Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்துவிற்கு பதிலடி கொடுத்த ரோகினி.!! பீத்திக் கொள்ளும் விஜயா இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai serial episode update 26-09-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரோகிணி பார்லரில் இருந்து வீட்டுக்கு வர விஜயா உங்க அப்பா கிட்ட பேசுனியா பணம் கிடைச்சிடுச்சா என்று கேட்க ரோகினி எதையோ சொல்லி சமாளிக்க நீ பேசவில்லை என்றால் கூட சொல்லு நான் பேசுறேன் என்று கூறுகிறார்‌. இல்ல ஆன்ட்டி நான் பேசிட்டேன் என்று சொல்ல பணம் கிடைச்சிடுச்சா என்று கேட்க 10 லட்சம் ரூபாய் செக் அனுப்பி இருக்காரு என்று செக்கை எடுத்துக் கொடுக்கிறார்.

இன்னும் ஏழு லட்சம் ரூபாய் என்று கேட்க பத்து லட்சம் ரூபாய் தானே பார்லருக்காக வாங்கி இருந்திங்க அதான் கேட்டு வாங்கினேன் என்று சொல்ல 7 லட்சம் ரூபாய் உங்க கல்யாணத்துக்காக தான் வாங்கி இருந்தேன். அதையும் கேட்டு வாங்கி கொடுமா, இல்லனா இந்த வீட்ல நமக்கு மரியாதை இருக்காது என்று விஜயா நைசாக பேச ரோகிணி திரும்பவும் அவர்கிட்ட கேட்க முடியாது வேற யார்கிட்டயாவது கேட்டு அரேஞ்ச் பண்ணுங்க என்று சொல்ல நீ பேசலனா கூட சொல்லு நானே பேசுறேன் என அதிர்ச்சி கொடுக்க ரோகினி நானே பேசுறேன் என சொல்லி விடுகிறார்.

அதன் பிறகு ரோகிணி கையில் இருக்கும் இரண்டு லட்சம் நகையை வைத்து மூன்று லட்சம் ரூபாய் தயார் செய்துவிட மீதி இரண்டு லட்சத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார். அப்பொழுது பார்லரில் வேலை செய்யும் பெண் ஒருவர் எனக்கு தெரிஞ்ச வட்டிக்காரர் இருக்கார் அவர் இதுக்கு டாக்குமெண்ட் எதுவும் கேட்காமல் பணம் கொடுப்பார் என்று சொல்ல ரோகிணி அங்கே அழைத்து போக சொல்கிறார்.

மறுபக்கம் சிட்டி மற்றும் மீனாவின் தம்பியும் உட்கார்ந்து வட்டி பிசினஸ் பற்றி பேசிக் கொண்டிருக்க அப்போது ரோகிணி வருவதைப் பார்த்து மீனாவின் தம்பி ஒளிந்து கொள்கிறார். பிறகு சிட்டியிடம் இரண்டு லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.

அடுத்து வீட்டுக்கு வந்த ரோகினி எல்லா ரூம் கதவையும் தட்டி அனைவரையும் வெளியே வரவைத்து 17 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்து இனிமே யாரும் ஒரு வார்த்தை பேச கூடாது என முத்துவுக்கு பதிலடி கொடுக்க ஆமா இவங்க எலிசபெத் ராணி, ராஜா இவங்கள பத்தி அவதூறு பரப்பறாங்க என முத்து நக்கல் அடிக்கிறார்.

விஜயா நீங்க கேட்ட பணத்தை மூன்றே நாள்ல ரெடி பண்ணியாச்சு ரோகினி ஒன்னும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த பொண்ணு கிடையாது, அவ அப்பா பெரிய பணக்காரர் என விஜயா பீத்தி கொள்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் இவர்கள் பணத்தை கொடுத்து பத்திரத்தை மீட்க அவர் விஜயாவிடம் இருந்து வாங்கிய வளையலை கொடுக்க விஜயாவின் அடுத்த பித்தலாட்டம் அம்பலமாகிறது.

sirakadikka aasai serial episode update 26-09-23
sirakadikka aasai serial episode update 26-09-23