siragadikka asai serial episode update 08-04-25
முருகன் காதலை ஏற்றுக் கொண்டுள்ளார் வித்யா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் ஷோரூமுக்கு வந்த ஐயர் ரோகினி உங்க பெயருக்கு அர்ச்சனை பண்ண சொல்லி இருந்தாங்க உங்களுக்கு கண் ஆப்ரேஷன் நடக்கப்போறதா சொல்லி சொல்லி இருந்தாங்க என்று சொல்லி அர்ச்சனை தட்டு கொடுத்துவிட்டு போகிறார். இது மட்டும் இல்லாமல் உடனே கடையில் வேலை செய்யும் ஆட்கள் லேட்டாக வர இப்போ தான் வருவீங்களா என்று மனோஜ் கேட்கிறார் அதற்கு அவர்கள் வீடு வீடா போயிட்டு நோட்டீஸ் கொடுத்துட்டு வர நிறைய பேர் வாங்க வரேன்னு சொல்லி இருக்காங்க வெயில் காலன்றதனால ஏசி வாங்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க நம்மளுக்கு நல்ல பிசினஸ் வரும் என்று சொல்லிவிட்டு இதுக்கெல்லாம் காரணம் மேடம் தான் என சொல்லுகிறார். மறுபக்கம் ரோகிணி வித்யாவிற்கு ஃபோன் போட்டு பேசுகிறார் எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு என்று கேட்க, என் வாழ்க்கை போக கஷ்டமா இருக்கு.
மனோஜோட அம்மா ஷோரூம் போகக்கூடாது மனோஜ் கிட்ட பேசக்கூடாது பார்லர் போக கூடாதுன்னு எதுக்கு எடுத்தாலும் ஏகப்பட்ட கண்டிஷன் போட்டுக்கிட்டு இருக்காங்க எனக்கு ரொம்ப டென்ஷன் ஆகுது மனோஜ் அவங்க அம்மா பேச்சை கேட்டுகிட்டு பேச மாட்டேங்குறான் என்று சொல்லுகிறார். உடனே வித்யா அதுக்கு தான் நீ ஏதாவது ஒரு பிளான் பண்ணுவியே என்று சொல்ல பண்றேன் கூடிய சீக்கிரம் ஏதாவது ஒன்னு பண்றேன்னு சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து வித்தியா வீட்டு காலிங் பெல் அடிக்க உடனே யாரோ வந்திருக்காங்க நான் அப்புறம் பேசுறேன் என போனை வைக்கிறார்.
கதவைத் திறந்து பார்க்க முருகன் நிற்கிறார் உள்ள எல்லாம் கூப்பிட மாட்டீங்களா என்று கேட்க சரி வாங்க என்று அழைத்து வந்து கையில் கேக்கை கொடுக்கிறார். என்னங்க இந்த வாட்டி உங்க பிரண்டு யாராவது கேக் கடை திறந்து இருக்காங்களா டேஸ்ட் பண்ணி சொல்லுமா என்று சொல்ல அப்படி எல்லாம் இல்லைங்க இன்னைக்கு என்னோட பிறந்த நாள் என்று சொல்லுகிறார். உடனே வித்யா முருகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுகிறார். உடனே ஒரு டேபிளை அரேஞ்ச் பண்ணி அதில் கேக்கை திறந்து வைக்க அதில் ஐ லவ் யூ வித்யா என்று எழுதி இருக்கிறது. அதனை பார்த்த வித்யா ஹாப்பி பர்த்டே தானே இருக்கும் இது என்ன இப்படி இருக்கு என்று கேட்க என் மனசுல இருக்குறத சொல்லிட்டேன் உங்க மனசுல என்ன இருக்குதுன்னு இன்னைக்கு சொன்னீங்கன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்று சொல்லுகிறார். உடனே வித்தியாவும் கேக்கில் லவ் என இருக்கும் எழுத்தை மட்டும் கட் பண்ணி முருகனுக்கு ஊட்டி விட்டு அவரின் காதலை வெளிப்படுத்துகிறார். கூடவே சந்தோஷத்தில் முருகன் துள்ளி குதிக்க வித்யா சந்தோஷப்படுகிறார்.
மறுபக்கம் முத்துவின் சவாரிக்காக இரண்டு பேர் காத்துக் கொண்டிருக்க வந்தவுடன் காரில் ஏறுகின்றனர் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்க 45 நிமிஷம் ஆகும் என முத்து சொல்லுகிறார் உடனே அவ்வளவு நேரம் இருக்கா என்று சொல்லி முதலில் மிச்சர் சாப்பிட்டவர்கள் பிறகு சரக்கு பாட்டில் எடுத்து குடிக்க போக முத்து காருக்குள்ள குடிக்காதீங்க என்று சொல்லுகிறார் ஆனால் அவர்கள் டிரைவர் தான் கொடுக்கக் கூடாது நாங்க குடிக்கலாம் என்று யாராவது பேச முத்து காரை நிறுத்தி அவர்களை கீழே இறங்க சொல்லுகிறார் அவர்கள் வம்பு இழுத்துக் கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் நாங்க யாருன்னு தெரியுமா சிட்டி அண்ணனுக்கு போன் பண்றா என்று சொல்ல உடனே இதை கவனித்து முத்து நீங்க சிட்டி அண்ணனோட ஆளுங்களா முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதா என்று அவர்களை பேசி காரில் அழைத்து செல்கிறார். சத்யாவை சிட்டியிடம் அழைத்து வருகின்றனர் எதுக்கு என்ன கூட்டிட்டு வர சொன்ன என்று சொல்ல உன்னை மாதிரி கணக்கு பார்க்க இங்கு ஆள் இல்லை நீ வேலைக்கு போய் எவ்வளவு சம்பாதிப்பியோ அதைவிட அதிகமாகவே நான் உனக்கு பணம் கொடுக்கிறேன் நீயே கணக்கு பார் என்று சொல்ல சத்தியா முடியாது என்று சொல்லுகிறார்.
உன்ன பரீட்சை எழுத விடமாட்டேன் என மிரட்டிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முத்து அந்த ஆட்களுடன் உள்ளே வருகிறார் நீ இங்க என்னடா பண்ற என்று சொல்லிக்கொண்டே கொஞ்ச நேரம் இரு சிட்டியா முன்னாடியே அவங்களுக்கு மரியாதை கொடுத்துவிட்டு வருகிறேன் என்று இருவரையும் சிட்டி கண்முன்னே வெளுத்து வாங்குகிறார். உடனே சத்தியா சிட்டி சொன்ன விஷயங்களை சொல்ல நீ போய் அவனை பரிச்சை எழுதாமாக்க போறியா நீ என்ன பிரின்ஸ்பலா அவ நல்லா படிச்சு பாஸ் பண்ணி பெரிய ஆபீஸரா வருவான் உன்னால ஒன்னும் பண்ண முடியாது என்று சிட்டியிடம் சவால் விட்டுவிட்டு சத்யாவை அழைத்துச் செல்கிறார். மீனா கிச்சனுக்கு வர ரோகிணி சமைத்துக் கொண்டு இருக்கிறார். மீனா என்ன கேட்கிறார்? ரோகிணியின் பதில் என்ன? சுருதி என சொல்லுகிறார்?என்பது எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Thennaadu Lyric Video | Bison Kaalamaadan ,Dhruv, Anupama , Mari Selvaraj , Nivas K Prasanna…
Tere Ishk Mein Teaser Tamil | Dhanush, Kriti Sanon | AR Rahman | Aanand L…
Aaryan Tamil Teaser | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…