தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து விஜயா வளையலை தூக்கி வீசியதால் கோபப்பட விஜயா என்னடா பண்ணுவ தலையை எடுத்துடுவியா என்று கேட்கிறார். உன் பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்கிறார். அண்ணாமலை இதுக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்க சொல்ல விஜயா முடியாது என ரூமுக்குள் செல்கிறார்.
இதனால் மீனா கலங்கி நிற்க முத்து அவங்க வெளியவே வர ஏதாவது பண்ணுங்கன்னு சொன்னல.. உன்னை வச்சு பண்ணிட்டாங்க போதுமா என்று கேட்கிறார்.
அடுத்ததாக ரோகினி ஆண்ட்டியை போய் மீனா கிட்ட மன்னிப்பு கேட்க சொன்னா எப்படி கேட்பாங்க என்று சொல்ல எல்லாத்துக்கும் காரணம் மனோஜ் தான்.. அன்னைக்கே உண்மையை சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என சொல்கிறார் ரவி.
முத்து நகைக்கான 4 லட்சம் ரூபாய் பணம் எனக்கு வேண்டும் என்று சொல்ல மனோஜ் என்கிட்ட இப்போ அவ்வளவு பணம் எல்லா இல்லை என்று சொல்ல ரோகினி வளையலை ஆண்ட்டி கிட்டயே கொடுத்துடுறேன் என்று சொல்கிறார். ஸ்ருதி அப்போ இவங்களோட பணம் என்று கேட்க அதை நாங்க கொடுத்துடுறோம். கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க என்று சொல்ல முத்து உன்னை நம்பி டைம் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.
அடுத்ததாக ரோகிணி வளையலை கொண்டு வந்து கொடுக்க இதை எதுக்கு எடுத்துட்டு வந்த? அவ கிட்டயே கொடுக்க வேண்டியது தானே என்று சொல்ல ரோகிணி தப்பு பண்ணது மனோஜ்.. அதை அவன் தான் சரி செய்யணும், பணத்தை நாங்க கொடுத்துக்கிறோம் என்று சொல்கிறார்.
அடுத்து மனோஜ் மன்னிப்பு கேட்க உன்னால நடுத்தெருவில் தான் நிக்கணும் போல என்று சொல்ல நான் இருக்கும் போது ஏன் மா இப்படி பேசுறீங்க என்று கேட்க நீ இருக்கிறது தான் அவளோட பயமே என்று பார்வதி பதிலடி கொடுக்கிறார்.
பிறகு மனசு கஷ்டமாக இருப்பதாக பார்வதியும் விஜயாவும் கோவிலுக்கு வருகின்றனர். அப்போது பார்வதி அண்ணன் நீ மன்னிப்பு கேட்டா தான் பேசுவேனு சொன்னா என்ன பண்ணுவ என்று கேட்க அப்படினா அவர் பேசவே வேண்டாம் என்று சொல்கிறார். சுதா கோவிலுக்கு வர வெறும் கையாக இருப்பதை பார்த்து வீட்ல ஏதாவது பிரச்சனையா?என கேட்க இல்லை என சமாளிக்கிறார்.
அண்ணாமலை முத்து, மீனாவிடம் விஜயாவுக்காக மன்னிப்பு கேட்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…