Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்ணீருடன் மீனா உச்சகட்ட கோபத்தில் விஜயா இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 19-07-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா கதவை திறக்காத காரணத்தினால் மீனா பயப்பட முத்து யார் சொன்னா அவங்க வெளியே வருவாங்கன்னு எனக்கு தெரியும் வர வைக்கிறேன் என்று பார்வதிக்கு போன் போடுகிறார்.

அடுத்ததாக மனோஜ், ரோகினி மீண்டும் கதவை தட்ட மனோ எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என்று முத்து மீது நீ பண்ண வேலையால தான் அவங்க அவமானப்பட்டு போய் ரூமுக்குள்ள உக்காந்துட்டு இருக்காங்க என்று பதிலடி கொடுக்க பெரிய நகை.. என்ன 100 சவரன் வச்சுட்டு இருந்தியா என்று கேள்வி கேட்க ஒரு கிராம் ஆக இருந்தாலும் அது என்னுடைய நகை என்று முத்து பதிலடி கொடுக்கிறார்.

அதைத்தொடர்ந்து ஆமா அம்மாவை பத்தி உனக்கு என்ன கவலை அவங்க ஏதாவது பண்ணிக்கிட்டா கூட நீ சந்தோஷம்தான் படுவ என்று சொன்னதும் ரோகினி அவர் சொல்றதும் சரிதானே என்று பேச மீனா தெரியாம பேசாதீங்க என்று பதிலடி கொடுக்கிறாள். இந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் பார்வதி முத்து விஷயத்தை சொன்னதாக சொல்ல மீனா அத்தை புரிஞ்சி வச்சிருக்க ஒரே ஆள் இவர்தான் அதனாலதான் பார்வதி அம்மாவ வீட்டுக்கு வர சொன்னாரு என்று பதிலடி கொடுக்கிறார்.

பிறகு பார்வதி கதவை தட்ட விஜயா கதவைத் திறந்து பார்வதியை உள்ள இழுத்துக் கொள்கிறார். இருவரும் ரொம்ப நேரம் ஆகியும் வெளியே வராமல் இருக்க இங்கே எல்லோரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜயாவிடம் பேசி முடித்ததும் பார்வதி சரி நான் வீட்டுக்கு கிளம்பறேன் என்று சொல்லி வெளிய வந்து விஜயாவின் கையைப் பிடித்து இழுத்து விடுகிறார்.

பிறகு அண்ணாமலையிடம் மீண்டும் விஜயாவை மன்னித்து விடுங்கள் என்று பேச முத்து மன்னிக்கிறதுக்கு அவங்க மன்னிப்பு கேட்கலையே என்று எடுத்துக் கொடுக்க மீனா மேல பழி போட்டதற்காக அவகிட்ட தான் மன்னிப்பு கேட்கணும் என்று அதிர்ச்சி கொடுக்கிறார் அண்ணாமலை.

விஜயா மீனாவை பார்த்து இதற்குத்தான் ஆசைப்பட்டேன் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்குமே என்று கோபப்படுகிறார். மனோஜ் அம்மா மீனா கிட்ட மன்னிப்பு கேட்கணுமா என்று ஆவேசப்பட முத்து தப்பு பண்ணா மன்னிப்பு கேட்கணும் அதுதான் உலக நியதி என பதிலடி கொடுக்கிறார்.

நான் விஜயா இவ கிட்ட இறங்கி வரணுமா? முடியாது என அடம் பிடிக்க அண்ணாமலை மன்னிப்பு கேட்க முடியுமா முடியாதா என்று கேட்க விஜயா பெரிய சீதனத்தை கொண்டு வந்துட்டா என்று பேசி கையில் இருக்கும் வளையலை கழட்டி மீனா முகத்தில் வீசி எறிந்து பொறுக்கிட்டு போடி என்று சொல்கிறார்.

உடம்புல உயிர் இருக்க வரைக்கும் இந்த விஜயா யார்கிட்டயும் இறங்கி போக மாட்டா என்று சொல்ல மீனா கண்ணீருடன் நிற்க முத்து கோபப்பட என்ன தலைய எடுத்துடுவியா வாடா என்று கூப்பிடுகிறார் விஜயா. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

siragadikka aasai serial episode update 19-07-24
siragadikka aasai serial episode update 19-07-24