ரோகினி மற்றும் மனோஜ்க்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம். கோபத்தில் முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிச்சனில் ஸ்ருதி மீனா ரோகிணி என மூவரும் கணவர்களுடன் பிரச்சனை பற்றி பேசுகின்றனர். கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த மாதிரி கல்யாணத்துக்கு பின்னாடி இருப்பதில்ல அப்ப உருகி உருகி காதலிச்சாங்க ஆனா இப்ப நம்மல ஒரு ஆளா கூட மதிக்க மாட்றாங்க என்று ரோகிணி மற்றும் ஸ்ருதி பேசிக்கொள்ள மீனா உங்களுக்கு நான் கல்யாணத்துக்கு முன்னாடி பின்னாடினு ஒரு வாழ்க்கை இருக்கு எனக்கு அப்படி இல்ல என்ன கட்டிக்கிட்டவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்காரு என்று வருத்தப்படுகிறார்.

அதன் பிறகு சுருதி இப்போ மூன்று பேரும் மேல உட்கார்ந்து ஃபீல் பண்ணிட்டு இருப்பாங்க என்று சொல்ல அந்த நேரம் பார்த்து சிரிப்பு சத்தம் கேட்க மீனா வெளியே வந்து பார்த்து மேலே சிரிப்பு சத்தம் கேட்குது என்று சொல்ல ஸ்ருதியும் பார்த்து ஆமாம் என்று அதிர்ச்சி அடைகிறார்.

மறுநாள் காலையில் விஜயா அண்ணாமலை உக்காந்து கொண்டு இருக்க மனோஜ் பாயை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வர இதை பார்த்து விஜயா அதிர்ச்சி அடைகிறார். மனோஜ்க்கும் ரோகிணிக்கும் என்ன பிரச்சனைன்னு தெரியல இவன் ஏன் மேல போனான் என்று புரியாமல் ரோகிணியை கூப்பிட்டு பேச ரோகினி எதுவும் சொல்லாமல் மழுப்ப விஜயா மேலும் கேட்க முடியாமல் வெளிய வந்து விடுகிறார்.

பிறகு மனோஜ் இனிமே என்ன வேலைக்கு போக சொல்லாத எனக்கு ஏத்த வேலையை நானே தேடிப்பேன் நீ சொன்ன ஒரே காரணத்துக்காக தான் நான் ஹோட்டல்ல வெயிட்டராக வேலை பண்ணேன். என்னுடைய செல்ப் ரெஸ்பெக்ட்டை விட்டு கொடுக்குற மாதிரி இனிமே எந்த வேலையும் செய்ய முடியாது என கூறுகிறார். இதனால் ரோகினி மனோஜ் இடையே வாக்குவாதம் உருவாகிறது.

அதன் பிறகு முத்து மொட்டை மாடியில் இருந்து கீழே வர அண்ணாமலை கார் பற்றி விசாரிக்க செட்டில் இருப்பதாக பொய் சொல்கிறார். அதைத்தொடர்ந்து ரூமுக்குள் போன முத்து சத்யா வீடியோவை பார்த்து கடுப்பாகி கோபப்பட இதை பார்த்த மீனா காலையிலேயே எதுக்கு இவ்வளவு கோபமா இருக்காரு என குழப்பம் அடைகிறார். மீனா உள்ளே போனதும் முத்து எழுந்து குளிக்க சென்று விட போன்ல அப்படி என்ன பார்த்தாரு என்று போனை எடுக்க குளிக்க போன முத்து மீனா போனை பாத்துட்டா பிரச்சனையாகிடும் என வெளியே ஓடிவந்து போனில் புடுங்கி எதுக்கு என் போனை எடுக்கிற என்று கோபப்படுகிறார்.

முத்து போனை வைத்து விட்டு திரும்பவும் பாத்ரூமுக்குள் போக மீனா வெளியே வர முத்து திரும்பவும் போன் எடுத்து வைப்பாரா என்று வேகமாக ஓடி வந்து போனை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் செல்கிறார்.

இதைத் தொடர்ந்து ரவி மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வர விஜயா இன்னும் குழப்பமடைகிறார். விஜயா கேட்டுக் கொண்டே இருக்க நேராக மீனாவிடம் வரும் ரவி அண்ணி ஸ்ருதி ரொம்ப வருத்தப்பட்டாளா என்று கேட்க மீனா அப்படிலாம் இல்லை என்று சொல்ல வர இல்ல அவ வருத்தப்பட்டு இருப்பார் நான் என்ன சொன்னாலும் அவ தாங்கிக்க மாட்டா என்று சொல்ல மீனா அப்படியா போய் ரூமுக்குள்ள பாருங்க என்று அனுப்பி வைக்க இங்கு வந்து பார்த்ததும் ஸ்ருதி டான்ஸ் ஆடி ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க ரவி ஷாக் ஆகி நிற்கிறார்.

ஸ்ருதி நான் எந்த டிஸ்டர்பன்ஸ் இல்லாம எட்டு மணி நேரம் நல்லா தூங்குனேன். நீ இருந்தா பாதி பெட்டை நீயே தான் புடிச்சிப்ப, ஆனா இப்போ சந்தோஷமா தூங்கினேன் என்று சொல்கிறார். ரவி நீ கொஞ்சம் கூட மாறவே இல்ல என்று கோபப்படுகிறார். எல்லாத்துக்கும் உங்க அம்மா தான் காரணம் அவங்களை லிமிட்டோட இருக்க சொல்லு என்று சொல்ல நான் போய் எங்க அம்மாவ கொன்னுடவா என்று கேட்டு ஸ்ருதி வாக்குவாதம் செய்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 26-02-24
jothika lakshu

Recent Posts

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

8 hours ago

ஸ்டைலிஷ் உடையில் சமந்தா, போட்டோஸ் இதோ.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை…

15 hours ago

வடசென்னை 2: தனுஷ் சொன்ன தகவல்.!!

வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.…

15 hours ago

டான்ஸ் ஆடுவது குறித்து தமன்னா சொன்ன தகவல்.!

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து…

16 hours ago

முத்து விரித்த வலை,சிக்கினாரா விஜயா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இது…

18 hours ago

சிங்காரம் சொன்ன வார்த்தை, சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

18 hours ago