Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயா சொன்ன வார்த்தை,அண்ணாமலை எடுத்த முடிவு,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 22-03-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ஏப்பம் விட முடியாமல் தவிக்க மீனாவை இரண்டு அடி குத்த கூப்பிட மீனா அத்தை எப்படி அடிக்கிறது நான் வரல என சொல்கிறார் பிறகு ரோகிணியை கூப்பிட ரோகிணியும் நா வரல என்று சொல்ல இப்ப என்ன அவங்கள அடிக்கணும், அடிச்சா சரியா போயிடுமில்லையா நான் அடிக்கிறேன் என பாக்சிங்கிற்கு ரெடியாவது போல சுருதி கிளம்பி வர ரவி தடுத்து நிறுத்துகிறார்.

அதெல்லாம் நீ ஒன்னும் போக வேண்டாம் அவங்க பார்த்துப்பாங்க, உன்னால தான் அம்மாவுக்கு இப்படி ஆச்சு என்று திட்ட ஆன்ட்டி நீங்களே சொல்லுங்க என்னால தான் உங்களுக்கு இப்படியா வச்சா என்று ஸ்ருதி கேட்க இரு மா நான் உயிரோடு இருந்தா பதில் சொல்றேன் என விஜயா சொல்கிறார். பிறகு முத்து ஊர்ல ஒரு வைத்தியம் பண்ணுவாங்க பாட்டி சொல்லுவாங்க உலக்கை எடுத்து ஒரே குத்தா குத்தினா எல்லாம் சரியா போயிடும் என்று சொல்ல அதிர்ச்சியில் விஜயாவுக்கு ஏப்பம் வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஸ்ருதியின் அம்மா வீட்டுக்கு வந்து முத்து இந்த பங்ஷனுக்கு வரக்கூடாது பங்க்ஷன் நல்லபடியா நடக்கணும் என்று மறைமுகமாக சொல்ல விஜயா நீங்க சொல்ல வர்றது புரியுது முத்து இந்த பங்க்ஷனுக்கு வரமாட்டான் நான் பாத்துக்குறேன் என வாக்கு கொடுக்கிறார்.

அடுத்ததாக வாக்கிங் சென்று வந்த அண்ணாமலை வீட்டுக்கு வர விஜயா என்னங்க உங்களுக்கு இப்படி வியர்த்திருக்கு உக்காருங்க நான் தண்ணி கொண்டு வரேன் என சொல்கிறார். கசங்கி போன டி-ஷர்ட் போட்டுட்டு போய் இருக்கீங்க சொல்லி இருந்தா நான் அயன் பண்ணி கொடுத்திருப்பேனே என ஐஸ் வைத்து பேச அண்ணாமலை என்ன விஷயம் சொல்லு என்று கேட்கிறார். ஒன்னும் இல்லை என சொன்னதும் ஒன்னும் இல்லையா சரி விடு என உள்ளே செல்ல இருங்க உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் என்று சுற்றி வளைத்து முத்து தாலி பிரித்து போடும் பங்ஷனுக்கு வரக்கூடாது என சொல்கிறார்.

மீனா இதைக் கேட்டு கோபப்பட அண்ணாமலை முத்து வர மாட்டான் என வாக்கு கொடுக்க என்ன மாமா நீங்களும் அவர் வரமாட்டார் என்று சொல்றீங்க என்று மீனா கேள்வி கேட்க விஜயா அதான் அவரு முத்து வரக்கூடாதுன்னு சொல்லிட்டார் இல்ல அப்புறம் என்ன நீ அவரை கேள்வி கேக்குற என்று கோபப்படுகிறார். அண்ணாமலை முத்து வராத பங்ஷனுக்கு நானும் வரமாட்டேன் என அதிர்ச்சி கொடுக்கிறார். மாமாவும் அவனும் வராத பங்ஷனுக்கு நானும் வரமாட்டேன் என மீனா பதில் சொல்கிறார்.

ரோகினி முத்துவால் எல்லா விசேஷத்திலேயும் பிரச்சனை வந்திருக்கு, அதனால அவர் வராம இருக்கிறதுதான் நல்லது நீங்க ஏன் மாமா வர மாட்டேன்னு சொல்றீங்க என்று கேட்க முத்து வராத இடத்துக்கு நானும் வரமாட்டேன் என உறுதியாக சொல்கிறார்.

ஸ்ருதியும் ரவியும் வீட்டுக்கு வர அவர்களிடம் அண்ணாமலை இந்த பங்ஷனுக்கு என்னால வர முடியாது என சொல்கிறார். மீனாவும் நானும் வரமாட்டேன் என்று சொல்ல ஸ்ருதி காரணம் கேட்க உங்க அம்மா அவர் வரக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க அதனால நாங்க வரல என்று சொல்ல ரவி நீங்க எல்லாரும் இருக்கணும்னு நான் ஆசைப்படறேன் முத்து வரலைன்னா இந்த ஃபங்ஷன் வேண்டாம் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் முத்து அண்ணாமலை மீனா என எல்லோரும் ஃபங்ஷனுக்கு வர முடிவு எடுக்க விஜயா எதுவும் செய்ய முடியாமல் திகைத்து நிற்கிறார்.

உடனே விஜயா ஸ்ருதியின் அம்மாவுக்கு போன் போட்டு அங்கு எல்லோரும் பங்க்ஷனுக்கு வரோம் என்று இங்கு நடந்த விஷயத்தை சொல்லி போனை வைக்க சுருதியின் அம்மா அவருடைய கணவரிடம் முத்து பங்ஷனுக்கு வரான் அவனை வச்சு ஒரு பிரச்சனையை உருவாக்கி முத்து இருக்கிற வீட்ல என் பொண்ணு இருக்க மாட்டானு ரவியையும் சுருதியையும் இங்கேயே தங்க வைக்க வேண்டியது தான் என பிளானை சொல்கிறார். இதைக் கேட்டு ஸ்ருதி அப்பாவும் சூப்பர் பிளான் என சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

siragadikka aasai serial episode update 22-03-24
siragadikka aasai serial episode update 22-03-24