siragadikka aasai serial episode update 17-06-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா வர சொன்னதால் எல்லோரும் வெளியில் காத்துக் கிடக்க ரவி சாப்பாடு வாங்கி வந்து அம்மா எதுக்கு வர சொன்னாங்க என்று கேட்க முத்து நாங்களும் அதுக்கு தான் காத்துகிட்டு இருக்கோம். க்யூவ்ல நில்லு என்று சொல்கிறார்.
இதையடுத்து விஜயா பரதநாட்டிய கெட்டப்பில் வந்து எல்லோரையும் பயமுறுத்த முத்து நான் போய் பக்கத்துல ஒரு பேய் ஓட்டுற சாமியார் இருக்காரு அவர கூட்டிட்டு வரேன் என்று சொன்ன அண்ணாமலை உங்க அம்மாவையா பேய் பிடிச்சிருக்கு என்று கேட்க முத்து அதுவும் சரிதான் அவங்கள பார்த்தா பேயும் பயந்து ஓடும் என்று கவுண்ட்டர் போடுகிறார்.
பிறகு ஸ்ருதி இந்த டிரஸ்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொல்ல உங்களுக்கு பரதநாட்டியம் எல்லாம் ஆடத் தெரியுமா? அங்கிள் கூட இதை பத்தி சொல்லவே இல்ல என்று கேட்க அவர் எப்படி சொல்லுவாரு? அவர கல்யாணம் பண்ணதிலிருந்து நான் இதையெல்லாம் மறந்திருந்தேன். இந்தச் சலங்கை ஒரு பெட்டிக்குள்ள அடஞ்சி கிடந்தது.
இப்போதான் திரும்பவும் என் காலுக்கு வந்திருக்கு. இனிமே என் திறமையை வச்சு சாதிக்க போறேன். இந்த வீட்டில நான் சும்மா இருந்ததனால எனக்கு மரியாதை இல்லாம போயிடுச்சு கை நிறைய சம்பாதிச்சு எனக்கான மரியாதையை நான் எடுத்துக்க போறேன் என்று டயலாக் பேசுகிறார்.
அதன் பிறகு ரோகிணி ஆன்ட்டி பரதநாட்டியம் கிளாஸ் ஆரம்பிக்கப் போறாங்க என்று சொல்லத் தொடங்க மீனா பார்வதி ஆண்ட்டி வீட்ல தான் கிளாஸ் எடுக்க போறாங்க என்று சொல்லி முடிக்கிறார். ஒருத்தருக்கு 2000-னா கூட 40 பேர் வந்தால் மாதம் 80 ஆயிரம் சம்பாதிப்பேன் என்று விஜயா சொல்கிறார்.
பிறகு டான்ஸ் ஆடி ரோகினியை போட்டோ எடுக்க சொல்கிறார். வீட்டுக்கு வெளியே பரதநாட்டிய சிகாமணி விஜயா என பெரிய போர்ட் வைக்கணும் என்று சொல்கிறார். அடுத்த நாள் காலையில் பார்வதி வீட்டில் கிளாஸ் தொடங்குவதற்காக எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருக்க மீனா விளக்கேற்றுவதற்கு ரெடி பண்ணுகிறார்.
பிறகு பார்வதி விளக்கேற்றி தொடங்கலாமா என்று கேட்க முக்கியமான விஐபி வரவேண்டும் என்று விஜயா சொன்னதும் சுருதியின் அம்மா சுதா வந்து இறங்குகிறார். விஜயா அவரை ஆரத்தி எடுத்து உள்ளே கூப்பிட்டு அவங்க கையால் விளக்கை ஏற்ற வைக்கிறார். அதன் பிறகு ஸ்ருதியை கூப்பிட்டு விளக்கேற்ற சொல்ல ரோகிணி ஐடியா கொடுத்தது நான் தான் என்ன கூப்பிடல என்று மனோஜிடம் புலம்புகிறார்.
அடுத்ததாக ரோகிணியை கூப்பிட்டு விளக்கேற்ற சொல்லி கடைசியாக பார்வதியை கூப்பிட மீனா வருத்தப்பட அண்ணாமலை மீனாவை எதுக்கு கூப்பிடல என்று கோபப்பட விஜயா விளக்குல 5 முகம் தான் இருக்கு.. அஞ்சு பேர் தான் ஏத்த முடியும் என்று சொல்ல மீனா பரவால்ல மாமா இவங்க எல்லாரும் விளக்கேத்த எண்ணெய், திரி போட்டது நான் தான். அதுவே எனக்கு சந்தோஷம் என்று பதிலடி கொடுக்கிறார். முத்து அப்போ மீனாதான் அம்மாவோட கிளாஸ் தொடங்கி வைத்திருக்கா. அவ எண்ணெய்யும் திரியும் போடலன்னா இவங்க விளக்கேத்தி இருக்க முடியுமா? என்று பல்பு கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Oru Paarvai Paarthavanae - Video Song | OTHERS | Aditya Madhavan, Gouri | Abin Hariharan…
பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…
Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…