சுதாவால் வெடித்த பிரச்சனை,மனோஜை அறைந்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த சுதா செக்கை கொண்டு வந்திருப்பதாக சொல்லி கொடுக்க விஜய்யா உங்களுக்கு பெரிய மனசு சம்பந்தி வாயை பிளந்து கொண்டு பணத்தை வாங்க போக அண்ணாமலை அப்படியே உட்கார்ந்து இருப்பதை பார்த்து விஜயா அப்படியே பேச்சை மாற்றுகிறார்.

பிறகு முத்து வீட்டுக்கு வர சுதா செக்கு கொண்டு வந்திருந்த விஷயம் அறிந்து இங்கே எல்லாருக்கும் கை கால் நல்லா தான் இருக்கு அப்படி இருக்கும்போது நாங்க வீடு கட்ட நீங்க எதுக்கு பணம் தரணும் என்று கேட்க ஸ்ருதி என் அம்மா நல்ல மனசோட தான் கொண்டு வந்தாங்க அதை எதுக்கு வேண்டாம்னு சொல்லணும் என்று கேட்கிறார். பணத்தால் உறவு முடிஞ்சு போயிடும் என்று அண்ணாமலை சொல்ல விஜயா அப்போ என் அப்பா கொடுத்த வீட்டை எதுக்கு நீங்க வாங்கனீங்க என்று கேள்வி கேட்கிறார். அண்ணாமலை உன் அப்பா கட்டாயப்படுத்தி எழுதி வச்சாரு நான் வேணும்னு கேட்கல என்று பதிலடி கொடுக்க மீனா உங்க அப்பா உங்களுக்கு கொடுத்த மாதிரி ஸ்ருதியோட அம்மா அதை ஸ்ருதிக்கு கொடுக்கட்டும் அதை யாரும் வேண்டாம்னு சொல்ல போறது இல்லையே என்று சொல்ல முத்து சரியான பாயிண்ட் மீனா என்று பேசுகிறார்.

உங்க அம்மா கொடுக்கிறதா இருந்தா உனக்கும் ரவிக்கும் கொடுக்கட்டும் அத வச்சு நீங்க வீடு வாங்குங்க, வீடு கட்டுங்க என்ன வேணா பண்ணுங்க அதை எதுக்கு நம்ம வீட்டை கட்ட கொடுக்கணும் என்று பேச விஜயா உன் மனதில் இருக்கிறது புரிந்து போச்சு, ரவியும் ஸ்ருதியும் இந்த வீட்டை விட்டு போகணும் அதனால் உன்னுடைய ஆசை என்று கேட்கிறார்.

உடனே மனோஜ் அம்மா சொல்றது சரிதான் உன் திட்டம் அதுதான் எங்க எல்லாரையும் வீட்டை விட்டு அனுப்பிவிட்டு நீ மட்டும் இந்த வீட்டை ஆளவேண்டும் என்று நினைக்கிற சரியான சுயநலவாதியா இருக்கிறடா என்று பேச ரோகினியும் முத்து பேசுறது எல்லாம் பாத்தா அப்படித்தான் இருக்கு என்று சொல்ல மனோஜ் இந்த வீட்டை நீ மட்டும் ஆட்டைய போடலாம்னு பாக்குறீங்க என்று கேட்க யாருடா சுயநலவாதி என்று கன்னத்தில் பளார் பளார் என அறைகிறார்.

அண்ணாமலை நிறுத்துங்கடா நீங்க எதுக்கு அடிச்சுக்கிட்டு இருக்கீங்க என்று திட்டுகிறார். முத்து மனோஜை பார்த்து நீ தூக்கிட்டு போன பணம் இருந்திருந்தால் அப்பா எதுக்கு இப்படி பணத்துக்காக கஷ்டப்படணும் என பதிலடி கொடுக்கிறார்.

இதை வைத்து ரவிக்கும் ஸ்ருதிக்கும் வாக்குவாதம் ஏற்பட மறுபக்கம் முத்து வீட்டில் நடந்த பிரச்சினையை நினைத்து சரக்கடித்து புலம்புகிறார். பிறகு போதையில் வீட்டுக்கு வர அண்ணாமலை அதை பார்த்து விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Siragadikka Aasai Serial Episode Update
jothika lakshu

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

2 hours ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

2 hours ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

2 hours ago

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

3 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

3 hours ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

3 hours ago