கோபத்தில் விஜயா, அதிர்ச்சியில் முத்து, மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா என்னுடைய நகையை கொடுக்கிறேன் நீ அந்த நகையை வாங்கிட்டு வா என்று சொல்ல மனோஜ் கடைக்காரருக்கு போன் போட்டு நகை குறித்து கேட்க அவர் விற்ற நகை எல்லாம் டெட் பாடி மாதிரி அதை உருக்கிட்டோம். தங்க கட்டி தான் இருக்கு வேணுமா என்று ஷாக் கொடுக்கிறார்.

அதன் பிறகு மனோஜ் விஜயாவிடம் விஷயத்தை சொன்னதும் அப்படியே உடைந்து போய் மனோஜை கூப்பிட்டு அரை விடுகிறார். முன்ன பின்ன அந்த நகையை கூட பார்த்ததில்லை என்று புலம்ப மனோஜ் நான் போட்டோ எடுத்து வச்சிருக்கேன் என்று சொன்னதும் விஜயா கவரிங் நகை வாங்கி வைத்து சமாளிக்க முடிவெடுக்கிறார்.

மறுபக்கம் முத்து வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சாப்பாட்டில் முடி இருப்பதை பார்த்து இது யாருடைய முடி என்று ஆராய்ச்சி பண்ண அண்ணாமலை தெரியாம விழுந்திருக்கும் எடுத்து போட்டுட்டு சாப்பிடுடா என்று சொல்ல மீனா அது என்னுடைய முடி தான் என்று சொல்கிறார்.

முடி இருந்தா உறவு நீடிக்கும் என்று சொல்ல முத்து இல்லையே எனக்கு பெருசா பிரச்சனை வரும் தானே சொல்லி இருக்காங்க என்று சொன்னதும் ரோகிணி பயப்படுகிறார். அதன் பிறகு விஜயா மற்றும் மனோஜ் வீட்டுக்கு வர ரோகிணி ரெண்டு பேரும் ஒன்னா தான் வெளியே போயிருந்தீங்களா என்று கேட்க மனோஜ் இல்ல நான் ஏஜென்ட் பார்க்க போயிருந்தேன். அம்மா வேற எங்கேயோ போயிருந்தாங்க ரெண்டு பேரும் வாசல்ல தான் பாத்துக்கிட்டோம் என்று பொய் சொல்கிறார்.

பிறகு அண்ணாமலை மீனா கொடுத்த நகையை கொண்டு வந்து கொடு என்று சொல்ல அது எதுக்கு இப்போ என்று விஜயா கேள்வி கேட்கிறார். ரோகிணி அந்த நகையை போட மாட்டேன்னு சபதம் பண்ணி இருக்காங்களே திரும்ப எதுக்கு நகையை கேக்குறாங்க? சபதத்தை வாபஸ் வாங்க போறாங்களா என்று நக்கலாக பேச முத்து உன் அப்பா வீட்டு நகையை ஒன்னும் கேட்கல என்று பதிலடி கொடுக்கிறார்.

விஜயா உன் சபதம் என்னாச்சு என்று மீனாவை நக்கலாக பேச முத்து ஒரு கட்டத்தில் அந்த நகை இருக்கா இல்லையா என்று கேள்வி கேட்க விஜயா அதிர்ச்சி அடைகிறார். மனோஜ் திருத்திருவென முழிக்கிறார். அண்ணாமலை ஏண்டா அப்படி கேக்குற என்று கேட்க இந்த வீட்ல தான் நகை அடிக்கடி காணாமல் போகுமே.. 27 லட்சத்தை தூக்கிட்டு போனவன் ஏதாவது பண்ணிட்டானோ என்று சந்தேகத்தோடு கேட்க மனோஜ் மா அந்த நகையை எடுத்து வந்து அவன் முகத்தில் தூக்கி எறியுங்க என்று சொல்கிறார்.

பிறகு விஜயா நகையை கொண்டு வந்து கொடுக்க மீனா அதை திருப்பித் திருப்பிப் பார்த்ததும் விஜயா உன் நகை அப்படியே தான் இருக்கு என்று சொல்கிறார். அதன் பிறகு முத்து, மீனா நாங்க கொஞ்சம் வெளியில போயிட்டு வரோம் என நகை கடைக்கு கிளம்பி வருகின்றனர்.

ரெட்டை வட செயின் பார்க்கணும் என்று சொல்லி செயினை பார்த்து கடைசியாக ஒரு செயினையும் தேர்வு செய்து பழைய நகை இருக்கு, அதை எடுத்துக்கனும் என்று சொல்லி நகையை கொடுக்க அதை சோதித்துப் பார்க்கும்போது கவரிங் என தெரிய வருகிறது. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Siragadikka Aasai Serial Episode Update
jothika lakshu

Recent Posts

கம்ருதீன் கேட்ட கேள்வி, ஆதிரை சொன்ன பதில், வெளியான பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ.!!

கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…

6 hours ago

இட்லி கடை படத்தின் ஒன்பது நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

6 hours ago

மீனாவுக்கு புது பைக் வாங்கிய முத்து, ஹோட்டலுக்கு திறப்பு விழா நடத்திய ஸ்ருதி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

8 hours ago

திட்டம் போட்டு குழம்பில் உப்பு போட்டா கனி,பிரவீன்.. ஆதிரை கேட்ட கேள்வி, வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

8 hours ago

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி செய்த விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

9 hours ago

தேங்காய்ப்பாலில் இருக்கும் நன்மைகள்..!

தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

1 day ago