Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயா எடுத்த முடிவு,வித்யா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

siragadikka asai serial episode update 03-01-2025 siragadikka asai serial episode update 03-01-2025

அண்ணாமலை சொன்ன வார்த்தையால்,விஜயா மனம் மாறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவிடம் அண்ணாமலை ரெண்டு பேர்தான் தப்பு பண்ணி இருக்காங்க அதுக்காக நீ ரோகினிக்கு மட்டும் தான் தண்டனை கொடுக்கிறது சரியா. உன்னோட பையன் கூட தான் உன்கிட்ட இருந்து உண்மையை மறைச்சா நீ ஏன் அவனை எதுவுமே சொல்லல என்று கேட்க அதற்கு விஜயா அந்த ரோகிணி தான் சொல்ல வேணாம் சொல்லி இருப்பா என்று சொல்ல அதற்கு அண்ணாமலை மனோஜ்காக தானே செஞ்சா விடு இது காரணமா வச்சு நீ அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சி வச்சு இருக்கிறதுல்ல என்ன நியாயம் இருக்கு என்று கேட்கிறார்.

நீ இப்படி பிரிச்சி வைக்கிறதுனால வாழ்க்கையை பிடிக்காமல் ரோகினி மலேசியா போயிட்டா என்ன பண்ணுவ என்று கேட்க விஜயா அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம் ரோகினி வித்யா வீட்டில் உட்கார்ந்து அழுது கொண்டே இருக்கிறார் வித்யா அவருக்கு ஆறுதல் சொல்ல நான் இவ்வளவு கோபப்படுவார்கள் என்று நினைக்கல பார்லர் விஷயம் தெரிஞ்சு திட்டின மாதிரி திட்டுவாங்கன்னு தான் நினைச்சேன் இதுக்கெல்லாம் காரணம் முத்து தான் என ஏதாவது ஒரு விஷயத்துல மாட்டி விடணும்னு நினைச்சு பண்ணிட்டான் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார்.

மீனாவும் முத்து அண்ணாமலை விஜயாவிடம் பேசிய விஷயத்தை பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மனோஜ் வர விஜயா மனோஜிடம் ரோகினி எங்கே என்று கேட்க கடைக்கும் வரலாமா ஃபோன் பண்ணல என்று சொல்லுகிறார் சரி போன் பண்ணி வர சொல்லு என்று சொல்ல மனோஜ் ரோகினிக்கு போன் போட ரோகினி போனை எடுக்க மறுக்கிறார்.

உடனே மனோஜ் பார்லருக்கு போன் போட அவர்களும் அங்கு ரோகிணி வரவில்லை என்று சொல்லுகின்றனர் கொஞ்ச நேரம் அப்படியே யோசித்துக் கொண்டிருக்க முத்து மீனாவிடம் ஒன்று போயிருந்த அம்மா வீட்டுக்கு போயிருக்கணும் இல்லனா பிரண்டு வீட்டுக்கு போய் இருக்கணும் இதைவிட இன்னும் யோசிக்க தெரியாது என்று சொல்ல மனோஜ் உடனே வித்யாவிற்கு ஃபோன் போடுகிறார் ஆனால் ரோகிணி வித்யாவையும் போன் எடுக்க கூடாது என்று சொல்லிவிடுகிறார்.

மறுபடியும் ரோகினி மற்றும் வித்யாவிற்கு ஃபோன் போட்டுக் கொண்டே இருக்க வித்யா போனை எடுத்தவுடன் ரோகிணி இங்க வரல என்று சொல்லுகிறார் நான் கேட்கவே இல்லையே என்று சொல்ல இல்ல நீங்கள் பண்ணா ரோகினி பற்றி தானே கேட்பீங்க அதனால் தான் சொன்னேன் என்று சொல்ல ரோகிணி வந்தா அம்மா வீட்டுக்கு வர சொன்னா தான் சொல்லு என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். உடனே ரோகினி இடம் இப்ப கூட அவங்க அம்மா சொன்னாதான் உனக்கு போன் பண்றேன் அதே அவங்க அம்மா ஒன்னும் எல்லாம் தெரிஞ்சு இந்த பொண்ணு உனக்கு வேண்டான்னு சொன்னா அவ விட்டுட்டு போயிடுவான் இல்ல என்று சொல்ல ரோகினி உன்ன குழப்புவதற்காக நான் சொல்லல இருக்கிற உண்மையை சொல்றேன் என்று சொல்லுகிறார். ரோகினையும் வேறு வழியில்லாமல் வீட்டிற்கு வருகிறார்.

ரோகினி மனோஜ் என்ன சொல்லுகின்றனர்? விஜயாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


siragadikka asai serial episode update 03-01-2025