அண்ணாமலை எடுத்த முடிவு, மனோஜ் அடிக்க போன முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி ஸ்ருதியை தூக்கிக்கொண்டு நடக்க பிறகு மீனா எனக்காக நீங்க என்ன பண்ணீங்க என்று கேட்டு கோபப்பட முத்து மீனாவை தூக்கிக்கொண்டு 30 ரவுண்டு சுற்றுவதாக சொல்கிறார். கொஞ்ச நேரத்தில் மனோஜ் ரோகிணி வீட்டுக்கு வந்த ரோகினி மனோஜை பார்க்க மனோஜ் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு சுற்றுகிறார்.

அடுத்ததாக விஜயாவும் அண்ணாமலையும் வீட்டுக்கு வர இதை பார்த்த விஜயா நடு ஹால்ல என்னடா பண்ணிட்டு இருக்கீங்க? யாராச்சும் பார்த்தால் என்ன ஆகிறது என்று திட்டுகிறார். முத்து எங்க பொண்டாட்டி தானே தூக்கிட்டு சுத்துறோம் என்று சொல்ல விஜயா ரூம்ல என்னமோ பண்ணி தொலைய வேண்டியது தானே என்று சொல்ல அதை வைத்து அப்படியே ரூம் பஞ்சாயத்து உருவாகிறது.

மனோஜ் எனக்கு ரூம் வேணும், வெளியில படுத்து கஷ்டப்பட முடியாது நான் பிசினஸ் பண்றேன் அதனால நல்லா ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்ல முத்து வேலை செஞ்சா டயர்ட் ஆக தான் செய்யும் என்று பதிலடி கொடுக்க ரவி இவன் மட்டும்தான் வேலை செய்கிறானா? நானும் முத்துவும் வேலை செய்யலையா என்று கேட்க அப்படியே வாக்குவாதம் பெரிதாகிறது.

இதனால் முத்து எங்களுக்கு ரூம் வேண்டாம் என்று சொல்லிவிட விஜயா இப்பயாவது புத்தி வந்துச்சே என்று நக்கலாக பேச அண்ணாமலை நோட்டுப் பேனா எடுத்துட்டு வரச் சொல்லி எல்லாரும் எவ்வளவு பணம் தருவீங்க என கணக்கெடுக்கிறார்.

மனோஜ் ரோகிணி கை கட்டியதை பார்த்து மூவாயிரம் என்று சொல்ல முத்து மீனாவை கை காட்ட சொல்ல மீனா 10 விரலையும் காட்ட பத்தாயிரம் என சொல்கிறார். பிறகு ரவி நானும் பத்தாயிரம் தரேன் என்று சொன்னதும் மீனா நானும் வேலை செய்கிறேன். அதனால் மாசம் நான் 2000 தரேன் என்று சொல்கிறார். அதைப் பார்த்து ரோகினி நான் 5 ஆயிரம் தரேன் என்று சொல்ல ஸ்ருதி நானும் 10 ஆயிரம் தரேன் என்று சொல்கிறார்.

பிறகு மொட்டை மாடியில் அப்பா எதுக்கு பணம் கேட்கிறார் ஒருவேளை அம்மாவ கூட்டிட்டு தனியா போகப் போறாரோ என மனோஜ் சொல்ல முத்து அவரை அடிக்க ஓடுகிறார். நான் உயிரோடு இருக்க வரைக்கும் அப்பாவ தனியா விடமாட்டேன் என்று சொல்கிறார்.

ரவி பேசாம இந்த வீட்டை விற்று விட்டு ஒரே அபார்ட்மெண்ட்ல நாலு பிளாட் வாங்கி விடலாம் என்று ஐடியா கொடுக்க ரூம் இல்லாத நானே வெளியே போகணும்னு யோசிக்கல நீங்க ஏண்டா இப்படி இருக்கீங்க என்று முத்து திட்டுகிறார். மனோஜ் இப்படியே இதே வீட்டுல இருக்க முடியாது.. கூடிய சீக்கிரம் நான் பிசினஸ்மேன் ஆகிடுவேன் என்று சொல்ல மாமனார் வீட்டு பணத்தை வச்சு பிசினஸ் ஆரம்பிச்சுட்டு எதுக்குடா இந்த பேச்சு என்று முத்து கேட்க உனக்கு பொறாமை.. உன் மாமனார் வீட்ல ஒன்னும் தரலனு நீ இப்படி பேசுற என்று மீனா குடும்பத்தை தரக்குறைவாக பேச முத்து அடிக்க ஓடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Siragadikka Aasai Serial Episode Update
jothika lakshu

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…

14 hours ago

வெளியில் பேசும் கதைகளை கேட்க எனக்கு டைம் இல்லை.. நடிகர் பொன்னம்பலம் விளக்கம்.!!

நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…

14 hours ago

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்!

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…

14 hours ago

ஆண் பெண் இருவருமே சுதந்திரமான வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள்.. நடிகர் பார்த்திபன்.!!

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…

14 hours ago

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்.

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…

14 hours ago

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…

14 hours ago