தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி ஸ்ருதியை தூக்கிக்கொண்டு நடக்க பிறகு மீனா எனக்காக நீங்க என்ன பண்ணீங்க என்று கேட்டு கோபப்பட முத்து மீனாவை தூக்கிக்கொண்டு 30 ரவுண்டு சுற்றுவதாக சொல்கிறார். கொஞ்ச நேரத்தில் மனோஜ் ரோகிணி வீட்டுக்கு வந்த ரோகினி மனோஜை பார்க்க மனோஜ் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு சுற்றுகிறார்.
அடுத்ததாக விஜயாவும் அண்ணாமலையும் வீட்டுக்கு வர இதை பார்த்த விஜயா நடு ஹால்ல என்னடா பண்ணிட்டு இருக்கீங்க? யாராச்சும் பார்த்தால் என்ன ஆகிறது என்று திட்டுகிறார். முத்து எங்க பொண்டாட்டி தானே தூக்கிட்டு சுத்துறோம் என்று சொல்ல விஜயா ரூம்ல என்னமோ பண்ணி தொலைய வேண்டியது தானே என்று சொல்ல அதை வைத்து அப்படியே ரூம் பஞ்சாயத்து உருவாகிறது.
மனோஜ் எனக்கு ரூம் வேணும், வெளியில படுத்து கஷ்டப்பட முடியாது நான் பிசினஸ் பண்றேன் அதனால நல்லா ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்ல முத்து வேலை செஞ்சா டயர்ட் ஆக தான் செய்யும் என்று பதிலடி கொடுக்க ரவி இவன் மட்டும்தான் வேலை செய்கிறானா? நானும் முத்துவும் வேலை செய்யலையா என்று கேட்க அப்படியே வாக்குவாதம் பெரிதாகிறது.
இதனால் முத்து எங்களுக்கு ரூம் வேண்டாம் என்று சொல்லிவிட விஜயா இப்பயாவது புத்தி வந்துச்சே என்று நக்கலாக பேச அண்ணாமலை நோட்டுப் பேனா எடுத்துட்டு வரச் சொல்லி எல்லாரும் எவ்வளவு பணம் தருவீங்க என கணக்கெடுக்கிறார்.
மனோஜ் ரோகிணி கை கட்டியதை பார்த்து மூவாயிரம் என்று சொல்ல முத்து மீனாவை கை காட்ட சொல்ல மீனா 10 விரலையும் காட்ட பத்தாயிரம் என சொல்கிறார். பிறகு ரவி நானும் பத்தாயிரம் தரேன் என்று சொன்னதும் மீனா நானும் வேலை செய்கிறேன். அதனால் மாசம் நான் 2000 தரேன் என்று சொல்கிறார். அதைப் பார்த்து ரோகினி நான் 5 ஆயிரம் தரேன் என்று சொல்ல ஸ்ருதி நானும் 10 ஆயிரம் தரேன் என்று சொல்கிறார்.
பிறகு மொட்டை மாடியில் அப்பா எதுக்கு பணம் கேட்கிறார் ஒருவேளை அம்மாவ கூட்டிட்டு தனியா போகப் போறாரோ என மனோஜ் சொல்ல முத்து அவரை அடிக்க ஓடுகிறார். நான் உயிரோடு இருக்க வரைக்கும் அப்பாவ தனியா விடமாட்டேன் என்று சொல்கிறார்.
ரவி பேசாம இந்த வீட்டை விற்று விட்டு ஒரே அபார்ட்மெண்ட்ல நாலு பிளாட் வாங்கி விடலாம் என்று ஐடியா கொடுக்க ரூம் இல்லாத நானே வெளியே போகணும்னு யோசிக்கல நீங்க ஏண்டா இப்படி இருக்கீங்க என்று முத்து திட்டுகிறார். மனோஜ் இப்படியே இதே வீட்டுல இருக்க முடியாது.. கூடிய சீக்கிரம் நான் பிசினஸ்மேன் ஆகிடுவேன் என்று சொல்ல மாமனார் வீட்டு பணத்தை வச்சு பிசினஸ் ஆரம்பிச்சுட்டு எதுக்குடா இந்த பேச்சு என்று முத்து கேட்க உனக்கு பொறாமை.. உன் மாமனார் வீட்ல ஒன்னும் தரலனு நீ இப்படி பேசுற என்று மீனா குடும்பத்தை தரக்குறைவாக பேச முத்து அடிக்க ஓடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…