ரோகினி செய்த வேலை, ஸ்ருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா சொன்னதைக் கேட்டு முத்து என் ஃப்ரெண்ட்ஸ்க்கு எல்லாருக்கும் அவர் நம்மளோட சேர்ந்து எடுத்துகிட்ட போட்டோ அனுப்பி சென்னைல பார்த்தா சொல்ல சொல்றேன் என்று கூறுகிறார். இதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.

உடனே மறுநாள் காலையில் மலேசியா மாமாவை வீடியோ கால் செய்ய வைத்து குடும்பத்தாரை நம்ப வைக்க மீனா நான் தான் தப்பா புரிஞ்சுட்டு இருக்கேன் என்று சொன்னதும் முத்து எனக்கு இப்போதான் சந்தேகம் அதிகமாக இருக்கு. நீ ரோகினி கிட்ட மலேசியா மாமாவ பார்த்ததும் சொன்னதும் போன் கால் வருதுன்னா என்ன அர்த்தம் அந்த பார்லர் அம்மா கிட்ட ஏதோ வில்லங்கம் இருக்கு என்று சொல்கிறார்.

பிறகு மனோஜ் ரோகினியிடம் என்ன திடீர்னு உங்க மாமா போன் பண்ணி இருக்காரு எவ்வளவு நாளா போன் எதுவுமே இல்லாம தான் இருந்தது என்று கேட்கிறார். கூடிய சீக்கிரம் உங்க அப்பா பெரிய வந்துருவாருன்னு சொல்றாரு அவர் மட்டும் வந்துட்டா எனக்கு அது போதும் மலேசியாவுல ஒரு பெரிய பிரான்ச் ஆரம்பிச்சிடுவேன் என்று சொல்ல ரோகிணி நைசாக எஸ்கேப் ஆகி வெளியே வந்து விடுகிறார்.

பிறகு வித்யாவை பார்க்க வந்த ரோகினி ஒரு வழியா வீட்ல இருக்க எல்லாரையும் மாமா மலேசியாவில் தான் இருக்கிறார் என்று நம்ப வெச்சாச்சு இனிமே மீனா என்ன பண்ணாலும் யாரும் நம்ப மாட்டாங்க என்று சந்தோஷப்படுகிறார். அப்போது உள்ளே வந்த பிரவுன் மணி நீ சொன்னா மாதிரியே பேசி விட்டேனா என்று கேட்பதோடு ஒரே ஒரு அட்வைஸ் ரொம்ப நாளைக்கு இப்படி சொல்லி சமாளிக்க முடியாது. மாட்டிகிட்ட ரொம்ப கஷ்டப்படுவ என்று எச்சரித்து விட்டு செல்ல வித்யா இந்த ஆளு எனக்கு இப்படி சொல்லிட்டு போறான் என்று கேட்க ரோகிணி அதுக்குள்ள மனோஜை முழுசா என் கண்ட்ரோல்ல கொண்டு வரணும், எங்களுக்குள்ள ஒரு புது உறவு வரணும் என சொன்னதும் என்னடி சொல்ற என்று கேட்க எனக்கு மனோஜ்க்கும் ஒரு குழந்தை பிறக்கணும் என்று சொல்கிறார். இந்த வாழ்க்கையை விட்டு தர மாட்டேன் என்று ரோகிணி வில்லத் தனத்தோடு சொல்கிறார்.

அடுத்ததாக வீட்டில் ஸ்ருதி வீடியோ ஒன்றை பார்த்ததாக சொல்லி அந்த வீடியோவில் இருப்பது போலவே ரவியுடன் தன்னை தூக்கிக்கிட்டு நடக்க சொல்லி அடம் பிடிக்கிறார். ரவி இதெல்லாம் பண்ணா தான் காதலா என்னால முடியாது என்று சொல்ல அப்போ உனக்கு என் மேல அவ்வளவு தான் லவ்வா என்று மடக்கி ரவியை தூக்க வைக்கிறார். இதைப் பார்த்த முத்து மீனா என்ன இது என்று கேள்வி கேட்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Siragadikka Aasai Serial Episode Update
jothika lakshu

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…

2 hours ago

வெளியில் பேசும் கதைகளை கேட்க எனக்கு டைம் இல்லை.. நடிகர் பொன்னம்பலம் விளக்கம்.!!

நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…

2 hours ago

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்!

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…

2 hours ago

ஆண் பெண் இருவருமே சுதந்திரமான வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள்.. நடிகர் பார்த்திபன்.!!

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…

2 hours ago

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்.

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…

2 hours ago

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…

2 hours ago