தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்ததும் விஜயா ரோகினியின் மாமா வந்ததை பற்றி சந்தோஷமாக பேசி முத்துவிற்கு பதிலடி கொடுக்கிறார்.
அதைத் தொடர்ந்து எல்லோரும் ரூமுக்கு போக மீனாவும் பேக்கை எடுத்துக் கொண்டு ரூமுக்கு செல்ல ஏ மீனா எங்க போற இன்னும் ஊர்ல இருந்த மாதிரியே நினைச்சுட்டு இருக்கியா? அங்கதான் எதுக்கெடுத்தாலும் பாட்டி பாட்டின்னு சொல்லிக்கிட்டு இருந்த, இங்கேயும் அப்படி சொல்ல முடியாது இது என்னுடைய வீடு என்று சொல்ல பத்திரத்தை எடுத்து நெத்தியில் ஒட்டிக்கோங்க எல்லாரும் பார்த்து தெரிஞ்சுக்கட்டும் என கவுண்ட்டர் கொடுக்கிறார் முத்து.
பிறகு மீனாவை சமைக்க சொல்கிறார். எல்லோருக்கும் காபி போட சொல்கிறார். மனோஜ் ரோகினியிடம் ரூமுக்கு போகலாம் என்று சொல்ல முத்து எங்க பாத்தாலும் ரூமையே புடிச்சிக்கிட்டு அழற அப்படி என்னதான்டா வச்சிருக்க என திட்ட விஜயா அவன் ரூமுக்கு அவன் போறான் உனக்கு என்னடா நீ உன் ரூமுக்கு போக வேண்டியது தானே உங்க எல்லாருக்கும் ரூம் இருக்கு நாங்க தான் ரூம் இல்லாம ஹால்ல படுத்து கிடக்கிறோம் என்று சொல்கிறார்.
அண்ணாமலை அதுக்கு தான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் மொட்டை மாடியில ஒரு ரூம் கட்ட போறேன் என்று சொல்ல விஜயா அப்படி ரூம் கட்டிட்டா முத்து மீனாவை வெளியே துரத்த முடியாது என கணக்கு போடுகிறார். இதனால் அதெல்லாம் எதுக்குங்க இப்பதான் ஆளுக்கு ஒரு ரூம் இருக்குல அது போதாதா என சமாளிக்கிறார் விஜயா.
பிறகு பார்வதி வீட்டுக்கு வர விஜயா தனியாக பேச வேண்டும் என்று ஸ்ருதி ரூமுக்கு செல்ல ஸ்ருதி படார் என கதவை சாற்றி விடுகிறார். பிறகு டிரஸ் சேஞ்ச் செய்யப் போவதாக சொல்கிறார்.
அடுத்து ரோகிணி ரூமுக்கு வர மனோஜ் டயர்டா இருக்கு என்று உட்கார்ந்து இருக்க எங்களுக்கெல்லாம் டயார்ட் இல்லையா போய் இன்டர்வியூ அட்டென்ட் பண்ற வேலைய பாரு என ரோகிணி சத்தம் போட மனோஜ் ஓடி வந்து கதவை சாற்றி விடுகிறார்.
மீனா கிட்சனில் இருப்பதால் இந்த ரூம்ல போய் பேசலாம் என்று உள்ளே போக முத்து படுத்திருக்க விஜயா தனியா பேசணும் என்று சொல்ல ஓ அந்த அளவுக்கு ஆயிடுச்சா டாக்டரை பார்த்துடுங்க என்று நக்கல் அடிக்கிறார். நாங்க ரெண்டு பேரும் தனியா பேசணும் என்று சொல்ல ஏன் குடியை கெடுக்க என்ன பண்ணலாம்னு பேச போறீங்களா? ஹால்ல தான் அவ்வளவு இடம் இருக்குல்ல அங்க போய் உக்காந்து பேசுங்க என துரத்தி விடுகிறார்.
பிறகு பார்வதியை மொட்டை மாடிக்கு கூட்டி வந்து பேசுகிறார் விஜயா. ரோகினியோட அப்பா மட்டும் வரட்டும் அவர் கொடுக்கிற பணத்தை வைத்து மூன்று அடுக்குல வீடு கட்டணும் வீட்டிலேயே லிப்ட் வைக்க வேண்டும் என்றெல்லாம் கனவு காண்கிறார் விஜயா.
அடுத்து மீனா காபியோடு வந்து நிற்க என்ன நாங்க பேசுறதை ஒட்டு கேட்கிறியா என்று திட்ட எனக்கு அந்த பழக்க எல்லாம் கிடையாது நீங்க தானே காபி கேட்டீங்க என காபி கொடுத்துவிட்டு கிளம்பி செல்கிறார். இவ கடை வச்சுட்டு இருக்க திமிர்ல பேசுறா, முதல்ல அந்த கடையை காலி பண்ணனும் என கோபப்படுகிறார் விஜயா.
அதைத் தொடர்ந்து ரோகினி வித்யா ரூமுக்கு வந்து ஊரில் நடந்த விஷயங்களை சொல்ல ஒருவேளை உங்க அப்பா வரணும்னு உங்க மாமியார் சொன்னா என்ன பண்ணுவ என்று கேட்க இதே மாதிரி இன்னொரு ஆளை செட்டப் பண்ண வேண்டியதுதான் என சொல்கிறார். இந்த நேரத்தில் மலேசியா மாமாவாக நடித்த கறிக்கடைக்காரர் கறியோடு வித்யா ரூமுக்கு வருகிறார். எனக்கு வாய்ப்பு கிடைத்துவிடுமா என்றெல்லாம் கேட்க வித்யா உனக்கு வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும் நீ யாரு கண்ணுலயும் படக்கூடாது என்று வார்னிங் கொடுத்து அனுப்புகிறார்.
பிறகு ரோகிணியின் ஓனரின் கார் வழியில் ரிப்பேர் ஆகி நிற்க ஆபீஸில் முத்துவின் காரை புக் பண்ணி கொடுக்க முத்து அவரை ரோகிணியின் பார்லரில் டிராப் செய்கிறார். பணத்தை கொடுக்காமல் அவர் சென்று விட முத்து அவரை பின்தொடர்ந்து செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…
Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…
Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan
Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…