முத்துவிற்கு எதிராக திரும்பிய குடும்பம், அதிர்ச்சியில் மீனா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து குறித்து வந்த வீடியோவால் அண்ணாமலை உடைந்து போய் உட்கார்ந்து இருக்க எல்லோரும் ஆளாளுக்கு ஒரு பக்கம் நின்று கொண்டிருக்க மீனா அமைதியாக வீட்டுக்குள் உன்னுடைய விஜயா வாடி இங்க என்று கூப்பிடுகிறார்.

உன் புருஷன் பண்ண வேலையால இந்த குடும்பமே தலை குனிந்து நிற்குது.இப்போ உனக்கு குளு குளுன்னு இருக்குமே, பொண்டாட்டினா புருசனை திருத்தணும் ஆனால் நீ அவன் இப்படியே இருந்தா தான் நீ நினைக்கிறதெல்லாம் நடக்கும்னு இருக்கிற என்று பேசுகிறார். இனிமே உன்னை பூ கட்டுறவனு சொல்ல மாட்டாங்க குடிகாரன் பொண்டாட்டின்னு தான் சொல்லுவாங்க என்று சொல்ல மீனா உங்களையும் குடிகாரன் அம்மா என்று தானே சொல்லுவாங்க என்று பதில் கொடுக்கிறார்.

கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான் ஆச்சு, ஆனா பொறந்ததிலிருந்து நீங்க தானே வளர்த்தீங்க அவருக்கு நல்ல புத்தி சொல்லி வளர்க்க வேண்டியது தானே என்று கேள்வி கேட்கிறார். நான் வளர்த்த ரெண்டு புள்ளைங்க நல்லபடியா தான் இருக்கு என்று விஜயா சொல்ல அண்ணாமலை போதும் நிறுத்து உன் வாய் தான் எல்லாத்துக்கும் காரணம் என திட்டுகிறார். ‌ அவன் பண்ண தப்பிச்சு மீனா என்ன பண்ணுவா என்று சொல்கிறார்.

பிறகு ஸ்ருதியின் அம்மா போன் பண்ணி நடந்த விஷயத்தை பற்றி அவமானப்படுத்துவது போல பேச ஸ்ருதி போனை வாங்கி இங்கேயே எல்லாரும் அப்செட்ல இருக்காங்க போனை வையுமா என்று திட்டி வைத்து விடுகிறார்.

அதன் பிறகு முத்து வீட்டுக்கு வந்து காரை தூக்கிட்டு போயிட்டாங்க பா என்று சொல்ல விஜயா குடிச்சிட்டு வண்டியை ஓட்டினால் தூக்கிட்டு தான் போவாங்க என்று சொல்கிறார். அண்ணாமலை உன்னால இந்த குடும்ப மனமே போச்சு என்று ஆவேச பட மனோஜ் நீ பண்ண வேலைதான் ஊரே பார்த்து சிரிக்கிறது என்று சொல்ல நான் குடிக்கலடா சொன்னா நம்பு என்று அடிக்க பாய அண்ணாமலை குடிச்சதும் இல்லாம ரவுடித்தனமா பண்ற என்று அடிக்க கை ஓங்கி நிறுத்துகிறார்.

பிறகு மீனாவின் கையை பிடித்துக் கொண்டு சத்தியமா நான் குடிக்கல மீனா என்று சொல்ல மீனாவும் அதை நம்ப மறுக்க நான் குடிக்கல என்று நடந்து காட்ட மனோஜ் குடிச்சிட்டு நடந்துகிட்டு இருக்கான் என்று சொல்கிறார். ரவி ஸ்மெல் வரல என்று சொல்ல ஸ்மெல் வராமல் இருக்க ஏதாவது சாப்பிட்டு இருப்பான் என்று மனோஜ் சொல்கிறார்.

அண்ணாமலை நிம்மதியே இல்லாமல் போச்சு என்னமோ பண்ணுங்க என்று வெளியே சென்று விடுகிறார். ரோகிணி நாங்க வாங்க இருந்த காரை இன்னொருத்தருக்கு கை மாத்தி விட்டு வாங்கிய கமிஷனில் தானே குடிச்சீங்க? இனிமே எங்க விஷயத்துல தலையிடாதீங்க என்று சொல்லி உள்ளே செல்கிறார்.

அதைத் தொடர்ந்து விஜயா 2 பேரும் நீங்களா வெளிய போயிடுங்க என்று சொல்லிவிட்டு செல்கிறார். மீனா கிச்சனுக்குள் சென்றுவிட பின்னாடியே சென்ற முத்து அவரிடம் பேச மீனா முத்துவை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Siragadikka aasai serial episode update
jothika lakshu

Recent Posts

Thaainilam Official Trailer

Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan

13 hours ago

Muttayi Vandi Tamil Video Song

Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

13 hours ago

அழகு என்பது காண்பவரின் கண்களில் உள்ளது – கத்ரினா கைஃபுக்கு ஆதரவாக குஷ்பு!

நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…

13 hours ago

ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன் – நடிகை ராஷ்மிகா மந்தனா

பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…

13 hours ago

திருமண நாள் கொண்டாட்டத்துக்கு ஸ்காட்லாந்தை தேர்வு செய்தது ஏன்? – சூர்யா விளக்கம்

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…

13 hours ago

தங்கையின் குற்றச்சாட்டுக்கு நடிகை அம்பிகா விளக்கம்

நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…

13 hours ago