தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அம்மா ரவியை நிற்க வைத்து விடாமல் பேசிக்கொண்டே இருக்க கிச்சனில் அடுப்பிலிருந்தது தீய தொடங்க ரவி ஸ்ருதியின் அம்மாவை திட்டி அனுப்பிவிட்டு உள்ளே செல்ல ஹோட்டல் ஓனர் நீ நல்லா சமைக்கிற, நல்ல திறமை இருக்கின்றது அதனால் தான் உன்னை வேலைக்கு வச்சிருக்கேன். ஆனா அது அட்வான்டேஜா எடுத்துக்காத, இனிமே இந்த மாதிரி யாராவது வந்து பிரச்சனை பண்ண வேலையை விட்டு தூக்கிடுவேன் என வார்னிங் கொடுக்கிறார்.
அதன் பிறகு ரோகிணி ரூமில் இருக்கும் போது விஜயா அங்கு வந்து மனோஜ்க்கு ஏத்த வேலை இப்பதான் கிடைச்சிருக்குன்னு சொல்றான், ஆனா அவன் நம்ம எல்லாரையும் விட்டுட்டு வெளிநாட்டில் போய் வேலை செய்றதுல எனக்கு விருப்பம் கிடையாது என்று சொல்ல ரோகிணி நானும் அதான் சொல்றேன் வேற நல்ல வேலையா பாத்துக்கலாம் என்று சொல்கிறார்.
யாருக்கும் கிடைக்காத வேலை மனோஜ்க்கு கிடைச்சிருக்கு அதுக்கு பணம் கட்டனும்னா கூட உங்க அப்பா கிட்ட தான் கேட்க போறோம் அதோடு சேர்த்து இன்னும் சில லட்சம் கேட்டினா அவன் சொந்தமாக ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு இங்கேயே நம்மளோடவே இருக்கட்டும். உங்க அப்பாவுக்கு இதெல்லாம் சில்லறை காசு தானே நீ கேட்டா கிடைக்காதா என்று சொல்ல ரோகிணி நான் கேட்கிறேன் என்று கூறுகிறார்.
அதன் பிறகு வித்யாவை சந்தித்து நடந்த விஷயங்களை சொல்லி மனோஜ்க்கு இங்கேயே ஒரு நல்ல வேலை கிடைச்சிட்டா பணம் கேக்குறது நிறுத்திடுவாங்க என்று பிளான் போட்டுக் கொண்டு ஆட்டோவை கூப்பிட முத்துவின் ஆட்டோ வந்து நிற்கிறது. பிறகு ரோகிணி முத்து எதுக்கு ஆட்டோ ஓட்டுவது என்ற சந்தேகப்பட முத்து அதை சமாளிக்க செல்வத்துக்கு போன் பண்ணி காரு வேற ஒருத்தர்கிட்ட இருக்கிற மாதிரி பேசுகிறார்.
இவர்களை டிராப் செய்த பிறகு ஒருவர் முத்துவை பார்த்து என்ன முத்து காரை வித்துட்டதா சொன்னாங்க என்று விசாரிக்க அதை ரோகினி மறைந்திருந்து கேட்டு விடுகிறார். எனக்கு ஒரு சூப்பரான செய்தி கிடைச்சிருக்கு இதை இப்படியே விடக்கூடாது நான் வீடு வரைக்கும் போயிட்டு வரேன் என்று ரோகிணி அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வருகிறார்.
வீட்டுக்கு வந்ததும் மனோஜிடம் முத்து ஆட்டோ ஓட்டும் விஷயத்தை சொல்ல அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் ரோகினி இதையெல்லாம் சொல்ல வேண்டியவங்க கிட்ட சொல்லணும் என்று நேராக விஜயாவிடம் வந்து முத்து காரை வித்து இருக்காரு இப்போ ஆட்டோ ஓட்டுறாரு என பற்ற வைக்கிறார். மாமா வீட்டு பத்திரத்தை வச்சு தானே வாங்கினாரு, அப்படி இருக்கும் போது அதை முத்து எப்படி விற்கலாம் என்று ஏத்தி விட விஜயா அவன் இன்னிக்கு வரட்டும் இருக்கு என ஆவேசப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…
Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…
Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan
Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…