தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா சோகமாக உட்கார்ந்திருக்க கமலா பேசப்போக பேசாத என்று கோபப்படுகிறார். என்ன பொய்காரியா கொண்டு போய் நிறுத்திட்டல இனிமே நான் சொல்றத யார் நம்புவாங்க என்று ஆவேசப்படுகிறார்.
கமலா அப்படியே பேச்சை மயூ பக்கம் திருப்பி விடுகிறார். யாராவது அம்மாவுக்கும் பாட்டிக்கும் எதிரா சாட்சி சொல்லுவாங்களா அந்த பாக்கியா அப்படி சொல்ல சொன்னாளா என்று பிடித்து திட்ட மயூ நான் ஒன்னும் பொய் சொல்லல உண்மைய தான் சொன்னேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதை உனக்கு சொல்றதுக்கு நேரமே கிடைக்கலையா வீட்ல எங்க யார்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்ல என்று ராதிகா கோபப்பட்டு எழுந்து சென்று விடுகிறார்.
மறுபக்கம் கோபி குடித்துக் கொண்டு தன்னுடைய நண்பனிடம் நான் என் அம்மாவுக்கு பெரிய துரோகம் பண்ணிட்டேன் என்று வருத்தப்பட்டு அழுகிறார். யார் என்ன சொன்னாலும் நான் என் அம்மாவை நம்பி இருக்கணும் ஆனா அவங்களை நம்பல.. அவங்க என்கிட்ட ராதிகாவை பிடித்து தள்ளனன்னு சொன்னாங்க அப்போ கூட நான் நம்பாமல் போயிட்டேன் என்று வருத்தப்படுகிறார்.
என் அப்பா நான் பொறந்தே இருக்கக் கூடாதுன்னு சொன்னாரு அப்படின்னு பொறக்காம இருந்திருந்தா எங்க அம்மாவுக்கு இவ்வளவு பெரிய அவமானம் வந்திருக்காது என்று சொல்கிறார்.
அடுத்ததாக கமலா மீண்டும் மயூவை திட்ட மயூ ராதிகாவிடம் சாரி சொல்ல ராதிகா நடந்ததை கேட்கிறார். நீ எப்படி கோர்ட்டுக்கு வந்த பாக்கியாவுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று கேட்க மயூ நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார். கமலா அப்படியே இடையில் புகுந்து பாக்கியா மீது பழி சுமத்த முயற்சி செய்ய மயூரா உண்மையாகவே ஈஸ்வரி பாட்டி அம்மாவ பிடிச்சு தள்ளி விடல அவங்க அம்மாவ பிடிக்கத்தான் வந்தாங்க அதுக்குள்ள அம்மா கீழ விழுந்துட்டாங்க அப்பவும் அவங்க ஹெல்ப் பண்ண தான் வந்தாங்க என்று சொல்கிறார்.
இதை ஏன் நீ முன்னாடியே என்கிட்ட சொல்லல என்று கேட்க எனக்கு சொல்ல பயமா இருந்தது என்று சொல்கிறார். பாக்கியா ஆன்ட்டி பேசும்போது அழுதாங்க பாவமா இருந்தது அதனால உண்மையை சொல்லிட்டேன் என்று சொல்கிறார். அப்போ நான் அழுததெல்லாம் உனக்கு பாவமா இல்லையா என்று ராதிகா கேள்வி கேட்கிறார்.
மறுபக்கம் பாக்கியா பிரியாணி, சிக்கன் 65 என பெரிய விருந்தை ஏற்பாடு செய்து ஈஸ்வரியின் விடுதலையை கொண்டாட கோபி கண்ணீருடன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், தனது அடுத்த திரைப்படம் குறித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமூக…
நடிகர் சிலம்பரசன், ‘தக் லைப்’ படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து…
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பிரம்மாண்ட உளவு அதிரடி திரைப்படமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘ஐ எம் கேம்’ படத்தின் வெளியீட்டு தேதி…
நடிகர் ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான குடும்ப பிரச்சனை, விவாகரத்து வழக்கு மற்றும் அதனைச் சுற்றிய சர்ச்சைகள்…
PEDDI Trailer Tamil | Ram Charan | Shiva Rajkumar | Janhvi Kapoor | A R…