தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ஒரு எலுமிச்சம் பழத்தை கொண்டு வந்து பூஜையறையில் வைக்க அது உருண்டோட அதன் பிறகு மனோஜ் அனுப்பி எடுத்து வைக்க சொல்ல மனோஜ் பழம் உருண்டோடாமல் இருக்க ஒரு பூவை எடுத்து வைக்கிறார்.
அடுத்ததாக வீட்டுக்கு வந்த முத்து இன்னொரு பழம் இருப்பதை பார்த்து மீனாவை கூட்டி வந்து காட்ட மீனா ரோகினியிடம் நீங்க ஏதாவது பழம் வச்சீங்களா என்று கேட்க அவர் இல்லை என்று சொல்கிறார். விஜயா நான் தான்டா வச்சேன், கோவிலுக்கு போயிருந்தேன் அங்க சாமி பாதத்துல வச்சு கொடுத்தாங்க அந்த பழத்தைக் கொண்டு வந்து வச்சேன் என்று சொல்கிறார்.
விஜயா மற்றும் மனோஜ் பேசியதை கேட்டு மீனாவுக்கு சந்தேகம் உறுதியாகிறது. அதன்பிறகு நைட்டானதும் மனோஜ், விஜயா தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். முத்து யாருக்கும் தெரியாமல் மனோஜ் ரூம் கதவை தட்டி விட்டு ஒளிந்து கொள்ள மனோஜ் கதவை திறந்து பார்த்து யாரும் இல்லாததால் பயப்படுகிறார். இதே போல் அடுத்தடுத்து நடக்க ஒரு கட்டத்தில் கதவை திறந்து வைத்து படுத்துக் கொள்ள முத்து எலுமிச்சம் பழத்தின் நூலை கட்டி அதை தூக்கிப்போட்டு எலுமிச்சம்பழம் நகர்வது போல செய்ய மனோஜின் பயம் உச்சத்தை தொடுகிறது.
உடனே விஜயாவுக்கு போன் போட்டு புலம்ப விஜயா நானும் தூக்கம் இல்லாமல் தான் இருக்கேன் என்று ஹாலுக்கு வர இருவரும் கூட்டு சேர்ந்து அந்தப் பழத்தை எடுத்து வெளியே போட்டு விடலாம். அந்த பழம் வீட்ல இருக்கிற வரைக்கும் தான் பிரச்சனை என்று சொல்கிறார்கள். அதன் பிறகு இருவரும் சேர்ந்து பழத்தைக் கொண்டு போய் வெளியே போட முயற்சி செய்யும்போது எல்லா பக்கமும் லைட் எரிய இருவரும் சிக்கிக் கொள்கின்றனர்.
அண்ணாமலை இந்த நேரத்துல என்ன பண்றீங்க என்று கேட்க தூக்கம் வரல என்று சொல்கிறார் விஜயா. கையில என்னது என்று கேட்க ஆன்ட்டி ஜூஸ் போட்டு குடிக்க போறீங்களா என்று ஸ்ருதி நக்கலாக கேட்கிறார். முத்து நான் சொன்ன மாதிரியே ரெண்டு பேரும் மாட்டிக்கிட்டாங்க என்று சொல்கிறார். விஜயா கண்ட கண்ட எலுமிச்சம்பழம் எல்லாம் வீட்ல இருந்தா வீட்டுக்கு நல்லது இல்ல அதனால தான் தூக்கி போட போனதாக சொல்ல அதை காலையில செஞ்சிருக்கலாமே என்று முத்து கேள்வி கேட்க சரி அவர் வச்ச பழத்த தூக்கி போடுறீங்க.. நீங்க வச்ச பழத்தை இதுக்கு கொண்டு வந்தீங்க என்று மடக்குகிறார்.
இவ்வளவு நாளா நீ என்கிட்ட ஒரு உண்மையை மறைச்சிருக்க என்று அண்ணாமலை கோபப்பட நான் என்னங்க மறைச்சேன் என்று விஜயா டிராமா போடுகிறார். முத்து அது ஒரு சாதாரண எலுமிச்சம்பழம்.. உங்கள பிடிக்கிறதுக்காக வச்சது என்று சொல்ல விஜயா என்னடா நாடகம் போட்டுக்கிட்டு இருக்கியா என்று கேட்க இல்லை இல்லை பொரி வச்சிருக்கேன் என்று சொல்கிறார்.
ரோகினி மனோஜை ரூமுக்குள் அழைத்துச் செல்ல மடக்கி பிடிக்கும் முத்து அக்யூஸ்ட் அவன் தான் கேஸ் நடக்கும்போது எங்கு கூட்டிட்டு போற என்று கேட்கிறார். ஒழுங்கு மரியாதையா உண்மைய சொல்லுடா என்று மிரட்டுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…