தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் செல்வம் சொன்ன பாதி இலை கடைக்கு முத்துவும் செல்வமும் பொருளை வாங்க வந்து இருக்க மனோஜ் கடையில் இருந்த அதே பிரிட்ஜ் 5000 ரூபாய் தான் என்று சொன்னதும் செல்வம் அதை வாங்குவதற்காக பணத்தை கொடுக்க போலீஸ் சுற்றி வளைத்து அனைவரையும் கைது செய்ய இவர்கள் மனோஜ் கடையில் கொள்ளை அடித்த கும்பல் என்பது தெரிய வருகிறது.
செல்வமும் முத்துவும் நாங்க பொருள் வாங்க தான் வந்தோம் என்று சொல்ல போலிஷ் அவர்களை கைது செய்து வந்து ஜெயிலுக்குள் அடைக்கின்றனர். அடுத்ததாக பொருளை ஏமாந்த கடைக்காரர்கள் ஒவ்வொருத்தராக ஸ்டேஷனுக்கு வந்து அவர்களது பொருட்களை எடுத்துச் செல்ல மனோஜ் ஓடிவந்து என்னுடைய பொருள் எதுவும் இல்லை என்று சொல்ல மனோஜ் குரலை கேட்ட முத்து மறைந்திருந்து அவன் பேசுவது அனைத்தையும் வீடியோவாக எடுக்கிறார்.
பிறகு போலீஸ் முத்து மற்றும் செல்வத்தை விடுதலை செய்ததும் வீட்டுக்கு வந்த முத்து ஸ்டேஷனில் நடந்தது அனைத்தையும் படம் போட்டு காட்ட எல்லோரும் அதிர்ச்சி அடைய அடுத்ததாக பணம் எப்படி வந்தது என்று முத்து மனோஜை மடக்கி பிடித்து கேள்வி கேட்க விஜய்யா இடையில் புகுந்து மனோஜை அடித்து யார்கிட்ட கடன் வாங்குன என்று அழுத்தி அழுத்தி கேட்க மனோஜ் என் பிரண்டு சந்தோஷ் கிட்ட கடன் வாங்குனதாக பொய் சொல்ல விஜயா திரும்பவும் அவனை அடிக்க ரோகினி விட்டுடுங்க ஆன்ட்டி அவன் ஏமாந்து போய் தான் நிக்கிறான்.. யாரையும் ஏமாத்தலையே என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
