Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மீனா வெளியிட்ட பதிவு, ரசிகர்கள் ஷாக்.!!

siragadikka aasai serial meena latest news update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா.

இந்த சீரியலுக்கு பல ரசிகர்கள் இருப்பது மட்டுமில்லாமல் கோமதி பிரியாவிற்கு என தனி ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.

இப்படியான நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் ரீமேக்காக மலையாளத்தில் செம்பனீர் பூவே என்ற சீரியலிலும் கோமதி பிரியா நடித்து வந்தது அனைவருக்கும் தெரியும். தமிழில் சிறகடிக்க ஆசை சீரியல் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மலையாளத்திலும் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் திடீரென்று அவர் செம்பனீர் பூவே என்ற சீரியலில் இருந்து விலகி உள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் விலகியதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்துள்ளனர்.

அதற்கு பதில் அளித்த கோமதி பிரியா, அதில் உங்கள் வாழ்க்கையை அழிக்க யாருக்கும் அதிகாரம் கொடுக்காதீர்கள் நீங்கள் வென்று அனைத்தையும் ஒரு போராளியாக பார்க்கிறேன் உங்கள் தன்னம்பிக்கையை எப்போதுமே விட்டுவிடாதீர்கள் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி உள்ளது.