உண்மையை கண்டுபிடிக்க முத்து போட்ட பிளான். அதிர்ச்சியில் ரோகிணி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் காய்கறிகளை வெட்டி தள்ள ரோகினி நீங்க சூடா தண்ணி கேட்டீங்களா ரூம்ல வச்சிருக்கேன் வாங்க என்று சொல்லி ரூமுக்கு அழைத்துச் செல்கிறார்.

உள்ளே போனதும் தேவையில்லாமல் ஓவர் ஆக்டிங் எதுக்கு பண்ணிக்கிட்டு இருக்கீங்க, உங்களை யார் இதெல்லாம் பண்ண சொன்னது என கோபப்படுகிறார். நான் சொல்ற வரைக்கும் நீங்க ரூமை விட்டு வெளியே வரக்கூடாது படுத்து தூங்குங்க, திரும்பவும் ஏதாவது பண்ணுங்க உங்கள நானே துரத்தி விடுவேன் அதோட படத்துல நடிக்க எல்லாம் வாய்ப்பு கிடைக்காது என மிரட்டுகிறார்.

மறுபக்கம் முத்து அங்குமிங்கும் நடந்து யோசித்துக் கொண்டிருக்க செல்வம் எதற்கு குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துகிட்டு இருக்க என கேட்க அவர பார்த்தா மலேசியா மாமா மாதிரியே தெரியல மந்தைவெளி ஆள் மாதிரி தெரியுது என்னமோ தப்பா இருக்கு என சொல்ல செல்வம் சரக்கு கேளு, மலேசியா சரக்கு இல்லன்னா தெரிஞ்சிடும் போது அந்த ஆளு எந்த ஊரு என்று ஐடியா கொடுக்க முத்து செம ஐடியா அந்த ஆளு தனியா தள்ளிட்டு போய் தான் உண்மையை வாங்கணும் என பிளான் போடுகிறார்.

அதன் பிறகு மறுபெயர்கள் மூவரும் மூன்று பானையில் தனித்தனியாக பொங்கல் வைக்கின்றனர்‌. முத்து பாட்டி பின்னாடி வந்து நின்று பயம் காட்டி ரொம்ப அழகா இருக்க பாட்டி என கொஞ்சம் அண்ணாமலை நீங்க வளர்த்த பையன் தானே நீங்க தானே அவனுக்கு அம்மா மாதிரி அதனாலதான் உங்க கூட விளையாடுறான் என சொல்கிறார்.

அதனாலதான் உன்னை மாதிரி கள்ளம் கபடம் இல்லாமல் நல்ல மனசோட இருக்கான் என்று சொல்ல மனோஜ் அப்ப என்ன நாங்க என்ன கள்ளம் கபடத்தோட வா இருக்கோம் எங்களுக்கு சொல்ல மாட்டீங்களா என்று கேட்க நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க தான். உங்கள சொல்லி தப்பில்லை அங்க வளர்ப்பு அப்படி, ஓடுகாளி பிரதர்ஸ் என கலாய்க்கிறார்.

பிறகு விஜயா ரோகினி உங்க மாமாவ கூட்டிட்டு வாமா என்று சொல்லி அனுப்பி வைக்க உள்ளே போய் ரோகிணி மாமாவை எழுப்பி வெளியே கூட்டிட்டு வர அவருக்கு பொங்கல் வைத்து கொடுக்கின்றனர். பொங்கல் எப்படி இருக்கு என கேட்க ரத்தப் பொரியல் மாதிரியே சாஃப்ட்டா இருக்கு மட்டன் சுக்கா இருந்திருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும் என்று சொல்ல காம்பினேஷன் தப்பா இருக்கே என எல்லோரும் யோசிக்கின்றனர்.

உடனே ரோகினி இடையில் புகுந்து அவர் ஜோக் பண்ணிக்கிட்டு இருக்காரு என சமாளிக்கிறார். பாட்டி எல்லாரும் ஒன்னா இருக்கும் ஒரு போட்டோ எடுத்துக்கணும் என்று ஆசைப்பட முத்து எல்லோரையும் போட்டோ எடுக்க வெளியே கூட்டி வருகிறார்.

எல்லோரும் குடும்பத்தோடு உட்கார்ந்த பிறகு ஸ்ருதி கையில் ஆர்ட் வரவைத்து எல்லோரிடமும் கைகளை பிணைந்து சந்தோஷமாக போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 25-01-24
jothika lakshu

Recent Posts

செம்பருத்தி பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!

செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

5 hours ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்.!!

ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…

9 hours ago

மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து வெளியான தகவல்..!

மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…

10 hours ago

ஐஸ்வர்யா லட்சுமி எடுத்த முடிவால் வருத்தப்படும் ரசிகர்கள்.!!

ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…

11 hours ago

விஜயா முத்துவை வெறுக்க காரணம் என்ன? மீனாவிடம் உண்மையை சொல்லும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…

11 hours ago

மாதவி கேட்ட கேள்வி, சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

11 hours ago