தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் கோமதி பிரியா பாலகுமாரன். வேலைக்காரன் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாக பிரபலமடைந்து தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
மாதத்தின் 30 நாளில் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வந்தாலும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தினம் தினம் விதவிதமான போட்டோக்களை வீடியோக்களையும் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது கையில் கேமராவுடன் போட்டோகிராபராக மாறி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
View this post on Instagram