தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா பூ கட்டுப்பவர்களை பார்க்க வந்திருக்க அவர்கள் தங்களது நிலையை சொல்லி கவலைப்படுகின்றனர். அதன் பிறகு புருஷன் பேச்சை எடுக்க ஒரு பெண்மணி என் புருஷனுக்கு பெசலட் தோசை செய்து கொடுத்தேன். அந்த ஆளு ஒண்ணுமே சொல்லல என்று சொல்ல எல்லா புருஷனும் அப்படித்தான் என்று இன்னொரு பெண்மணி சொல்ல மீனா எல்லாரையும் அப்படி சொல்லாதீங்க என் புருஷன் எது செஞ்சு கொடுத்தாலும் பாராட்டுவார் என்று பெருமை பேசுகிறார்.
ஆசை 60 நாள் மோகம் முப்பது நாள் அவ்வளவுதான் கல்யாண வாழ்க்கை.. அப்புறம் எல்லாரும் ஒரே மாதிரி தான். நீ வேணா பெசலெட் தோசை செஞ்சு கொடு.. நல்லா இருக்கான்னு நீ கேட்கக்கூடாது அவங்களா பாராட்டணும் என்று கண்டிசனோடு ஐம்பது ரூபாய் பெட்டு கட்ட மீனா என் புருஷனை நம்பி 5 ஆயிரம் கூட பெட்டு கட்டுவேன் என்று பில்டப் கொடுக்கிறார்.
அடுத்து மனோஜ் கலர் கலரா வாங்கி வைத்திருக்கும் சட்டைகளை விஜயா மற்றும் ரோகினியிடம் காட்டி இனிமேல் இப்படித்தான் டிரஸ் பண்ண போறேன் என்று சொல்ல மனோஜை திட்டி விடுகின்றனர். ஆனாலும் மனோஜ் என் வளர்ச்சியை பார்த்து நிறைய பேர் அதை கெடுக்க முயற்சி பண்றாங்க அதனால நான் ஜோசியர் சொல்வதை தான் கேட்கப் போறேன் என்று சொல்கிறார்.
இதைத் தொடர்ந்து மீனா பெசலெட் தோசை செய்ய முதலில் சாப்பிடும் அண்ணாமலை ஆகா ஓகோனு பாராட்டுகிறார். அடுத்து விஜயா என்ன இது பச்சை பச்சையா இருக்கு? பச்சை மிளகாய் அரைச்சி ஊத்தி கொல்ல பாக்குறியா என்று திட்ட அண்ணாமலை அது குறித்து விளக்கம் கொடுக்க பிறகு சாப்பிட்டு பார்த்துட்டு சாப்பிடுற மாதிரி தான் இருக்கு என்று சொல்கிறார்.
எல்லோரும் சாப்பிட்டு விட்டு மீனாவை பாராட்ட முத்து நடந்து கொண்டே சாப்பிடுகிறார். ஒவ்வொரு முறையும் மீனாவை கூப்பிட மீனா ஆவலோடு ஓடிப் போக சட்னி, தண்ணீர் என கேட்டு ஏமாற்றம் கொடுக்கிறார். கடைசி வரை முத்து எதுவும் சொல்லாமல் கிளம்பிச் செல்ல மீனா கவலைப்படுகிறார்..
அடுத்து மனோஜ் ரோகினி கடைக்கு வந்ததும் க்ரிஷ் போன் செய்ய ரோகிணி போனை எடுத்துப் பேசும்போது எனக்கு பிறந்தநாள் வருது நீ வருவ தானே என்று கேட்கிறான். ரோகிணி கண்டிப்பா வருவேன் என்று சொல்ல எனக்கு கோட்டு சூட்டு வாங்கிட்டு வாங்க.. நீங்க கொண்டு வர டிரஸ் தான் நான் போட்டுட்டுவேன் என்று சொல்கிறான். ரோகிணி நான் வாங்கிட்டு வரேன் என்று பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த மனோஜ் யாரு எங்க வரன்னு சொல்ற என்று கேட்க கிளைன்ட் வீட்ல பர்த்டே பார்ட்டி ஒன்னு அதுக்காக வரேன்னு சொன்னதாக சொல்லி சமாளித்து கடைக்கு செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…
Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…
Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…