தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாட்டி மனோஜ் பணத்தை கொடுக்க சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைய விஜயா வேறு வழியின்றி பணத்த கொடுத்துடுடா அதனால தானே இவ்வளவு பிரச்சனை என்று சொல்கிறார்.
பாட்டி அதோடு நிறுத்தாமல் மனோஜ் கொடுப்பானு எனக்கு நம்பிக்கை இல்லை அவன்கிட்ட இருந்து மாசம் மாசம் பணத்த வாங்கிக் கொடுக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்று விஜயாவிடம் சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்ததாக ரூமுக்கு வந்த மனோஜ் ரோகினியிடம் எதுக்கு ரோகினி பணத்தை கொடுக்கிறேனு ஒத்துக்கிட்ட என்று கேட்க வேற வழியில்லை என்று கோபப்படுகிறார்.
பிறகு விஜயா ரூமுக்குள் வர மனோஜ் எதுக்குமா பணம் கொடுக்க சொன்னீங்க என்று கேள்வி கேட்க எடுத்தது நீதானா அப்போ நீ தான் கொடுக்கணும் என்று கோபப்படுகிறார். உடனே ரோகினியிடம் எப்படியாவது உங்க அப்பாவ பணத்தை ரெடி பண்ண சொல்லுமா.. இந்த பணத்தை கொடுத்தால் தான் நாம் இந்த வீட்டில் நிம்மதியா இருக்க முடியும்.
அந்தப் பூ கட்டுறவ முன்னாடி நான் மன்னிப்பு கேட்கிற மாதிரி ஆகிப்போச்சு என்று ஆவேசப்படுகிறார். மனோஜ் அதான் அங்கிள் ஜெயில்ல இருக்காரே என்று சொல்ல கடை திறக்கிறதுக்காக பணத்தை அனுப்ப தெரிஞ்சவருக்கு இப்ப பணத்தை அனுப்ப தெரியாதா என்று பதிலடி கொடுக்கிறார் விஜயா.
உன்ன பெத்ததுக்காக நான் தான் கஷ்டப்படுறேன் ஆனா கட்டிக்கிட்டதுக்காக ரோகிணியும் கஷ்டப்படனுமா என்று திட்ட எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம் என்று மனோஜ் அதிர்ச்சி கொடுக்க விஜயா நான் என்ன பண்ணேன் என்று கேள்வி கேட்க நீங்க என்னை பெத்துக்கிட்டதோடு நிறுத்த வேண்டியது தானே.. அந்த முத்துவை பெத்துக்கிட்டதனால தானே இவ்வளவு பிரச்சனை என்று சொல்கிறார்.
அவன பெத்துக்கிட்டது தப்பு இல்ல உன்னை பெத்துக்காமல் இருந்திருக்கணும் என்று திட்டி வெளியே வருகிறார். பிறகு மனோஜ் ஜீவா கொடுத்த பணத்தில் மீதி ஒன்பது லட்சம் இருக்கு அதை கொடுத்து விடலாமா என்று கேட்க ரோகிணி அந்த பணத்தை எடுக்கக்கூடாது அது பிசினஸுக்கு வேண்டும் என்று திட்டுகிறார்.
அடுத்ததாக மீனா சமைக்க போக விஜயா சீக்கிரம் சமை என்று சொல்ல பாட்டி வீட்ல இருக்கேன் பெண்கள் எல்லாம் அவங்கவங்க புருசனுக்கு சமைத்து கொடுக்கணும் புருஷனுங்க பொண்டாட்டிக்கு சமைச்சு கொடுக்கணும் என்று டாஸ்க்கு கொடுக்கிறார். மனோஜ் எனக்கு தோசை சுட வராது என்று சொல்ல முத்து அவனுக்கு நகை, பணம் தான் சுட வரும் என்று கலாய்க்கிறான்.
அதன் பிறகு முதலில் அண்ணாமலை மற்றும் விஜயா தோசை போட எல்லோரும் வேடிக்கை பார்க்க அண்ணாமலை எனக்கு ரெண்டு போதும் உனக்கு என்று கேட்க விஜயா எனக்கு நாலு வேணும் என்று சொல்கிறார்.
அடுத்து மனோஜ் ரோகிணி தோசை போட மனோஜ் தோசை வராமல் கொத்து பரோட்டா போடுகிறார். இவர்களைத் தொடர்ந்து ரவி மற்றும் ஸ்ருதி தோசை போட ரவி ஸ்ருதிக்கு கற்றுக் கொடுத்து தோசையை திருப்பி போட சொல்ல சுருதி தவாவை திருப்பி போடுகிறார். ரவி நீ கிச்சன் பக்கமே வராத என்று துரத்தி விடுகிறார்.
அதன் பிறகு முத்து, மீனா ஜோடியாக தோசை போட்டு முடிக்க பாட்டி மாறி மாறி ஊட்டி விடனும் என்று அடுத்த டாஸ்க்கை சொல்ல மற்றவர்கள் எல்லாம் மாறி மாறி ஊட்டி விட ஆரம்பிக்க விஜயா அண்ணாமலையை பார்க்க அவர் அவங்கதான் இளம் ஜோடிகள் நாம கிடையாது சாப்பிடு என்று பல்பு கொடுக்கிறார்.
ஸ்ருதி வீட்டையே ரொமான்டிக் ஆக்கிட்டீங்க நீங்க லவ் மேரேஜா என்று கேட்க அடி போடி அம்மா என்று வெட்கப்படுகிறார் நாச்சியார் பாட்டி. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
