வருத்தத்தில் முத்து. விஜயா கொடுத்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. சீரியல் இன்றைய எபிசோட்டில் ஸ்ருதி த்ரூத் ஆர் டார் கேமை ரவி இடமிருந்து தொடங்குகிறார். ரவி ட்ரூத் என சொல்ல இதுக்கு முன்னாடி யாரையாவது காதலித்து இருக்கியா என கேட்கிறார்.

ஸ்கூல் படிக்கும்போது ஒரு பொண்ணு நல்ல கிரஷ் இருந்ததாக சொல்கிறார். அடுத்ததாக மனோஜிடம் கேட்க மனோஜ் டேரை தேர்வு செய்ய பத்து புஷ்-அப் போட சொல்கிறார் ரவி. மனோஜ் 5 புஷ் அப் போட்டு சரிந்து விடுகிறார்.

அதன் பிறகு ரோகினியிடம் நீங்க ஏதாவது பொய் சொல்லி இருக்கீங்களா என்ன கேட்க சொன்னது மட்டுமே பொய் தானே என்பது போல் ரோகிணி யோசிக்கிறார். முத்து சரியான கேள்வி கேட்டடா பார்லர் அம்மா பதில் சொல்லு என சொல்ல சூழ்நிலை தான் ஒரு பொய் சொல்ல காரணமா அமைகிறது.

சூழ்நிலையால் ஒரு பொய் உண்மையாகலாம் ஒரு உண்மை பொய்யாகலாம் என்று கூறுகிறார். மீனா பதில் சொல்ல சொன்னா எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு சொல்லிட்டு இருக்கீங்க ரோகிணி என கொடுக்கிறார். விஜயா அவர் தத்துவத்தோடு பேசுற அதை ஆராய்ச்சி பண்ணி தான் தெரிஞ்சுக்கணும் என்று சொல்ல அண்ணாமலை போய் உக்காந்து ஆராய்ச்சி பண்ணவா? மூஞ்சியும் முகரையும் பாரு என திட்டுகிறார்.

அதன் பிறகு மீனாவிடம் கேட்க மீனா தம்பி தங்கச்சி நல்லா படிச்சு வேலைக்கு போன குடும்பத்தோட நிலமை மாறனும், நம்ம குடும்பத்துல எல்லாரும் இதே போல சந்தோஷமா இருக்கணும் என்று சொல்ல உன்னுடைய ஆசை என்னனு சொல்லுமா என்று அண்ணாமலை கேட்க மீனா என்ன சொல்வது என தெரியாமல் தடுமாற உனக்குனு ஆசை எதுவும் இல்லையா என கேட்க மீனா இல்லை என சொல்கிறார்.

அடுத்து முத்து உன் மனசுல என்ன இருக்கு சொல்லு என்று பாட்டி சொன்னது சின்ன வயசுல ஒரு பொங்கல் அன்னைக்கு தான் அம்மாவும் பாவம் என்னை இங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனாங்க எதுக்கு விட்டுட்டு போனாங்கன்னு அன்னைக்கும் தெரியாது இன்னைக்கும் தெரியாது. நான் எப்பவும் அம்மா அம்மானு அவங்கள பத்தி மட்டும்தான் கேட்டுகிட்டே இருப்பேன்.

எனக்கு ஒன்னுனா அவங்க துடிச்சு போயிடுவாங்க ஒருமுறை கீழே விழுந்துட்டேன் ஓடி வந்து ஊதி ஊதி தூசியெல்லாம் தந்துவிட்டு என்னை தோலில் தூக்கிட்டு ஸ்கூலுக்கு போனாங்க. ஸ்கூல்ல ஒரு பையன் என்னை அடிச்சுட்டான்னு தெரிஞ்சதும் ஸ்கூலுக்கு வந்து அந்த பையனை போட்டு அடிச்சாங்க. எப்பவும் அம்மா மடியில படுத்து தான் தூங்குவேன் ஏன்னா அவங்களுக்கு என் மேல அவ்வளவு பாசம். அவங்க கூட இருக்கிறது எனக்கு சாமி கூட இருக்கிற மாதிரியே இருக்கும் என முத்து பேசுகிறார்.

அதன் பிறகு பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் ஆகிடுச்சு இதுவரைக்கும் என் மனசுல போட்டு வச்சிருந்த ஒரு உண்மையை சொல்லப் போறேன் என்று மனோஜை பார்க்க அண்ணாமலை நெஞ்சை பிடித்து திரும்பி வேண்டாம் என்பது போல சொல்ல முத்து கண்ணீருடன் அங்கிருந்து எழுந்து வந்து விடுகிறார்.

