்று மீனா சொல்லுகிறார். முதல்ல நீ சாப்டா தானே சாப்பிட்டுவேன் என்று சொல்ல முத்து மீனாவே உட்கார வைத்து ஊட்டி விட வேண்டாம். முத்துக்கு ஊட்டி விடுகிறார் பிறகு இதை பார்த்து குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர். மறுபக்கம் விஜயா கோபமாக பார்வதி வீட்டுக்கு வந்து அந்த பார்லர் காரிய கூட்டிட்டு வந்தது நீ தானே என் பையன் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன் நீ தான் அவளை இந்த ஊரை விட்டு தொரத்தனும் என்று சொல்ல பார்வதி என்னால் எப்படி பண்ண முடியும் என்று கேட்கிறார்.

ரோகிணி பண்ணது தப்புதான் ஆனா நான் அவளை அறிமுகம் மட்டும் தான் படுத்தி வச்ச அவ பணக்காரனு தெரிஞ்ச உன் பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்ச அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிட்டு அதுக்கு நான் என்ன பண்ண முடியும் என்று கேட்க அதெல்லாம் எனக்கு தெரியாது நீ சொல்லித்தான் நான் பண்ணு என்று சொல்ல உடனே சிவன் பார்வதியால் எப்படி சொல்ல முடியும். எத்தனையோ பேரை பார்வதி உங்களுக்கு அறிமுகப்படுத்தி வச்சிருக்கலாம். அதுக்காக இப்படி சொல்ல முடியாது என்று சொல்லிவிட உடனே விஜயா கோபமாக உன்கிட்ட வந்தது ஏன் தப்பு தான் இனிமே நான் வரவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். சீதாவும் அவரது அம்மாவும் மீனாவுக்கு சாப்பிட கொடுக்க வேண்டாம் என்று சொல்லுகிறார் திருப்பியும் இன்னைக்கும் சாப்பிடாமல் இருக்க போறியா அதான் மாப்பிள்ளை சொல்லி இருக்காரு இல்ல சாப்பிட சொல்லி என்று சொல்லி சாப்பாடை கொடுக்க மீனாவும் ஒரு வாய் சாப்பிடுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் முத்து பழங்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார்.

அவ பண்ணது தப்புதான் அதை எல்லாம் மறக்க முடியாது அதுக்காக சாப்பிடாம இருக்க தேவையில்ல சாப்பிடுங்க என்று சொல்ல உடனே மீனா நீங்க சாப்டீங்களா என்று கேட்கிறார் நான் சாப்பிட்டேன் என்று சொல்ல நிஜமாகவே சாப்பிட்டீங்களா என்று கேட்க எனக்கு பொய் சொல்லவும் மறக்கவோ தெரியாது உண்மைதான் சொல்லுவேன் என சொல்லுகிறார் உடனே மீனாவின் முகம் மாறுகிறது. மனோஜ் ரூமிலேயே ரோகினி என் நினைவால் அழுது கொண்டு இருக்க விஜயா வந்து இப்படியே இருக்கிறது எனக்கு ரொம்ப பயமா இருக்குடா என்று சொல்ல அவளை நான் எவ்வளவு நம்பினோமா இந்த ரெண்டு வருஷத்துல அவ தான் என்னோட உலகம் உன்னை நினைச்சேன் எனக்கு இப்படி துரோகம் பண்ணிட்டாளே அவ இல்லாம நான் எப்படி வாழ போற என்று கண்கலங்குகிறார். நீ அவளை மறந்துடுடா என்று சொல்ல அது எப்படி என்னால மறக்க முடியும் அவ மேல நான் இவ்வளவு பாசமா இருந்தேன் தெரியுமா என்று சொல்லுகிறார்.

நீ இப்படியே இருக்காதுடா வந்து வெளியே உட்காரு என்று மனோஜை அழைத்துக் கொண்டு வந்து வெளியில் உட்கார வைக்கிறார் அண்ணாமலை வந்தவுடன் உங்களுக்கு தெரிந்த வக்கீல் இருந்தா சொல்லுங்க அந்த பார்லர் காரிய டைவர்ஸ் பண்ணி துரத்தி விடணும் என்று சொல்ல ஏற்கனவே அவசரப்பட்டு எடுத்த முடிவுனால தான் இப்படி இருக்கு இதுக்கப்புறம் அவசரப்பட வேணா பொறுமையா இரு என்று சொல்லுகிறார் அங்க மீனாவுக்கு உடம்பு சரியில்லாம இருக்கு அத பத்தி ஏதாவது கேட்டியா என்று கேட்க அவளை எதுக்கு நான் கேட்கணும் அவ எங்க எல்லாரையும் சாவடிச்சிட்டு தான் சாவா என்று சொல்லுகிறார். உடனே ஸ்ருதியின் அம்மா கொஞ்ச நேரத்தில் வந்து என்ன பேசுகிறார்? அதற்கான அண்ணாமலை பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 14-01-26
jothika lakshu

Recent Posts

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் தகவலை கொடுத்த நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…

10 hours ago

ஏகே 54 என்பது தான் இயங்க ரசிகர்களை பயன்படுத்தாத ஒரு பீரங்கி.. பார்த்திபன் பேச்சு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

10 hours ago

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

14 hours ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

14 hours ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

17 hours ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

1 day ago