தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா மனோஜை போட்டு அடிக்க ரோகிணி தடுத்து நிறுத்தி போதும் ஆன்ட்டி விட்டுடுங்க.. அவர் ஒன்னும் யாரையும் ஏமாத்தலையே என்று பேசி மனோஜை ரூமுக்குள் அழைத்துச் சென்று எதுக்கு இப்படி பண்ண என்று கேட்க உன்கிட்ட சொல்ல பயமா இருந்தது என்று சொல்கிறார். ஆன்ட்டி இவ்வளவு கோபப்பட்டாங்க என்று சொல்ல அம்மாவுக்கு ஏற்கனவே உண்மை தெரியும் நகைய வித்தது நான்தான் என்று இன்னொரு உண்மையையும் உடைக்க ரோகினி பேரதிர்ச்சி அடைகிறார்.
அதன் பிறகு ரோகிணி மனோஜை அடித்து திட்டி விட்டு இந்த விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துக்கணும் என்று முடிவெடுக்க மறுபக்கம் ரவி, ஸ்ருதிக்கு மனோஜ் மீது சந்தேகம் வருகிறது.
மீனா உங்க அண்ணன் நகையை எடுக்கல போல அத்தையும் நகையை கொடுக்கல.. அதனாலதான் அவர போட்டு அந்த அடி அடிச்சாங்க என்று சொல்ல முத்து அவன காப்பாத்த தான் அடிச்சாங்க என்று தனது சந்தேகத்தை சொல்கிறார்.
முத்து சந்தோஷை பார்த்து பேச முடிவெடுத்து மறுநாள் பார்க்கிற்கு வந்து பேச்சு கொடுத்து கடன் கேட்பது போல கேட்டு மனோஜ்க்கு கடன் கொடுத்தது பற்றி விசாரிக்க நான் யாருக்கும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல கடன் கொடுக்க மாட்டேன் உன் அண்ணனுக்கு 30 ஆயிரத்துக்கு மேல கொடுக்கவே மாட்டேன் என்று உண்மையை உளற மனோஜ் பொய் சொன்னது அம்பலம் ஆகிறது.
பிறகு முத்து மீனாவிடம் விஷயத்தைச் சொன்னதும் மீனா அப்புறம் எப்படி பணம் வந்தது என்று யோசிக்க நகையை விற்று தான் வந்திருக்கு என்பதை உறுதி செய்கிறார். உடனே மீனா ஒரு சாமியார் இருக்காரு.. அவரை போய் பார்த்தா மை போட்டு பார்த்து சொல்லிடுவாரு என்று சொல்ல முத்து அதெல்லாம் வேண்டாம் என்று யோசித்து ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி மஞ்சள் தடவி தனது நெற்றியில் திருநீரை பூசிக்கொண்டு கெட்டப்பை மாற்றிக் கொண்டு வீட்டிற்கு கிளம்புகிறார்.
அடுத்ததாக அண்ணாமலை வீட்டில் நடந்து விஷயங்களை நினைத்து வருத்தப்பட ரவி மற்றும் சுருதி அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
