Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாட்டி கேட்ட கேள்வி, பதறிய மனோஜ் ,விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி பாட்டி வாங்க உங்களுக்கு நான் மேக்கப் போட்டு விட்டேன் என்று கூட்டிக்கொண்டு மேக்கப் போட்டுவிட பாட்டி அவரது குடும்பத்தை பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டு ரோகினிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். ஒரு வழியாக பாட்டியை சமாளித்து மேக்கப் போட்டு இருக்கிறார் ரோகினி.

அதன் பிறகு அண்ணாமலை பரசுவின் மூலமாக இரண்டு ஐயர்களை வீட்டுக்கு வரவைத்து அம்பாளுக்கு சாத்திய புடவையை தனது அம்மாவுக்கு கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறார். ஒரு பக்கம் முத்து யாரையோ தேடி அலைந்து கொண்டிருக்க மறு பக்கம் மீனா முத்து வராததால் வருத்தத்தில் இருக்கிறார்.

அதன் பிறகு பாட்டிக்கு மாலை போட்டு குடும்பத்தினர் அனைவரும் ஆசீர்வாதம் வாங்க மீனாவையும் கூப்பிட மீனா அவர் வந்து விடட்டும் என்று சொல்கிறார். அதன் பிறகு கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க இங்கு வந்த பாட்டி நீ இன்னும் ரெடியாகலையா போய் ரெடியாகிட்டு வா.. இந்த வேலையெல்லாம் விஜயா பார்க்கட்டும் என்று அனுப்பி வைக்க அந்த நேரம் பார்த்து விஜயா அங்கு வர நீ போய் சமையல் வேலையை பாரு என துரத்தி விடுகிறார்.

அதன் பிறகு மீண்டும் மீனாவை கூப்பிட்டு உன் நகையெல்லாம் எங்கே விஜயா இன்னும் கொடுக்கலையா? என்று கேட்க விஜயா எல்லாம் ஏற்கனவே கொடுத்துட்டேன் என்று சொல்ல பாட்டி எல்லாத்தையும் போட்டுட்டு வா என்று அனுப்பி வைக்க விஜயா மற்றும் மனோஜ் கவரிங் நகைனு கண்டு பிடித்து விட்டால் என்ன செய்வது என்று பதறுகின்றனர்.

இதையடுத்து பார்வதி டிவியுடன் வீட்டுக்கு வர விஜயா அத்தைக்காக நான் வாங்கி கொடுக்கிற கிப்ட் என்று பில்டப் ஆக பேச எல்லோரும் ஆச்சரியத்தில் இருக்கும்போது மனோஜ் நீங்க இப்படி செய்யறது சரியா இல்ல.. என் கடையில் வாங்காமல் வேற எதுவும் கடையில வாங்கி இருக்கீங்க என்று கேள்வி கேட்க விஜயா பார்வதிக்கு தெரிஞ்ச கடை இது அது என்று சமாளிக்க முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் டேய் இது பழசு தாண்டா என்று உண்மையை உளறி விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka Aasai Serial Episode Update
Siragadikka Aasai Serial Episode Update