பிறகு முத்து மனசுக்குள்ள எவ்வளவு ஆசை இருந்து இருக்கு ஒரு நாள் கூட ஆனால் நீ அப்படி ஒரு அம்மாவா நடந்தது கிடையாது அவன் மனசுக்குள்ள கற்பனையான விஷயங்களை வைத்திருந்தது தான் சொன்னா என்று திட்ட அவை ஏதோ உளறிட்டு போறான் என விஜயா உதாசீனம் செய்கிறார். அவ சொல்ல வந்த உண்மை எல்லாம் சொல்லி இருந்தா நம்ப சந்தோஷமா வந்தது போல திரும்பி போய் இருக்க முடியாது என கூறுகிறார்.

இவர் ஏதோ உளறிட்டு போறாரு என்று விஜயா எழுந்து ரூமுக்கு சென்று விடுகிறார். பிறகு மீனா நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க மாமா வேண்டாம்னு படுத்துட்டாரு என்ன விஷயம் என்று கேட்க அது தெரிஞ்சு நீ என்ன பண்ண போற அத பத்தி கேட்காத என சொல்லி விடுகிறார்.

பிறகு அத்தனை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா என்று கேட்க அம்மா நான் யாருக்கு தான் பிடிக்காது அம்மாவோட பாசம் வேண்டாம் என்று யார் சொல்லுவா.? எனக்கு அப்பா பாசம் பாட்டி பாசம் எல்லாமே கிடைச்சது ஆனா அம்மா இருந்தும் அம்மா பாசம் கிடைக்கல. நான் ஏதோ பாவம் பண்ணி இருக்கேன் போல என்ன கூறுகிறார்.

பிறகு மீனா தனது மடியில் முத்துவை சாய்த்து கொண்டு உங்களுக்கு நான் பொண்டாட்டியா மட்டும் இல்லாம ஒரு அம்மாவா ஃப்ரண்டா இருப்பேன் என ஆறுதல் கூறுகிறார்.

அடுத்து எல்லோரும் சென்னை வந்து சேர்கின்றனர். முத்து கடையை திறக்கணும் என்று சொல்ல விஜயா வழக்கம்போல ஆமா பெரிய ஷோரூம் இதுல வந்து அப்படியே கியூவ்ல நின்னு லாபம் கொட்ட போது என தரக்குறைவாக செய்து பேசுகிறார். ஊர்ல இருக்கும்போது எவ்வளவு போன் கடைக்கு பேர் மட்டும்தான் விஜய் மலர் அங்காடி ஆனா எல்லாரும் மீனா கடைனு தான் சொல்றாங்க மீனா இந்த ஏரியால அவ்வளவு பாப்புலர் ஆயிட்டா என கூறுகிறார்.

பிறகு உள்ளே வந்ததும் விஜயா உங்க மாமா வந்தது ரொம்ப சந்தோஷம் யார் யாரெல்லாம் என்னென்ன சொன்னாங்க. இப்பவே மலேசியாவில் இருந்து வந்து மனோஜ்க்கு பிரேஸ்லெட் எல்லாம் போட்டு இருக்காரு என சொல்லி முத்துவை வம்பிழுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka aasai serial episode update
jothika lakshu

Recent Posts

மும்பையில் ரூ.30 கோடிக்கு சொத்தை வாங்கிய யாஷ்!

கன்னட திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய நடிகர் யாஷ், ‘கே.ஜி.எஃப்.’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமா முழுவதும்…

9 hours ago

பாக்ஸ் ஆஃபீஸை அதிரவைக்கும் ‘கருப்பு’

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய…

9 hours ago

பரிமளா அண்ட் கோ- திரை விமர்சனம்

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஜெயராம் - ஊர்வசி தம்பதியினர், தங்களது இரண்டு மகள்களுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். எப்போதும்…

10 hours ago

பெத்தி – திரை விமர்சனம்

மலைக் கிராமத்தில் வாழும் இளைஞரான ராம் சரண், திறமையான கிரிக்கெட் வீரராக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். ஆனால் அவரது திறமைக்கு…

10 hours ago

Sigma Style Music Video

Sigma Style Music Video | Sigma (Tamil) | Jason Sanjay | Sundeep Kishan, Faria Abdullah…

16 hours ago

God Mode Video Song

God Mode Video Song | Suriya's Karuppu | RJ Balaji | ‪Sai Abhyankkar‬ | Dream…

16 hours ago